வெள்ளி, ஆகஸ்ட் 24, 2018

மலரின் மேவு திருவே..



காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் அருள் வாக்கு!.. 

வாஸ்தவத்தில் இருக்கிறவள் ஒரு பராசக்திதான்!.. 
அவள்தான் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த விதமாக
அநுக்ரஹம் செய்து பக்குவத்தைத் தரவேண்டுமோ - 
அப்படிச் செய்வதற்காக

மஹாலக்ஷ்மியாக 
ஸரஸ்வதியாக 
ஞானாம்பிகையாக வருகின்றாள். 

ஏதோ ஒரு ரூபத்தில் பக்தி என்று வந்து விட்டால் போதும். 
அப்புறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள். 

இந்தப் பக்திதான் நமக்குப் பெரிய செல்வம். 
அதுவே மஹாலக்ஷ்மி!

ஸ்ரீ ரங்கநாயகி, திருஅரங்கம்
நிலைத்த செல்வங்களைப் பெறுதற்கும் 
பெற்ற செல்வங்கள் நிலைப்பதற்கும் ஆகிய
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி..

ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து பரப்ரம்ஹ ஸ்வரூபிணி 
யசோ தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே

தான்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாபரண பூஷிதே 
தான்யம் தேஹி தனம் தேஹி  ஸர்வகாமாம் ச  தேஹிமே  

வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வகார்ய ஜயப்ரதே 
வீர்யம் தேஹி பலம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 

கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவ ஸ்வரூபிணி 
அஸ்வாம் ச கோகுலம் தேஹி  ஸர்வகாமாம் ச  தேஹிமே 

ஸ்ரீ பத்மாவதி, திருச்சானூர்
சந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ர பெளத்ர ப்ரதாயினி 
புத்ராந் தேஹி தனம் தேஹி  ஸர்வகாமாம் ச  தேஹிமே 

ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணி 
ஜயம் தேஹி சுபம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 

வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரம்ஹ வித்யா ஸ்வரூபிணி 
வித்யாம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 

தனலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வ தாரித்ரிய நாசினி 
தனம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 


மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே 
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மே சதா 

ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே 
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே 


மலரின் மேவு திருவே - நின்மேல்
மையல் பொங்கி நின்றேன்
நிலவு செய்யும் முகமும் காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் தெய்வ
களிது லங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன்!..

கமலமேவு திருவே நின்மேல்
காதலாகி நின்றேன்
குமரி நின்னை இங்கே பெற்றோர்
கோடி இன்பமுற்றார்
அமரர் போல வாழ்வேன் என்மேல்
அன்பு கொள்வை யாயின்
இமய வெற்பின் மோத நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன்!..


செல்வம் எட்டும் எய்தி - நின்னால்
செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை - உலகில்
இல்லை யாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோக வாதை நீக்கி
எல்லை யற்ற சுவையே - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்!..
-: மகாகவி பாரதியார் :-


இன்று ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்...

அனைத்து 
மங்கலங்களையும் அருள்பவளே!..  
மஹாலக்ஷ்மி.. 
உன்னைச் சரணடைகின்றேன்!.. 

சுமங்கலியே.. 
சுபம் வழங்கியருள்க!.. 
செந்தாமரைத் திருவே.. 
செல்வங்களை வழங்கியருள்க!.. 

திருவே.. திருவிளக்கே!.. 
உன் திருவடிகளுக்கு வணக்கம்!..

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
***

28 கருத்துகள்:

  1. காலை வணக்கம். பின்னர் வருகிறேன். பூஜை ஏற்பாடுகள் மும்முரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு பழமுதிர்ச்சோலையில் ஏகப்பட்ட வாழைக் கன்றுகள் விற்பனை. ஓ இதுதான் காரணமா?

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி நன்றி..

      நீக்கு
  2. எனக்கு இந்த வரலக்ஷ்மி விரதம் நோன்பு பண்ண முடியலை என்ற குறை அதிகம் உண்டு. ஆனாலும் கொழுக்கட்டை பண்ணி நிவேதனம் பண்ணிடுவேன். இன்னிக்கும் உண்டு. போகணும் இதோ! கிளம்பிட்டே இருக்கேன். நல்ல ஸ்லோகங்களாகப் போட்டு இன்று லக்ஷ்மிக்கு வந்தனம் செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடல்கள், திருவின் படங்கள்...அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தங்கள் மகிழ்ச்சியும் - மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மலரின் மேவு திருவே பாடல் என் அக்கா அடிக்கடி பாடுவார்கள். கோவை அவினாசி கல்லூரியில் காலை இறைவனக்க பாடலில் இடம்பெற்ற பாடல்.
    அக்கா சொல்லிக் கொடுத்து வீட்டில் நாங்கள் எல்லோரும் பாடுவோம்.
    மலரும் நினைவுகளை கொடுத்த பாடல்.
    எல்லோர் மனையிலும் மங்கலம் பொங்கட்டும்.
    வாழ்க வளமுடன்.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி..

      எல்லார் மனையிலும் மங்கலம் தங்கட்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. பரமாச்சார்யாளின் வாக்கை ஆங்காங்கே படிக்க நேர்கையில், அடடா, இப்படி ஒரு மனிதர், இப்படி ஒரு துறவி நம்மிடையே வாழ்ந்த காலத்தில் போய்ப் பார்க்காதிருந்துவிட்டோமே எனத் தோன்றுகிறது. மறைந்தபின்னேதான் காக்கையைப்போலக் கரைய ஆரம்பித்துவிடுகிறோமோ என்கிற சிந்தனையும் கூடவே.

    பாரதியின் பாடல் காலையை பக்தி மணத்தோடு ஆரம்பித்துவைத்தது.

    ஆரம்பத்தில் நீங்கள் போட்டிருக்கும் மகாலக்ஷ்மி படம் மனதைக் குளிர்வித்தது. பிரபல ஓவியர் கொண்டய ராஜுவும், அவரது துணையான (கண் பார்வை மங்கிய ராஜுவின் முதுமைக்காலத்தில்) டி.சுப்பையாவும் வரைந்திருக்கும் க்ளாஸிக் இது. பூஜையில் வைக்க மிகப் பொருத்தமான படம். இப்படி கொண்டைய ராஜு வரைந்த படம் கிடைக்குமா என அப்பாவுடன் தேடி அலைந்து ஃப்ரேம் போட்டு வீட்டில் மாட்டி அழகுபார்த்த காலமொன்றும் இருந்தது. அவரைப்பற்றி என்னுடைய பதிவொன்று சில வருடங்கள் முன்:
    https://aekaanthan.wordpress.com/2014/11/08/சி-கொண்டய-ராஜு-மனங்கவர்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரமாசாரியாரைப் பார்க்க முடியலை என்று சொல்பவர்களைக் காணுகையில் உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கிறது. இதே போல் வேறொரு சகோதரர், நியம நிஷ்டையில் சிறந்தவர்! அவரும் சொல்லுவார். நாங்க பலமுறை பார்த்திருக்கோம். இளையாத்தங்குடி சதஸின் போது அங்கே தான் குடித்தனமே!

      நீக்கு
    2. கொண்டைய ராஜுவின் படங்களை நானும் ஒரு காலத்தில் தேடித் தேடிச் சேகரித்தேன். எல்லாம் போன இடம் தெரியலை! :(

      நீக்கு
    3. @ஏகாந்தன், உங்க லிங்க் காபி, பேஸ்ட் செய்ய முடியலை! :(

      நீக்கு
    4. பார்க்க/தரிசிக்க ப்ராப்தம் இல்லைனா என்ன பண்ணறது? நான் சென்னைலே இருந்து அவரைத் தரிசிக்கலை. மேட்டூர்ல வேலை பார்த்தபோது, என் கூட வேலை பார்த்தவரோட அப்பாவை நடுப் பெரியவாள் தன்னுடன் கூட்டிக்கொண்டார். அப்போது காஞ்சி நான் செல்ல சந்தர்ப்பம் வாய்த்தது, ஆனால் போகலை (அந்த வயசுல இது முக்கியமாத் தெரியலை, எங்க ஆச்சாரியரை சேவிப்பதும்)...

      நீக்கு
    5. கீசா மேடம்... அவர் தளத்துக்குப் போய், 2014, நவம்பர் பதிப்புகளைப் பாருங்க. கண்டுபிடித்துடுவீங்க.

      நீக்கு
    6. பரமாச்சார்ய ஸ்வாமிகளை
      காஞ்சி மடத்தில் ஒருமுறை தரிசனம் செய்துள்ளேன்...

      நீக்கு
  6. கன்னடியர்களுக்கு வர மஹாலக்ஷ்மி நோன்பு பிரதானம் என் தளத்தில் பாக்கியாத லக்ஷ்மி பாரம்மா பாடலை பகிர்ந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. @ நெ.த.: //..பார்க்க/தரிசிக்க ப்ராப்தம் இல்லைனா..//

    அதுதான் காரணம். நானும் முயற்சிக்கவில்லை. நான்பாட்டுக்கு ஊர், உலகமென சுற்றிக்கொண்டிருந்த காலம். ஒரு உண்மையான சந்நியாசியை சந்திக்காவிட்டாலும், தூரத்திலிருந்து பார்ப்பதும் நல்லதென இப்போது தோன்றுவதைப்போல் அப்போது தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கு..

      மகத்தானதொரு துறவியை ஒருமுறையேனும் தரிசித்தேன்.. என்பது பாக்கியம்...

      அமரர் கொண்டையராஜூ அவர்களுடைய ஓவியங்கள் நம்முடன் பேசும் வல்லமை உடையவை...


      பதிவில் இடம் பெற்றுள்ள படம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி அம்சம்..

      கஜலக்ஷ்மி என்றும் சொல்வர்...

      கோயில்கள் , மடங்கள், இல்லங்கள் .. இங்கெல்லாம் தலைவாசல் நிலையில் வைக்கத் தக்க படம் இதுவே....

      தங்க அன்பின் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. கோயில்கள் மடங்கள் - இங்கெல்லாம் தலை வாசல் நிலையில் காணப்படும் சிற்பம் இதுவே...

      வீட்டின் தலைவாசல் நிலையில் வைக்க வேண்டிய படமும் இதுவே!...

      நீக்கு
    3. அநேக சிவன் கோயில்களின் கர்பகிரஹத்துக்குள் நுழையும் தலைவாசலில் மேலே இந்த மஹாலக்ஷ்மி அருள் பாலிப்பதைப் பார்க்கலாம்.

      நீக்கு
    4. >>> அநேக சிவன் கோயில்களின் கர்ப்பகிரஹத்துக்குள் நுழையும் தலை வாசலில்... <<<

      பெரும்பாலான சிவாலயங்களுள் ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு தனி சந்நிதியும் உண்டு...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  9. வரலக்ஷ்மி நோன்பு - சிறப்புப் பகிர்வு சிறப்பான பகிர்வாக.....

    அனைவருக்கும் அன்னையின் பேரருள் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..