சனி, ஆகஸ்ட் 18, 2018

துயர் தீரட்டும்..

நூற்றாண்டுகளில் காணாத வெள்ளம்...


செய்வதறியாமல் திகைத்து -
சொல்லொணாத் துயரில் தவித்து நிற்கின்றது கேரளம்...

அதிரப்பள்ளி அருவி





ஒரு நொடியில் சிதறிப் போன வாழ்வு

சாலைகளும் இருப்புப் பாதைகளும்
நிலை குலைந்து விட்டன...

கொச்சி விமான நிலையமும் தப்பிக்கவில்லை..




கொச்சி விமான நிலையம்
தத்தளிக்கும் மக்களுக்காக
ஆதரவுக் கரங்கள் நீள்கின்றன...

ஆபத்தான நிலையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடும் வீரர்







துயரின் நடுவேயும் சுகப் பிரசவம்...
நிவாரணப் பணிகளும் மீட்புப் பணிகளும்
விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன...

பலநூறு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள்...

மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்கள்
இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை...

இதற்கு என்ன சொல்வது!?...
மிக மோசமான வானிலை - கால சூழ்நிலையால்
கேரளத்தில் திருவோணக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன...

சென்ற மாதத்தில் -
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலுக்கு
பருவ வயதுடைய பெண்களும் மலையேறி வரலாம்.. 
அதற்கு ஒரு தடையுமில்லை!..  - என்று, வழக்காடினார்கள்...

இதோ - இந்த மாதத்தில் -
சபரிமலை சந்நிதானத்தில் நிகழ்வுறும்
ஆவணி மாத நடை திறப்பிற்கும்
நிறை புத்தரிசி வைபவத்திற்கும் 
யாருமே வரவேண்டாம்!.. - என்று, அறிவித்திருக்கின்றார்கள்....

என்னே.. விந்தை!...

இடுக்கி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுகின்றது
எதற்காக இத்தனை துன்பமும் துயரமும்!...

இயற்கையினின்று வழுவியது தான்!..

இதனைத் தாமதமாகப் புரிந்து கொண்டாலும்
இயற்கையின் சீற்றம் எப்போது தீருமோ தெரியவில்லை...

நன்றி - விகடன்
கேரளத்தின் துயர் தீரவேண்டும்..
மக்களின் துன்பம் நீங்க வேண்டும்..

எல்லாம் வல்ல பரம்பொருளிடம்
வேண்டிக் கொள்வோம்..
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. மனம் துடிக்கிறது... பிரார்த்தனை ஒன்றே வழியோ...?

    பதிலளிநீக்கு
  2. வேதனையான புகைப்படங்கள்
    கேரள மக்களின் துயர் விரைவில் நீங்கட்டும்.

    ஐயப்பன் கோவில் சமீபத்திய விதிமுறை மீறல்களுக்கும், இந்நிகழ்வுகளுக்கும் ஏதோவொன்று தொடர்பு போலே தோன்றுவது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  3. உடலால் உதவி செய்ய முடியாதவர் பணமனுப்பி துயர் துடைக்க முயற்சி செய்யலாமே

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    வேதனையான நிகழ்வுகள். படங்கள் பார்க்கவே மனதை வேதனை கொள்ளச் செய்கிறது. கேரள மக்கள் துயரங்கள் தீர நானும் இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன்.

    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. கேரளத்தின் பிரச்சனையைத் தெரிவிக்கும் படங்கள். விரைவில் நிலைமை சரியாகட்டும்.

    பதிலளிநீக்கு
  6. விரைவில் நிலைமை சீராகட்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  7. இயற்கையின் சீற்றம் குறையட்டும், இயல்பு நிலைக்கு கேரளா மீண்டு வர பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  8. அவ்வப்போது தொலைக்காட்சி சானல்களில் பார்த்தும் வருகிறோம். இயற்கையின் சீற்றம் மிக அதிகம் ஆனதுக்குக் காரணம் பெரும் மரங்களை வெட்டி மண்ணுக்குக் கிடைத்து வந்த பாதுகாப்பை நீக்கியது தான். பரங்கள் அரணாக நின்று மண்ணைச் சரிய விடாமல் பாதுகாத்து வந்தது போய் இப்போது பலமில்லாமல் மண் சரிவினால் கட்டிடங்கள் கூட விழுகின்றன. பொத், பொத்தென்று இரண்டு மாடிக் கட்டிடங்கள் எல்லாம் நிமிஷத்தில் ஒன்றுமில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. பல வீடுகள் சேதம்! :( இனியாவது காடுகளையும் வன வளத்தையும், மலை வளத்தையும் சுரண்டாமல் இருந்தால் நல்லது! :(

    பதிலளிநீக்கு
  9. நிலைமை சீராக இறைவனிடம் வேண்டுவோம்.
    கோவரத்தனமலையை குடையாக பிடித்த கோவிந்தன் மனம் வைக்க வேண்டும்.
    அனைவரும் வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  10. 10 பங்கு மழை அளவுக்கு அதிகமாய் மழை பெய்யும் போது என்ன செய்ய முடியும்.
    இறைவன் ஒருவரே உதவ முடியும்.
    உதவிகள் போய் சேர வேண்டும் என்பதற்கே இறைவன் அருள் வேண்டும். போக முடியாமல் இருக்கிறது சில பகுதிகளுக்கு.
    இராணூவம், தன்னார்வ தொண்டர்கள் என்று எவ்வளவு உதவும் கரங்கள் எல்லோரையும் இறைவன் காக்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..