காவிரியாள் ஓடி வந்தாள்
கன்னி மயிலாக - அவள்
கால் நடந்த பாதை
எல்லாம் பூம்பொழிலாக..
எண்ணம் எல்லாம் ஏற்றி
வைத்தாள் தேவதையாக அவள்
எங்களையும் வாழ
வைத்தாள் பலவகையாக..
காணிக்கெல்லாம் உயிர்
கொடுத்தாள் காவிரி அன்னை - அவள்
பேர் சொல்லிப் பாடவைத்தாள்
எளியவன் என்னை...
எத்தனையோ வருசங்களா
ஓடி வரும் ஆறுங்க...
இல்லைன்னு ஆகிவிட்டால்
என்னவாகும் கூறுங்க...
சொல்லழகும் கல்லழகும்
கூடிவந்தது யாராலே...
துள்ளிவரும் காவிரியாள்
வாரித் தந்த நீராலே...
ஊரழகு பேரழகு
உசந்து நிக்கும் தேரழகு
ஒய்யாரக் காவிரியாள்
அள்ளித் தந்த நீரழகு..
சொல்லழகும் கல்லழகும்
கூடிவந்தது யாராலே...
துள்ளிவரும் காவிரியாள்
வாரித் தந்த நீராலே...
ஊரழகு பேரழகு
உசந்து நிக்கும் தேரழகு
ஒய்யாரக் காவிரியாள்
அள்ளித் தந்த நீரழகு..
காவேரிக் கரை நெடுக
காட்டுமல்லி பூத்திருக்கும்
கானக் குயில் பாட்டெடுத்து
கூட்டுக்குள்ளே சேர்ந்திருக்கும்..
அக்கரையும் கலகலக்கும்
இக்கரையும் சிலுசிலுக்கும்
ஓடுகிற தண்ணிக்குள்ளே
அயிர மீனு பளபளக்கும்...
சேற்றுக்குள்ளே நாற்றாடும்
நாற்றுக்குள்ளே காற்றாடும்
காற்றுக்குள்ளே சேதி சொல்லி
காதல்கிளி கூத்தாடும்...
தென்னை இளநீருக்குள்ளே
பொன்னி அவள் இனித்திருப்பாள்
செண்டாடும் பூவுக்குள்ளே
சேயிழையாள் சிரித்திருப்பாள்..
இலையில அள்ளி வைக்கும்
புத்தரிசிச் சோறுதான்...
மக்கள் மகராசனுக்கு
பேரு தரும் ஆறுதான்!...
சேற்றுக்குள்ள கைய வைக்கும்
சோழ நாட்டுக் கூட்டந்தான்
இல்லையின்னா ஊருலகு
ஆகிப் போகும் வாட்டந்தான்...
திண்டாடும் மனுசருக்கு
வாழ்வளித்துப் பார்த்திருப்பாள்
கொண்டாடும் குலமகளை
கண்னுக்குள்ளே காத்திருப்பாள்!...
பூவிரிக்கும் காவிரியாள்
பொன்னடிகள் போற்றி..
ஃஃஃ
குட்மார்னிங் துரை ஸார்...
பதிலளிநீக்குஇல்லைன்னு ஆகிவிட்டால்
எங்க நிலை பாழுங்க...
வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குஆனாலும்
அவ்வளவு தானா!...
செண்பகப் பாண்டியனே..
பெரிய பொற்கிழியாகத் தாருங்கள்..
காவிரியை வரவேற்று மகிழ்வோம்.
பதிலளிநீக்குகவிதை அருமை ஜி
ஒய்யாரக் காவிரியாள்
பதிலளிநீக்குஅள்ளித்தந்த நீரழகு
மனிதா
அதைக்காக்க
நீ பழகு
சோற்றுக்குள்ள கைய வைக்கும்
பதிலளிநீக்குசோழநாட்டுக் கூட்டந்தான்
இல்லையின்னா ஊருலகு
ஆகிப்போகும் வாட்டந்தான்
இப்போ ரசித்திடுவோம்
தஞ்சையம்பதி பாட்டையுந்தான்
அழகாக எழுதி இருக்கிறீர்கள். காவிரிக் குறவஞ்சி. மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குமிக அருமை. படங்கள் அனைத்தும் முகநூலிலும் பகிர்ந்திருந்தனர். அதற்கேற்ற பொருத்தமான பாடல்! நன்றாகச் சொல்லி இருக்கீங்க! காவிரி ஆற்றை முன்னரே தூர் வாரி சுத்தம் செய்திருந்தால் இன்னமும் நீரைத் தேக்கி வைச்சிருக்கலாம்.
பதிலளிநீக்குகாவிரி போற்றுவோம்
பதிலளிநீக்குகாவிரி - ஆஹா கவிதை. காவிரிக் குளியலுக்கு மனது ஏங்குகிறது. ம்ம்ம்.... நான் தமிழகம் வரும்வரை இந்தத் தண்ணீர் இருக்காது....
பதிலளிநீக்குநீரென்றால் அது காவிரிதானா வேறு பெயர்களில் அவளது கோர தாண்டவம் தாங்கவில்லையே
பதிலளிநீக்குகவிதை அருமை. சேற்றுடன் இருக்கும் பெண் அதைவிட அருமை (உழைப்பாளிகள், நமக்குச் சோறு போடுகிறவர்கள் என்ற அர்த்தத்தில்)
பதிலளிநீக்குஇந்தத்தடவை காவிரி, ஒய்யார நடைபோட்டு வந்ததுபோல் தெரியலையே... ஆவேசம் கொண்டதுபோல்ல்லவா தோன்றியது.
காவேரி அன்னைக்கான பா ...ஆஹா..
பதிலளிநீக்குஅவள் இல்லாது நாம் ஏது...
நம் எண்ணம் முழுதும் அவள் ஆட்சியே
வரிகள் அருமை ஐயா...
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
சேற்றில் குளித்த பெண்ணின் சிரிப்பு அழகு.
காவிரி எல்லோருக்கும் நலம் செய்யட்டும்.