நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆடி மாதத்தின்
மூன்றாவது வெள்ளிக்கிழமை..
ஸ்ரீவரலக்ஷ்மி விரத நன்னாள்
நமஸ்தேஸ்து மஹாமாயே
ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..
அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்..
***
இன்றைய பதிவில்
மூன்றாவது வெள்ளிக்கிழமை..
ஸ்ரீவரலக்ஷ்மி விரத நன்னாள்
நமஸ்தேஸ்து மஹாமாயே
ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..
அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்..
***
இன்றைய பதிவில்
திருமூலர் அருளிச் செய்த
திருமந்திரத்தில்
அம்பிகையின் புகழ் பாடும்
அம்பிகையின் புகழ் பாடும்
நான்காம் தந்திரத் திருப்பாடல்கள்..
ஸ்ரீ துர்காம்பிகை - வேதாரண்யம்.. |
தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க் கன்னல் வாளி வில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே..
ஸ்ரீ அபிராமவல்லி |
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறியேனே..
சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாக பாசாங்குசம்
மால் அங்கயன் அறியாத வடிவுக்கு
மேலங்கமாய் நின்ற மெல்லியளாளே..
ஆன வராகி முகத்தி பதத்தினில்
ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந்தார் உளத்து ஓங்குமே..
நலமெலாம் தருவாய்
தாயே பராசக்தி..
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ
நலமெலாம் தருவாய்
தாயே பராசக்தி..
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ
நல்லதொரு பகிர்வு. அம்பிகை அனைவருக்கும் கருணை மழை பொழியட்டும். அவள் அருளால் மக்கள் துன்பம் நீங்கி வாழட்டும். பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குசிறப்பு தரிசனம்...
பதிலளிநீக்குஇன்றைய தரிசனம் நன்று.
பதிலளிநீக்குஉங்களது பதிவில் உள்ள அன்னையர் அனைவரையும் பலமுறை பார்த்துள்ளேன். இன்று உங்களால் அவர்களை தரிசிக்கும் பேறு பெற்றேன்.
பதிலளிநீக்குஅம்பிகை நேரில் வந்து அன்பினை அள்ளித் தரட்டும். அகிலத்தைக் காக்கட்டும்.
பதிலளிநீக்குஇன்றைய சிறப்பு தரிசனங்கள் மிகவும் அருமை.
பதிலளிநீக்குதரிசனம் செய்து மகிழ்ந்தேன்.
அனைவருக்கும் அன்னை அருள வேண்டும்.
தரிசனம் சிறப்பு. நலமே விளைந்திடட்டும்
பதிலளிநீக்குதுளசிதரன்
கீதா
சிறப்பான தரிசனம். நலமே விளையட்டும்.
பதிலளிநீக்கு