திங்கள், டிசம்பர் 20, 2021

மங்கல மார்கழி 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-

 மனத்துக் கண் மாசிலன் ஆதல் 
அனைத்தறன் ஆகுல நீர பிற .. (34)

-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை..
திருப்பாடல் - 5


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்..
*

-: ஆழ்வார் திருமொழி :-


பாயுநீ ரரங்கந் தன்னுள்
பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும்
மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்
அடியரோர்க் ககல லாமே?.. (891)
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*

-: சிவ தரிசனம் :-

தேவாரத் தேனமுதம்
திருத்தலம் - திருக்கடவூர்


இறைவன்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்
ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தி


அம்பிகை
ஸ்ரீ அபிராமவல்லி
ஸ்ரீ பாலாம்பிகை

தல விருட்சம்
 முல்லை (பிஞ்சிலம்)
தீர்த்தம் -  அமிர்த தீர்த்தம்

அட்ட வீரத் தலங்களுள்
காலனைக் காய்ந்த தலம்..
அபிராமி அந்தாதி பிறந்த தலம்..

பெரும்புலர் காலை மூழ்கிப்
பித்தர்க்குப்பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு
ஆர்வத்தையுள்ளே வைத்து
விரும்பிநல்விளக்குத் தூபம்
விதியினா லிடவல்லார்க்குக்
கரும்பினிற் கட்டிபோல் வார்
கடவூர்வீ ரட்ட னாரே..
(4/31)
-: ஸ்ரீ  அப்பர் பெருமான் :-
*

-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் எண் - 5


பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே..
*
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 9 - 10


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்..

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
 கோதில் குலத்தரன் தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்..
-: ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஒம்
ஃஃஃ

9 கருத்துகள்:

  1. ஒப்பில்லாத பெருமானைச் சரணடைவோம்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய தரிசனம் நன்று ஜி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய ஐந்தாம் நாள் திருப்பாவை பாசுரங்களைப் பாடி,ஆயர்பாடியின் கண்ணனை தொழுது மகிழ்வுற்றேன். திருவெம்பாவை பாசுரங்கள் இனிமை. திருவாதிரை நன்னாளில் ஆதிகடவூர் ஐயன் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும், அன்னை ஸ்ரீஅபிராமவல்லியையும்,போற்றி வணங்கி கொண்டேன். அழகான தெய்வீக படங்களை காணத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. "முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். ரொம்பப் பிடித்ததும் கூட.

    பதிலளிநீக்கு
  5. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. பாடல்களும் இன்றைய தரிசனமும் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஐந்தாம் நாள் சிறப்பான தரிசனம்.

    பதிலளிநீக்கு
  8. மாயனை,மன்னு வடமதுரை மைந்தனை --"தாமோதரன்" திருவடிகளே சரணம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..