தமிழமுதம்
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை..(411)
***
அருளமுதம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 29
சிற்றம்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேள்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!..
வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்!..
***
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தருளி தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..
ஆண்டாள் திருவடிகள் போற்றி..
ஆழ்வார் தம் திருவடிகள் போற்றி!..
ஆருயிர்க் குழாம் போற்றி..
அரங்கன் தன் திருவடிகள் போற்றி.. போற்றி!..
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
தஞ்சையம்பதி
தஞ்சையம்பதி
நமசிவாயவே ஞானமுங் கல்வியும்
நமசிவாயவே நானறி இச்சையும்
நமசிவாயவே நாநவின் றேத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமே..(5/90)
-: திருநாவுக்கரசர் :-
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே..(7/29)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
திருவாசகத்தேன்
ஸ்ரீ வீதி விடங்கர் - அல்லியங்கோதை - தஞ்சை
|
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவ பெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
***
தேவி தரிசனம்
சூலங் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாகபா சாங்குசம்
மாலங் கயன் அறியாத வடிவுக்கு
மேலங்க மாய் நின்ற மெல்லியலாளே!..
-: திருமூலர் :-
ஸ்ரீ கோடியம்மன் - தஞ்சை |
ஸ்ரீ மகமாயி - புன்னைநல்லூர் தஞ்சை |
நாலாங் கரமுள நாகபா சாங்குசம்
மாலங் கயன் அறியாத வடிவுக்கு
மேலங்க மாய் நின்ற மெல்லியலாளே!..
-: திருமூலர் :-
ஸ்ரீ நிசும்பசூதனி - வடபத்ரகாளி தஞ்சை |
கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!..(100)
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே!..
-: அபிராமிபட்டர் :-
இந்த அளவில் மார்கழி தரிசனப் பதிவுகள்
நிறைவடைகின்றன..
வருகின்ற மார்கழியில்
மேலும் சிறப்புடன் இப்பணியைச் செய்தற்கு
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...
இந்த அளவில் மார்கழி தரிசனப் பதிவுகள்
நிறைவடைகின்றன..
வருகின்ற மார்கழியில்
மேலும் சிறப்புடன் இப்பணியைச் செய்தற்கு
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...
மார்கழி மாதம் முழுதும் உடன் வந்த
அன்பு நெஞ்சங்களுக்கு என்றென்றும் நன்றி..
ஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர் - சுந்தரர் - மாணிக்கவாசகர் |
அனைவருக்கும்
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!..
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்!..
-: சேக்கிழார் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
ரசித்தேன், தரிசித்தேன். இந்த இரண்டு பெருமாளும் தஞ்சையில் எந்த இடத்தில கோயில் கொண்டுள்ளனர்?
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசர் திருக்கோயில் இரண்டு இடங்களில்...
தஞ்சை கோட்டைக்குள் ஐயங்கடைத் தெருவை அடுத்துள்ளது ஒன்று.. நாலுகால் மண்டபம் ஆஞ்சநேயர் பிரசித்தி இங்கு தான்...
மற்றொன்று மானம்புச் சாவடி எனப்படும் மகர்நோன்புச் சாவடியில்... சௌராஷ்டிர சபையின் பரிபாலனம்...
தரிசனம் செய்து சில ஆண்டுகள் ஆகின்றன.. மேல் விவரம் அறிந்து சொல்கிறேன்..
மகிழ்ச்சி.. நன்றி...
வருகின்ற மார்கழியில் இதை விடச் சிறப்பாக....
பதிலளிநீக்குஆஹா... இறை அருள் கூடட்டும்.
எல்லாருக்கும் இறையருள் கூடட்டும்...
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
தரிசித்தேன் ஜி
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அனைத்து தரிசனங்களும் ஒரு சேரக் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி. முதல் படம் அழகோ அழகு! எல்லோரையும் கோயில்களில் நேரிலும் தரிசனம் செய்திருக்கேன். மிக அருமையான தெய்வீகம் ததும்பும் பதிவு.
பதிலளிநீக்குஅனைத்து தெய்வங்களையும் ஒரு சேரக் கண்டு பாடல்களை அனுபவித்தேன். ஆழ்வார்கள் வாழ, அடியார்கள் வாழ, இறைவன் நற்கருணை கொள்ளட்டும்.
பதிலளிநீக்குதஞ்சைக் கோவில்கள் மிக அருமை. அதுவும் பெரிய கோயில் உடையார் தரிசனம்
மிக நன்று.
அபிராமி அந்தாதி யின் அத்தனை பாடல்களையும் மீண்டும் மனனம் செய்யக் கொடுத்தது.
இன்னோரு வரம். மீண்டும் அடுத்த மார்கழியில் சந்திக்க இறை அருள் மிக வேண்டும்.
இன்று தரிசனம் வெகு சிறப்பு...
பதிலளிநீக்குஇன்றைய தரிசனம் மிகவும் சிறப்பாக அமைந்து விட்டது.
பதிலளிநீக்குஅடுத்த ஆண்டும் சிறப்பாக மார்கழி தரிசனம் பதிவை கொடுக்க இறைவன்
அருள்வார்.
ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் அலங்காரம் ரொம்பவே அழகு. இன்றைக்கு தேர்ந்தெடுத்து தந்த படங்கள் அனைத்துமே சிறப்பு.
பதிலளிநீக்குதொடரட்டும் பதிவுகள்.