செவ்வாய், ஏப்ரல் 18, 2023

பால்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 5
 செவ்வாய்க்கிழமை


பால்.. 

முதுகெலும்பு உடைய விலங்குகளின் (ஊர்வன தவிர்த்து) சிறப்பு..

சாதுவான விலங்குகளிடம்  - அவற்றின் குட்டிகளுக்காக சுரக்கும்  பாலைக் கறந்து எடுக்கும் வழக்கம் இருக்கின்றது என்றாலும் பாரதத்தின் நிலை வேறு..

விலங்குகள் பலவானாலும் பசுவையே முதலிடத்தில் வைத்தது பாரதம்.. அதன் பாலையே இறைவனுக்கு அர்ப்பணித்து தானும் அருந்தியது.. 

பாலில் ஆரோக்கியம் இருப்பதை உணர்ந்தது.. பசுக்களையும் கன்றுகளையும் காளைகளையும் மந்தையில் பராமரித்து வாழ்ந்தது.. 


பசு பாதுகாப்பு புனிதம் என்ற கலாச்சாரத்துடன் வாழ்ந்ததால் தான் -
இந்நாட்டிற்குள் வந்து புகுந்த மாற்றார் பசுக்களையும் அதன் இனத்தையும் அவற்றின் மீது அன்புடையோர் கண் முன்னே வதைத்து மகிழ்ந்ததனர்.. 


ஆநிரையே செல்வம் என்பது இந்நாட்டில்.. போர்களுக்கு முன்பாக ஆநிரைகளைக் கவர்வதுவும் அதனை மீட்பதுவும் வரலாற்றில் காணப்படுகின்றது..

போர் தொடங்கும் முன்பாக ஆநிரைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதும் முக்கியமானதாக இருந்தது..


நன்றாகக் காய்ச்சிய பாலில் உறை ஊற்றுவதன் மூலம் தயிரைப் பெறலாம்.  தயிரைக் கடைந்தால் மோரும் கொழுப்புச் சத்து மிக்க வெண்ணெயும், கிடைக்கின்றன. 

வெண்ணெயைக் காய்ச்சி முறிப்பதன் மூலமாக நறுமணமும் சுவையும் மிக்க நெய் கிடைக்கின்றது..

கிராமங்களில் பேசிக் கொள்வார்கள் - அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை.. என்று..

அஞ்சு என்பது பசுவிடம் இருந்து பெறும் பாலும் மற்றவையும்..

இவற்றில் மோர், நெய் இரண்டுக்கும் அடுத்த நிலை இல்லை என்பதே!..

இந்த அஞ்சு என்பது தேவாரம் முழுவதும் பேசப்படுவதாகும்..

ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்.. - 
என்பார் திருநாவுக்கரசர்..


பசும் பாலைப் போலவே எருமைப் பாலும் என்றாலும் 
எருமைப் பாலில் நீர் 83%.. 
பசும் பாலில் நீர் 88% - 90% 
எருமைப் பாலில் கொழுப்பு 8%.
பசும் பாலில் கொழுப்பு 4%..

எனினும்
எருமைப்பாலை விட பசும்பாலில் பத்து சதவீதம் புரதச்சத்து அதிகம்.

எனவே தான் எருமைப் பாலை சற்று ஒதுக்கி வைத்தனர்..

தற்காலத்து அவ்வாறெல்லாம் முடியாது..


பொதுவாக ஒரு லிட்டர் பாலில் முப்பத்து ஐந்து கிராம் வரை புரதம் உள்ளது..

ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமானது கால்சியம். கால்சியம்  எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான ஆரோக்கியத்தையும் வலுவையும் கொடுக்கிறது.. கால்சியம் பாலில் நிறையவே உள்ளது..


பாலில் இயற்கையாக
கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம்,  
கார்போஹைட்ரேட் , கொழுப்பு, லாக்டின் (புரதம்), குளுக்கோஸ், காலக்டாஸ், லாக்டோஸ்  முதலானவற்றுடன் 
வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் நரம்பு மண்டலத்திற்கு அத்தியாவசியமானது. 

இன்றைக்கு
நவீன விஞ்ஞானம் பாலில் ரசாயனங்களின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் வழியே பணம் கொழிக்கும் பலவற்றைப்  பெறுவதற்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளது... 

இன்று நமக்குக் கிடைப்பது பால் தானா என்ற சந்தேகம் அனைவரிடத்தும் உள்ளது..

பாரம்பரிய பசுவின் பால்  உடலை வலிமை அடைய செய்கிறது என்றும் கலப்பினப்  பசுவின் பால் நமது உடலுக்கு ஒவ்வாதவைகளை  உண்டாக்குகின்றது என்பதும் மக்களிடையே உள்ள பரவலான கருத்து..


இந்நிலையில் -
கலப்பின பசுக்கள் A1 என்றும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டுப் பசுக்கள் A2 என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன..

இது தொடர்பாக -

A1 பாலானது கலப்பின மாடுகளிலிருந்தும், A2 பாலனது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டுப் பசுக்களிடமிருந்தும் பெறப்படுகின்றன. 
A2 பசுக்களின் பால் அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல்  பெற்றிருப்பதாகவும்
கலப்பினப் பசுக்களின் பாலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளதாகவும் அறியப்படுகிறது..
- என்று, விக்கி சொல்கின்றது.

பால் நவீன முறையில் Powder  ஆகின்றது.. 

Powder மீண்டும் அதே நவீன முறையில் தண்ணீருடன் சேர்ந்து பால் என்று சந்தைக்கு வருகின்றது..

Spray drying is a major process of water removal and particle formation in milk powder production. 

Thanks to Vikki

இப்படியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்..

இதற்குமேல் நாம் தான் சிந்தித்துக் கொள்ள வேண்டும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

16 கருத்துகள்:

  1. இனிமேல் என்ன சிந்தித்து என்ன பயன்?  கிடைப்ப்பதைதான் வாங்க முடியும்?  நம் கையில் என்ன இருக்கிறது?!  சொந்தமாக மாடு வைத்துக் கொள்ளக் கூட முடியாத வாழ்க்கைச் சூழலில் வாழ்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்தமாக மாடு வைத்தாலும் அது வெளியே கழிவுகளை மேய்ந்துவிட்டு நமக்குத் தரும் பாலில் உபயோகம் உண்டா?

      நீக்கு
    2. @ ஸ்ரீராம்

      // சொந்தமாக மாடு வைத்துக் கொள்ளக் கூட முடியாத வாழ்க்கைச் சூழலில் வாழ்கிறோம்!.. //

      இருபது / முப்பதாண்டுகளுக்கி முன்பு சென்னை மாநகராட்சிக்குள் மாடு வலர்க்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது என்று நினைவு..

      இனி இப்படியான நினைவுகளில் வாழ்ந்து கொள்ள வேண்டியது தான்..

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

      நீக்கு
    3. @ நெல்லை

      // வெளியே கழிவுகளை மேய்ந்துவிட்டு நமக்குத் தரும் பாலில் உபயோகம் உண்டா?.. //

      அப்படியான பசுவிடம் கறக்க வேனடியதே இல்லை..

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

      நீக்கு
  2. பால் liquid புலால் என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வீகன் உணவில் பால் பொருட்கள் கிடையாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்கிறவன் சொல்லி விட்டுப் போகட்டும்..

      பால் நமக்குப் புனிதம்..

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

      நீக்கு
  3. எத்தனையோ முறைகள் சொல்லி இருந்தாலும் இன்று வரை பால் எங்களுக்குப் புதிதாகவே கிடைத்து வருகிறது. நடுவில் அவ்வப்போது பால்காரர்களால் பிரச்னை வந்தாலும் அதிக பக்ஷமாக ஒரு மாதத்தில் தானே சரியாகிடும். கல்யாணம் ஆவதற்கு முன்னர் மதுரையில் இருந்தவரை தெருவுக்கு 3, 4 பால் டிப்போக்கள் இருக்கும். அந்தத் தெருவில் கறக்கும் மாடுகளில் பால் இந்த டிப்போக்களுக்கு வரும். டோக்கன் மாதம் பிறந்ததுமே கொடுத்துடுவாங்க. அந்த டோக்கனைக் கிழித்துக் கொடுத்துவிட்டுப் பாலை வாங்கிப்போம். குறைந்த பக்ஷமாக 200 மில்லி லிட்டரில் இருந்து டோக்கன் ஆரம்பித்தாலும் 100 கூடச் சிலர் வாங்குவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்
      மேல் விவரமான கருத்திற்கும் நன்றியக்கா...

      நீக்கு
  4. எருமை மாட்டைப் பார்த்திருந்தாலும் அதன் பாலை வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்துவார்கள் என்பது கல்யாணம் ஆகி வந்த பின்னரே தெரியும். முதலில் எருமைப் பால் என்பதால் பாலாகக் குடிக்கப் பிடிக்காது. பின்னர் அதில் கொஞ்சம் போல் டிகாக்ஷன் சேர்த்துக் காஃபி என்னும் பெயரில் குடிக்க ஆரம்பித்தது நாளாவட்டத்தில் பழக்கமாகவும் மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது அப்படி யெல்லாம் கிடையாது.. எருமையும் பசுவும் ஒன்றுதான்..

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றியக்கா...

      நீக்கு
  5. பால் பற்றிய செய்திகள் அருமை.
    பசும்பால நல்லதுதான். நிறைய பேர் பால அருந்த மாட்டார்கள்.
    நேற்று படித்த , பார்த்த செய்தி, திருவண்ணாமலையில் ஒரு பசு தன் கன்றுக்கு கூட கொடுக்காமல் தானே தன் பாலை குடித்து விடுகிறது. சத்து குறைபாடு காரணமாக இப்படி செய்கிறது என்கிறார் கால்நடை மருத்துவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த செய்தியை தினமலரில் பார்த்தேன்.. படிக்க வில்லை..

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

      நீக்கு
  6. பால் பற்றிய தகவல்கள் அருமை.

    இப்போது வாழ்க்கை முறையே மாறிவிட்டதே! கிடைப்பதைத்தானே வாங்க முடியும். அதுவும் மாடுகள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலோர் மாடுகளை வெளியில் மேய விட்டுவிடுகிறார்கள். அவைகண்டவற்றையும் திங்கின்றன. அது எப்படி நல்ல பசும்பாலாகக் கிடைக்கும்? எருமை உட்பட.

    இப்போது பலரும் பால் அருந்துவதைத் தவிர்த்து வருகிறார்கள் பால மற்றும் பால் சார்ந்த பொருட்களையும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. // இப்போது பலரும் பால் அருந்துவதைத் தவிர்த்து வருகிறார்கள்
    பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும்..//

    நல்ல பால் கிடைக்கவில்லை எனில் என்னதான் செய்வது?..

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..