திங்கள், ஜனவரி 13, 2020

மார்கழி தரிசனம் 28

தமிழமுதம்

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு..(994) 
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 28


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத 
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் - தஞ்சாவூர் 
குலந்தான் எத்தனையுயும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய்நீள் முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1031)
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
108 சிவாலயம் - பாபநாசம் - தஞ்சை

மேற்கு நோக்கிய திருக்கோயில்..
மூலவர் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமி..
தென்புறம் ஸ்ரீ ஹனுமந்த லிங்கம்..

திருச்சுற்றில் 106 லிங்கங்கள்..
ஆக 108 லிங்கங்கள்...

ஸ்ரீ ராமநாத ஸ்வாமி - 108 சிவாலயம் 


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் 
நற்றுணை ஆவது நம சிவாயவே..(4/11)
-: திருநாவுக்கரசர் :-


பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரனஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நம சிவாயவே..(4/11)
-: திருநாவுக்கரசர் :- 





இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..(4/11)
-: திருநாவுக்கரசர் :-

தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில்
பாபநாசத்துக்கு முன்பாக இத்திருக்கோயில்...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
பாபநாசம் செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும்
108 சிவாலயத்தின் அருகில் நின்று செல்கின்றன.. 
***
திருவாசகத்தேன்


ஸ்ரீ நந்தியம்பெருமானுடன் அம்மையப்பன் 
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீபாவியேனுடைய 
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவது இனியே..
-: மாணிக்கவாசகர் :-
***

தேவி தரிசனம்

ஸ்ரீ மங்களாம்பிகா - கூகூர்
(நாச்சியார் கோயில் அருகில்)
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீதுஅன்னமாம்
கயிலாயருக்கு அன்றுஇமவான் அளித்த கனங்குழையே!..(99)
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

9 கருத்துகள்:

  1. 108 சிவாலயத்தைத் தரிசிக்கும் பேறு கிட்டி இருக்கு. கூகூர் போனதில்லை. நாச்சியார் கோயில் வழியாகவே லட்சம் முறை போய் வந்தாச்சு! அருமையான தரிசனத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      கருத்துரைக்கு நன்றியக்கா...

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. அருமையான தரிசனம் ...

    பதிலளிநீக்கு
  4. இன்றைய தரிசனம் மிக அருமை.108 சிவாலயம் அடிக்கடி போய் இருக்கிறோம் மாயவரத்தில் இருக்கும் போது.

    பதிலளிநீக்கு
  5. 108 சிவாலயம் - உங்களால் எங்களுக்கும் தரிசனம்.

    கோவையில் 108 பிள்ளையார் என ஒரு கோவில் உண்டு - ரேஸ் கோர்ஸ் பகுதியில். அது நினைவுக்கு வந்தது.

    தொடரட்டும் பக்திப் பரவசம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..