நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 6
புதன் கிழமை
பதிவின்
முதல் பகுதி
பதினைந்து மாதங்களுக்குப் பிறகு காலை 10:30 மணியளவில் பெரிய கோயில் தரிசனம்..
பங்குனி 27 (10/4) திங்கட்கிழமை.. அன்றைக்குப் பஞ்சமி.. ஸ்ரீ வராஹி அம்மனை தரிசனம் செய்து நேர்ச்சை ஒன்றினை நிறைவேற்றினோம்..
திருக்கோயில் வளாகத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்த நடை விரிப்புகள் வெயிலின் தாக்கத்தால் அப்போதே உலர்ந்து கொண்டிருந்தன..
சில நுணுக்கங்களை படம் எடுக்க முயன்றேன்.. இயலவில்லை..
இயன்ற அளவில் நான் எடுத்த படங்கள் அடுத்த சில பதிவுகளில் தொடர்ந்து வர இருக்கின்றன..
ஆனை கொண்ட அரவு கயிலாயச் சாரலில் கிடப்பதாக ஞானசம்பந்தர் திருவாக்கு.. அதுவே இங்கு பெருஞ்சிற்பம்..
கதை காட்டும் கற்பலகைகள்..
திருக்கோயில் எழுப்பிய பணியில் தலைமைப் பெருஞ்சிற்பி
வீரசோழ குஞ்சர மல்லன் என்பவருக்கு ராஜராஜ பெருந்தச்சன் என்ற பட்டமும், அவருடைய உதவியாளர்களான மதுராந்தகனுக்கு நித்த விநோத பெருந்தச்சன் என்ற பட்டமும், இலத்தி சடையனுக்கு கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற பட்டமும் வழங்கப்பட்டு அந்த விவரம் கல்லிலும் வடித்து வைக்கப்பட்டது..
ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்
இது ராஜராஜ சோழர் சூட்டிய பெயர்..
பதிவின் பகுதி 2
படங்களும் காணொளியும்
நன்றி
Swami fine arts studios
தஞ்சை
நிகழும் ஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை நான்காம் நாள் (17/4) திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது..
எதிர்வரும்
சித்திரை 18 திங்களன்று (மே 1)
அதிகாலையில் யதாஸ்தானத்தில் இருந்து
ஸ்ரீ அல்லியங்கோதை அம்பிகையுடன் தஞ்சை விடங்கராகிய
ஸ்ரீ தியாகேசப் பெருமான்
திருத்தேருக்கு எழுந்தருள்கின்றார்..
காலைப் பொழுதில் ராஜவீதிகளில்
திருத்தேரோட்டம்..
கீழுள்ள காணொளி
முதல்நாள் (திங்கள்) புறப்பாடு..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
படங்களை பெரிதாக்கி ரசித்தேன். ரொம்ப நாள் ஆச்சு, பெரிய கோவில் பார்த்து..
பதிலளிநீக்குநேரம் கிடைக்கும் போது வாருங்களேன்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
இப்போது கோபுரம் உச்சிக்கு ஏற அனுமதிக்கிறார்களா? அனுமதித்த காலத்திலேயே சென்று பார்க்கவில்லை நான்!
பதிலளிநீக்குதிருப்பணி காலத்தில் தான் அது முடியும்..
நீக்குஎனக்கு அப்படியான வாய்ப்பு கிடைத்தது இல்லை..
மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஸ்ரீ வாராகி அம்மன் கோவில் படங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. அங்குள்ள சிற்பங்களின் படங்களையும், விபரங்களையும் தெரிந்து கொண்டேன்.
தஞ்சை பெரிய கோவில் தரிசனமும் பெற்று கொண்டேன். அமாவாசை அன்று சிவபெருமான் தரிசனமும் கண் குளிர கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// அமாவாசை அன்று சிவபெருமான் தரிசனமும் கண் குளிர கிடைத்தது.. //
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
படங்கள் அருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குநலம் வாழ்க..
பெரியகோவில் தரிசனங்கள் பெற்றுக் கொண்டோம். படங்கள் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
படங்கள் எல்லாம் மிக அழகு. ரசித்துப் பார்த்தேன். கோயிலுக்கு இரு முறை சென்றிருக்கிறேன். பல வருடங்கள் ஆகிவிட்டன
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குநலம் வாழ்க..
தஞ்சை பெரிய கோவிலை நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குசித்திரை திருவிழா படங்கள், காணொளி எல்லாம் நன்றாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.
படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறன.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
தஞ்சைக்கோயில் பார்த்தே சில வருடங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் வர முடியுமா என்பதே சந்தேகம். படங்களும் விவரணைகளும் நன்றாக உள்ளன. நான் ஆரம்பத்திலிருந்து படிக்காமல் பின்னாலிருந்து படித்து வருவதால் கொஞ்சம் குழப்பம். :) இப்போச் சரியாகி விட்டது.
பதிலளிநீக்கு