தமிழமுதம்
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை..(656)
***
அருளமுதம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 26
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்!..
***
ஆழ்வார் அமுதம்
தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்களென்றும்
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோ ராசையினால்
வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாளென்னைக் கொண்டருளே..(1028)
-: திருமங்கையாழ்வார் :-
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோ ராசையினால்
வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாளென்னைக் கொண்டருளே..(1028)
-: திருமங்கையாழ்வார் :-
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
திருக்காளத்தி
சந்தமார் அகிலொடு சாதிதேக்கம் மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில் வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத்து உள்ளவே.. (3/36)
-: திருஞானசம்பந்தர் :-
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன்காண்
ஞானப்பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன்காண் அவனென் கண்ணுளானே..(6/8)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
செண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே
வண்டாருங் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனென் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே..(7/26)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
***
சந்தமார் அகிலொடு சாதிதேக்கம் மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில் வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத்து உள்ளவே.. (3/36)
-: திருஞானசம்பந்தர் :-
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன்காண்
ஞானப்பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன்காண் அவனென் கண்ணுளானே..(6/8)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
செண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே
வண்டாருங் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனென் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே..(7/26)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
***
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்மபைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ..
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வா என்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ..
***
- அபிராமிபட்டர் -
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
எவ்வளவு எளிமையான குறள்.... பல தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒன்லைன்!
பதிலளிநீக்குராமதாஸர் வேண்டிய பத்ராசலம் கோதண்டராமரை தரிசித்தேன். தமிழ் அமுதம் ருசித்தேன், ரசித்தேன்.
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
இந்தக் குறளைப் புரிந்து கொண்டாலே போதும்... ஒவ்வொருவரும் நல்லவராகி விடலாம்...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
இன்றைய தரிசனம் நன்று
பதிலளிநீக்குஅன்பு துரை,
பதிலளிநீக்குமார்கழி மாதம் வந்ததற்குப் பெரும் பெறும் பயன் உங்கள் பதிவுகளில் வரும் இறை செய்திகளும் படங்களும்.
அற்புதமான காளஹஸ்தி தலம் கை நிறையப் பலன் கொடுப்பது. தரிசனங்கள் அனித்தும் மிக நன்று.
நன்றி.
இன்றைய தரிசனம் அருமை.
பதிலளிநீக்குகாளஹஸ்தி இறைவனை தரிசனம் செய்து இருக்கிறேன்.
காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்து இருக்கிறேன்.
பதராசலம் பார்த்தது இல்லை.
பாடல்களோடு படங்களும் போட்டிபோடுகின்றனவோ அழகில்
பதிலளிநீக்குஎன்பதாய் ஒரு தோற்றம்..
அருமையான தரிசனம். காளத்திநாதரைப் பார்த்துப் பரவசம் அடைந்தேன். பத்ராசல ராமதாஸர் கண்டு மகிழ்ந்த கோதண்டராமரையும் கண்டு ஆனந்தம் அடைந்தேன். அனைத்து தரிசனங்களுக்கும் பதிவுக்கும் நன்றி.
பதிலளிநீக்குசிறப்பான தரிசனம் கண்டேன். நன்றி.
பதிலளிநீக்கு