வியாழன், ஜூலை 30, 2020

பால் கொழுக்கட்டை

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

கோலக் குழலாட
கொஞ்சும் மணி ஆட
குழந்தை கணேசன்
குதித்தாடி விட்டு தாயிடம்
வருகிறான்.

அம்மா!..

வா.. கணேசு!..


தூக்கம் வருது..ம்மா!..

பால் குடிச்சுட்டு படு.. ராசா!..


போ..ம்மா.. எப்ப பார்த்தாலும்
பால் தானா!...

வேற என்ன வேணும் கண்ணு!?..

பாயாசம் வேணும்..
பால் கொழுக்கட்டை வேணும்!..

பால் கொழுக்கட்டையா!..
அதுக்கு இன்னும் நாள் இருக்கே!..
***
காணொளிகள் தங்களை
கவர்ந்திருக்கும் என
நம்புகிறேன்..

நலமெலாம் வாழ்க..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. "குட்டி யானைக்கும் கொம்பு முளைச்சுதாம்...   பட்டணமெல்லாம் சந்தோஷம்..." என்று என் அம்மா ஒரு கதையைச் சொல்லி முடிப்பது மட்டும் நினைவில் இருக்கிறது.  சாதம் ஊட்டி விடும்போது சொல்வார்.  'அடிக்கரும்பு..   ஆனைக்குட்டி' என்று பாத்திரத்தை வழித்து வாயில் ஊட்டுவார்...  எங்களுக்கு மட்டுமல்ல, என் மகன்களுக்கும், சகோதரி குழந்தைகளுக்கும் கூட!  காணொளிகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      அன்பான மலரும் நினைவைச் சொல்லி பழைய நினைவினில் மூழ்கச் செய்து விட்டீர்கள்...

      நலமெலாம் வாழ்க...

      நீக்கு
    2. http://sivamgss.blogspot.com/2008/09/blog-post_4319.html இதைப் படிச்சிருக்கலாம் ஏற்கெனவே. ஏனெனில் 2,3 முறைகள் பகிர்ந்துள்ளேன்.

      நீக்கு
  2. குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சதாம், பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்! இதான் அது! இந்தக் கடைசிக் கட்டி மாம்பழம்னு கடைசி வாய்க்குப் பாத்திரத்தை வழித்துக் கொடுப்பதைப் பற்றி நானும் ஓர் பதிவு போட்டிருக்கேன். சில முறைகள் பகிர்ந்துள்ளேன். இங்கே ஆனைக்குட்டிங்களைப் பார்த்ததும் காலை நேரம் மனதில் மகிழ்ச்சி வந்து உள்ளது. ஆனை, ரயில், மேலே பறக்கும் விமானம் இதெல்லாம் எத்தனை வயதானாலும் ரசிக்கத் தடை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வாய்க்குப் பாத்திரத்தை வழித்துக் கொடுப்பது....

      அது பால் சோறாக இருந்தால் அதுவே அமிர்தம்...

      ஆனை, ரயில், விமானம், கொட்டும் மழை இதையெல்லாம் பார்க்கப் பார்க்க அலுப்பதேயில்லை..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
    2. ஆனை ரயில், விமான, கொட்டும் மழை பார்க்கப்........

      துரை அண்ணா ஹைஃபைவ்!! ஆமாம் ஆமாம் அலுக்கவே அலுக்காது.

      கூடவே நம்ம எல்லா செல்லங்களையும் சேர்த்துக்கலாம். (பூஸாரை சொல்லலைனா அப்புறம் எப்பவாச்சும் இது கண்ணுல பட்டு பாய்ந்து வந்திருவார்!!_) ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. துரை பால் கொழுக்கட்டை பற்றித் தான் ஏதோ சொல்லப் போகிறார்னு நினைச்சேன். கடைசியில் பார்த்தால் நம்ம நண்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு வேறாகத் தான் நினைத்திருந்தேன்... விநாயக சதுர்த்தி அருகில் வருவதால் பால் கொழுக்கட்டை என்றாகியது...

      மகிழ்ச்சி.. நலமெலாம் வாழ்க...

      நீக்கு
  4. ஹா.. ஹா.. எப்ப பார்த்தாலும் பால்தானா ?

    அதானே மோர் கொடுக்கலாமே...
    காணொளிகள் இரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  5. காணொளிகள் மறுபடியும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  6. ஹை ஆனைக்குட்டி!! பாருங்க அம்மாகிட்ட வரும் போதும் ஒரே ஆட்டம் தான். குறும்பு புல்லெல்லாம் பிய்த்து பிய்த்து...ரசிக்கிறேன் ரசிக்கிறேன் துரை அண்ணா. அந்த புள்ளைய பாத்தா தூக்கம் வர புள்ளை மாதிரியா இருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அம்மா யானையின் அடியில் படுக்குதே குட்டி ஹையோ என்ன அழகு என்ன அழகு. கொஞ்சணும்போல இருக்கு. சமத்துக் குட்டி.

    ஆஹா பால் கொழுக்கட்டை வேனுமா? செஞ்சு கொடுத்துட்டா போச்சு!! கணேசுவுக்கு இல்லாததா!!

    ரொம்ப ரொம்ப ரசித்தேன் துரை அண்ணா காணொளிகளும் உங்கள் ரசனையான வரிகளையும்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராமும் கீதாக்காவும் சொன்னதுதான் நம் வீட்டிலும் என் மகனுக்கு நான் பாடியது. மாமியாரிடம் கற்றது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. காணொளிகள் நன்றாக இருக்கிறது.

    சின்ன குழந்தைகளுக்கு யானை பாடல் பாடுவோம், யானை காட்டி மகிழ்வோம், நமக்கும் யானையைப் பார்ப்பது என்றால் மகிழ்ச்சிதான்.
    அதுவும் குட்டி யானையை பார்ப்பது மேலும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. குட்டி யானைக்கு பல் முளைத்து விட்டால் கொழுகட்டை செய்து கொடுக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  11. ஆனைக்குட்டி காணொளி ரசித்தேன்.

    பாலைவன யானைகள் என்றொரு டாகுமெண்டரி படத்தை சில வாரங்கள் முன்பு பார்த்தேன். அவை, கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர்கள் தொடர்ந்து நடந்து புறப்பட்ட இடத்திற்கு வருகின்றன. இடையில் சில இடங்களில் தங்கிவிடுகின்றன (பாலைவனச் சோலை போன்று உணவு கிடைக்கும் இடங்களில்). இதனை தலைமை ஏற்பது ஒரு பெண் யானை. இந்த, கிட்டத்தட்ட 8-10 மாத பயணத்தில் குட்டி யானை பிறக்கிறது, ஆனால் பிறந்த சில மணி நேரங்களிலேயே பயணத்தைத் தொடர்கிறது, தலைமை ஏற்கும் வயதான யானை மூப்பினால் இறந்த உடன், அதற்கு அடுத்த பெண் யானை தலைமை ஏற்கிறது என்றெல்லாம் காட்டினார்கள். பாலைவனத்தில் நடக்குது நடக்குது..நடந்துக்கிட்டே இருக்குது.

    சின்ன யானைகளின் சந்தோஷம், இடையில் வரும் தண்ணீர் பரப்பு. அதில் குதித்து கும்மாளமிடுகின்றன.

    குட்டியானையைப் பார்க்க சந்தோஷமாக இருக்கும். ஆனால் அவற்றை எப்படி பாதுகாப்பாக வழி நடத்தி யானைக்கூட்டம் செல்கிறது, சிங்கங்கள் அடர்ந்த காடுகளில் எவ்வளவு விழிப்புணர்வோடு குழந்தைகளைக் காத்துக்கொண்டு செல்கிறது என்பதையெல்லாம் பார்க்க ரொம்பவே வியப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. காணொளிகள் இரண்டுமே சிறப்பு. மிகவும் ரசித்தேன். அதிலும் தூங்கும் குட்டி யானை! ரொம்பவே அழகு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..