ஞாயிறு, ஜனவரி 12, 2020

மார்கழி தரிசனம் 27

தமிழமுதம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி..(226) 
***

இன்று 
திவ்ய தேசங்களில் 
கூடாரவல்லி வைபவம்

அருளமுதம்

.சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் 
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தனைப் 
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடைஉடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ பார்த்தசாரதி 
மானேய் கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ்திரு வேங்கடமா மலைஎன்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1029) 
-: திருமங்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
திருமயிலை

ஸ்ரீ கபாலீஸ்வரர் 
துஞ்சலும் துஞ்சலில்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகமற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே..(3/22)
-: திருஞானசம்பந்தர் :- 



வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த நினவர்க்கு
  அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே..(3/22)
-: திருஞானசம்பந்தர் :- 
***
திருவாசகத்தேன்


உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப்பழுத்தென் குடிமுழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் துணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவ பெருமானே
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே..
-: மாணிக்கவாசகர் :- 
***

தேவி தரிசனம்


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என்அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்குங்கும முலையும் முலைமேல் முத்தாரமுமே!..(85)
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. கற்பகவல்லியின் பொற்பாதங்களா தரிசனத்துக்கு இன்று? தெய்வ தரிசனங்களைத் தொடர்ந்து படங்கள் வாயிலாக அளிப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நல்வரவு..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றியக்கா...

      நீக்கு
  2. கபாலீஸ்வரர் தரிசனத்தோடு கூடாரவல்லித் திருநாளில் இனிய பெண்களோடு அதனினும் இனிய தமிழையும் சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
  3. கற்பகவல்லி நின்
    பொற்பதங்கள் பிடித்தேன்..
    நற்கதி அருள்வாய் அம்மா...

    அன்பின் ஸ்ரீராம்..
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடல்தான் என் மனதில் வந்தது. அஞ்சன மையிடும்அம்பிகை அனைவரையும் காக்கட்டும்

      நீக்கு
  4. கற்பகவல்லியின் பொற்பதங்களை பிடித்துக் கொள்வோம் அவள் அனைவரையும் காப்பாள்.
    அருமையான தரிசனம் இன்று.

    பதிலளிநீக்கு
  5. இன்றைய தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  6. அன்பு துரை எங்களூர் இன்று இங்கே மங்கலமாய்க் கற்பகத்தாய் மயிலாகத்
    தவம் இருந்து மணாளனை அடைந்த கற்பகவல்லி.
    அவளைச் சரணடைந்தவர்களை அவள் என்றும்
    கைவிட்டதில்லை.

    அவளுடன் அபிராமி, அல்லிக்கேணி பார்த்தசாரதி எல்லாம் அற்புத
    தரிசனங்கள். புண்ணியம் தேடிக்கொண்டீர்கள் மா.
    பாசுரங்களும் அன்பு வாசகங்களும் அருமை. மார்கழி நாள் இனிதே ஆரம்பம்.

    பதிலளிநீக்கு
  7. கூடாரவல்லி திருநாளில் இன்றைக்கு சிறப்பான தரிசனம்.

    நன்று... நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..