செவ்வாய், டிசம்பர் 21, 2021

மங்கல மார்கழி 6


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

-: குறளமுதம் :-
 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை .. (36)
*

-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை..
திருப்பாடல் - 6


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. 6
*

-: ஆழ்வார் திருமொழி :-


பணிவினால் மனம தொன்றிப்
பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத்
தொல்லைநெஞ்சே நீ சொல்லாய்
அணியனார் செம்பொனாய
அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை
மனத்தினால் நினைக்க லாமே?.. 892
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*

-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - திருவெண்காடு


இறைவன்
ஸ்ரீ திருவெண்காட்டு நாதர்
அம்பிகை
ஸ்ரீ ப்ரம்மவித்யாம்பிகை

தல விருட்சம் - வில்வம், கொன்றை, ஆல்..
தீர்த்தம் - சூர்ய, சந்திர, அக்னி தீர்த்தங்கள்..

வெள்ளை யானையாகிய ஐராவதம் வழிபட்ட திருத்தலம்..


இறைவன்
அகோரமூர்த்தியாகத்
திருத்தோற்றம் கொண்டு
மருத்துவாசுரனை
அழித்த திருத்தலம்..

நவக்ரகங்களுள் வித்யாகாரகனாகிய புதன்
சிவபூஜை நிகழ்த்தி நல்லருள் பெற்ற திருத்தலம்..

பட்டினத்தடிகள் பிறந்த திருத்தலம்..
*
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
காணார் பொறியழலாய் நின்றான் தன்னை
உள்ளானை யொன்றலா உருவி னானை
உலகுக் கொருவிளக்காய் நின்றான் தன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும்
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங்கொ டுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே..(6/35)
-: ஸ்ரீ  அப்பர் பெருமான் :-
*

-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் எண் - 6


பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. .
*
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 11 - 12


மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.. 12 
-: ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஒம்
ஃஃஃ

5 கருத்துகள்:

  1. இன்றைய நாள் தரிசனம் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  2. திருவெண்காட்டுநாதரையும் ப்ரம்மவித்யாம்பிகையையும் சரணடைவோம்.

    பதிலளிநீக்கு
  3. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 656 ஆவது திருநாமம்.

    ஹரி என்றால் பற்றுக்களை அறுப்பவர்;

    துயரங்களையும்/பாபங்களையும் அபகரிப்பவர் அவற்றிலிருந்து ஜீவர்களை விடுவித்து,மோட்சம் என்னும் பிறவாநிலையைத் தந்தருள்பவர்....

    ஸ்ரீ ஹரி திருவடிகளே சரணம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..