ஞாயிறு, டிசம்பர் 19, 2021

மங்கல மார்கழி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-

நீரின் றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.. (20)
*

-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை..
திருப்பாடல் - 4


ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்ற திர்ந்து
தாழாதே சார்ங்கம்  உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
*

-: ஆழ்வார் திருமொழி :-


குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை
அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ
எஞ்செய்கே னுலகத் தீரே.. (890)
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*

-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - சாய்க்காடு


இறைவன்
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ குயிலின் இன்மொழியாள்

தீர்த்தம்
காவிரி, ஐராவதத் தீர்த்தம்
தல விருட்சம் - கோரைப்புல்


வேலவன் வில்லேந்திய
திருக்கோலம்..
ஐராவதம் வழிபட்ட தலம்..
பூம்புகாருக்கு அருகிலுள்ள திருக்கோயில்..
*

கானிரிய வேழம் உரித்தார் போலும்
காவிரிப்பூம் பட்டினத்து உள்ளார் போலும்
வானிய வருபுரமூன்று எரித்தார் போலும்
வடகயிலை மலையதுதம் இருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா உடையார் போலும்
உயர்தோணி புரத்துறையும ஒருவர் போலும்
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட்டில் இனிதுறையுஞ் செல்வர் தாமே..(6/82)
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-
*

-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருப்பள்ளியெழுச்சி 
திருப்பாடல் எண் - 4


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே..
*
-: திருவெம்பாவை :-
திருப்பாடல்கள் 7 - 8

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்..

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்..
-: ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஒம்
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.
    சாய்க்காடு முருகனை மறக்கவே முடியாது வில் ஏந்திய அழகிய முருகன்.
    பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் மனதுக்குள் அருளைச் சுரக்கச் செய்கின்றன. சாய்க்காடு இறைவனை தரிசித்துக் கொண்டேன். வில்லேந்திய அழகிய முருகனையும் மனங்குளிரக் வணங்கிக் கொண்டேன். இந்த கோவிலெல்லாம் நேரில் கண்டதில்லை. அதற்குரிய காலங்கள் எப்போதோ? ஆனால், இங்கு தரிசித்த திருப்தி அடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. சாயக்காடு சென்றதே இல்லை. பெரும்பாலும் மாயவரம் அருகிலுள்ள ஊர்களும் சென்றதில்லை. இனி சமயம் வாய்க்குமானு சந்தேகம். பயணம் ஒத்துக்கணுமே! :)))))

    பதிலளிநீக்கு
  4. சாயாவனம் நாவல் படிச்சிருக்கேன். காடுகள்/மரங்கள் அழிக்கப்பட்டது மனதில் வேதனை ஏற்படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா சாயாவனம் - நா கந்தசாமி - படிச்சிருக்கீங்களா! ஆமாம் காடுகள் மரங்கள் அழிந்தது பத்தி சொல்லப்பட்ட நாவல் என்று தெரிந்து நான் ரிவியூ பார்த்து டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். கொஞ்சம் வாசித்து தெரிந்தது. மனம் கஷ்டப்படத் தொடங்கியது எனவே முழுவதும் இன்னும் வாசிக்கவில்லை.

      கீதா

      நீக்கு
    2. சா./எஸ் கந்தசாமி - தெரியாமல் நா வந்துவிட்டது..

      கீதா

      நீக்கு
    3. 69 ஆம் வருடம் இல்லையா ரொம்ப வருடங்கள் முன்னே இப்படி...தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதியில் நடப்பதாக உள்ள கதை. அப்போதே மரம் அழிப்பது பற்றி ...

      கீதா

      நீக்கு
    4. புத்தகம் முதல் பதிப்பு "வாசகர் வட்டம்" வெளியீடாக வந்ததால் அப்போது சென்னை தி.நகரில் சித்தப்பாவுடன் இருந்த நான் புத்தகம் வந்ததுமே படித்துவிட்டேன். இதே சா.கந்தசாமி தான் சித்தப்பா பற்றிய டாகுமென்ட்ரியும் எடுத்திருக்கிறார். பொதிகையில் வந்தப்போப் பார்த்தோம். பின்னர் போட்டப்போ பார்க்க முடியலை.

      நீக்கு
  5. மிக அருமையான தரிசனம். நல்லதொரு பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!! கருத்தைக் காணோம். :( மறுபடியுமா?

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பதிவு. தரிசனம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வேலவன் வில்லுடன் அழகான தரிசனம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..