ஞாயிறு, பிப்ரவரி 20, 2022

தரிசனம் 6

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த வெள்ளிக் கிழமையன்று  
தஞ்சைக்கு அருகிலுள்ள நீடாமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் தரிசனம்..

இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கோயில்.. செங்கல் கட்டுமானம் எனினும் கருங்கல் மேல் தளம்..

மாரியம்மன் கோயில் - என, வழங்கப்பட்டாலும்  பிள்ளையார் தான் மூலவர்.. 

ஸ்ரீ விநாயகர்

ஸ்ரீ பேச்சியம்மன்

தென் கிழக்கு மூலையில் ஸ்ரீ பேச்சியம்மன் - சுதை வடிவில் ..

ஸ்ரீ விஸ்வநாதர்

விநாயகருக்கு வலப்புறமாக தனி சந்நிதியில் ஸ்ரீ விசாலாக்ஷி உடனாகிய ஸ்ரீ காசி விஸ்வநாதர்..  இடப்புறமாக ஸ்ரீ மாரியம்மன்..

ஸ்ரீ மஹா மாரியம்மன்


அம்மனுக்கு எதிர் புறத்தில் சிங்க வாகனம் கொடி மரம்..


வடகிழக்கில் ஸ்ரீ வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் உடனாகிய ஸ்ரீ மதுரை வீரன்..
மதுரை வீர ஸ்வாமியும் சுதை வடிவில்.. 


வேம்பு வழிபாடு

கோயிலின் கருவறைக்குப் பின்னால் ஸ்ரீ வேம்பும் நாகரும்.. வேம்பில் அம்மன் திருமுகம் பாதிக்கப்பட்டுள்ளது..

கோயிலுக்குச் சென்றது உச்சிப் பொழுதில்.. அபிஷேக வேளை.. 

தரிசனத்துக்குக் காத்திருந்த போது - அம்மன் அளித்த தமிழ்ப் பூக்களையும் கோயிலில் எடுக்கப்பட்ட படங்களையும் இன்றைய பதிவில் இணைத்துள்ளேன்...




விரவும், கோயிலின் வாசலை ஒளிப்பதிவு செய்வதற்கு மறந்து விட்டேன்..

இந்தப் பாடல் கிராமத்தின் ஆற்றங்கரை மெட்டு.. இதனை ஒலி வடிவாக்கி தங்களுக்கு  வழங்குவது எப்படி - என எனக்குத் தெரியவில்லை.. இப்போதைக்கு படித்துக் கொள்ளுங்கள்..


வஞ்சகம் வல்வினை
வழி தடுத்தாள் அன்பின்
வழி வாசல் வாழவே
வரம் தனைக் கொடுத்தாள்..

தஞ்சம் என்ற அடியவர்
தழைத்திடத் தான் தஞ்சை 
மாரி என்றே திருத்
தாள் மலர் பதித்தாள்..

கொஞ்சிடும் குழவியின்
குறை தீர்க்க வந்தாள்
குன்றாத நகையுடன்
குண நலம் தந்தாள்..

மஞ்சளுடன் குங்குமம்
மங்கலம் அளித்தாள்
மலரடி நினைத்தோர் தம்
மனதிலே சிரித்தாள்..

அஞ்சிடும் அடியவர்
அவதிகள் எல்லாம் 
அனல் பட்ட மெழுகாக
ஆக்கியே வைத்தாள்..

அமுதென அழகெனத்
தமிழ் தனைத் தந்தாள் 
தங்கத் தமிழமுது தானென
தாயாகி நின்றாள்..
*
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

15 கருத்துகள்:

  1. நீடாமங்கலம்.  பிரசவத்துக்காக என் அக்கா தஞ்சைக்கு எங்கள் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தபோது அக்கா மகள் அவசரமாகப் பிறந்த ஊர்!  மாரியம்மனின் தரிசனம் கிடைத்தது.  பாமாலை வெகு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      அழகானதொரு தகவலைத் தந்து வியப்பில் ஆழ்த்தி விட்டீர்கள்..

      இதில் முக்கிய விஷ்யம் என்னவென்றால் நீடாமங்கலத்தில் நிகழும் பிரசவம் எல்லாம் சுகப் பிரசவம் என்பார்கள்.. அதற்குக் காரணம் யமுனா பாய் எனும் மராத்திய ராணி.. சோகம் ததும்பும் சம்பவம் அது..

      அந்தத் தகவலும் நமது தளத்தில் வெளியாக இருக்கின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பாமாலை சூட்டி அம்மனை வழிபட்டது சிறப்பு. நினைத்த மாத்திரத்தில் இப்படிப் பாமாலை சூட்டும் அருள் கிடைத்திருப்பதும் அவள் அருளாலே! நீடாமங்கலம் போனதில்லைனு நினைக்கிறேன். இன்றைய அருமையான தரிசனத்துக்கும் பாடல் பதிவுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      ஒவ்வொரு சமயத்தில் சந்நிதி வாசலில் குழந்தையாகி விடுகின்றது மனம்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  3. இதுவரை பார்த்திராத கோயில். அவசியம் செல்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      சோழர்களுடனும் பின்னாளில் மராத்திய மன்னர்களுடனும் தொடர்புடைய ஊர் நீடாமங்கலம்.. இங்கே சத்திரம் அரச மாளிகை காணத் தக்கது..அவசியம் வாருங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. உங்களின் பாமாலை மிக மிக அருமை. அம்மனின் அருள் பெற்றிருக்கிறீர்கள்!

    அறியாத கோயில் பற்றிய தகவல்களும் படங்களும் சிறப்பு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  5. பூமாலையை விட உங்கள் பாமாலையை இறைவி மகிழ்வோடு ஏற்றிருப்பார்!!

    பிள்ளையான் சன்னதியில் கம்பியில் சாற்றுவதற்கான மாலைகள் போலும்!

    திருஆரூர் சென்ற போது ரயில் நீடாமங்கலம் சென்று திருவாரூர் சென்றது அப்படி அறிந்த ஊர்.

    படங்கள் அருமை, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      ஆமாம்.. பிள்ளையார் சந்நிதிக் கம்பியில் வைக்கப்பட்டுள்ளவை அவருக்கான மாலைகளே..

      ஓராசிரியர் பள்ளி மாதிரி ஒரே அர்ச்சகர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.. உபயதாரர்களும் கூடவே உதவி செய்கின்றார்கள்..

      நன்றி சகோ..

      நீக்கு
  6. நீடாமங்கலம் - வலைப்பதிவர் ஒருவர் முன்பு எழுதிக் கொண்டிருந்தவர் - இந்த ஊர்காரர்... உங்களுக்கும் நினைவில் இருக்கலாம்!

    தகவல்களும் படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..