இந்த நாள் இனிய நாள்..
அனைவருக்கும்
அன்பின் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
மங்களகரமான ஸ்ரீவிளம்பி வருடம்
கிருஷ்ண பட்சம் த்ரயோதசி திதியில்
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில்
மேஷ லக்னத்தில் காலை 6.55 மணியளவில்
சனி ஹோரையில் பிறக்கின்றது..
ஃஃஃ
இந்த ஆண்டின் ராஜா - சூரியன்..
மந்திரியாக சனைச்சரன்...
சேனாதிபதி, அர்க்கியாதிபதி மற்றும்
மேகாதிபதி எனும் மூன்று பொறுப்புகளையும் வகிப்பவர் - சுக்கிரன்..
இந்த ஆண்டின் பொதுப்பலன்களாக
பூர்வீக தொழில்கள் புத்துயிர் பெறும்
இயற்கை வேளாண்மை மற்றும்
மூலிகைப் பொருட்கள் சிறப்படையும் என்றும்
மக்களுக்கு தெய்வபக்தியுடன் தேசபக்தியும் அதிகரிக்கும் என்றும்
ஜோதிட வல்லுநர்களால் குறிக்கப்படுகின்றது...
அப்படியெல்லாம் இருந்தாலும்
நாம் வாழ வேண்டிய தருணங்களை வாழ்ந்தே ஆகவேண்டும்...
வரும் நாட்களை எல்லாம் வளமான நாட்களாகக் கொண்டு
வையகத்தில் வாழத் தலைப்படுவோம்...
கஷ்டங்கள் தீர பிராயச்சித்தம் தான் செய்யவேண்டும்!... - என விரும்பினால், மனதார - ஏழை எளியவர்களுக்கு உதவலாம்.
சிற்றுயிர்களை - இயற்கைச் சூழலைக் காக்கலாம்.
வாசலில் அரிசி மாவினால் கோலமிடுவதும்
தெருவில் திரியும் விலங்குகளுக்கு உணவளிப்பதும்
சாலையோர மரத்திற்கு ஒரு குடம் நீர் வார்ப்பதும் - மிகப்பெரிய அறங்கள்.
யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவினுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!..
- என்பது திருமூலர் அருளிய திருமந்திரம்.
பிறருக்கு இன்னுரை கூறுவதனால் - உள்ளம் குளிர்கின்றது.
உள்ளம் குளிர்வதனால் - உள்ளுறையும் சிவம் நெகிழ்கின்றது..
சிவம் நெகிழ்வதால் உடனுறையும் சக்தியும் மகிழ்கின்றது...
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமியும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்புஅகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..
அமுதீசருடன் உறையும் அபிராமவல்லி
அனைவருக்கும் நல்லருள் பொழிவாளாக!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
நாளும் நலமே விளைக. யாவர்க்கும் பிரகதீஸ்வரர் அருள் புரியட்டும். இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள். காலை வணக்கம்.
பதிலளிநீக்குசித்திரைத் திருநாளை வரவேற்போம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குசித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநேற்றுதான் நாங்கள் ஹிருதயாலீஸ்வர்ர் (பூசலார் நாயனார்) மற்றும் திருநின்ற ஊர் பக்தவத்சலப் பெருமாளை தரிசனம் செய்த போது உங்களை நினைத்துக்கொண்டேன். அங்கு ஏரிகாத்த ராமர் தரிசனமும் கிடைத்தது.
ஏரி காத்த ராமர் மதுராந்தகம் அல்லவோ? இங்கே திருநின்றவூரில் ஏது ஏரி காத்த ராமர்??????????????
நீக்குகீதாக்கா திருநின்றவூர் கோயிலின் பின் பக்கம் பெரிய ஏரி உள்ளது அழகா இருக்கும் அங்கும் ஒரு ஏரிகாத்த ராமர் இருக்கார். சிறிய கோயில் ஆஞ்சுவும்...அழகு...
நீக்குகீதா
நான் படங்களும் எடுத்துள்ளேன் கணினியில் சேமித்து பகிரணும் என்று நினைத்திருந்தேன்....புகைப்பட மூன்றாவது விழிப்பார்வையாக இன்னும் போடலை...பகிர்கிறேன்...
நீக்குகீதா
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதமிழ்ப் புத்தாண்டு நிஜத்தில் தை மாதத்தில் துவங்கவேண்டுமென்று ஒருசாரார் கூறி வருகிறார்களே
பதிலளிநீக்குதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்நாளும் வரும் எல்லா நாட்களும் சிறப்பாக அமைந்திட எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் நாட்களில் எல்லாம் சிறப்பாக அமையவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
சிறப்பு பதிவு அருமை.
சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குமிகப்பெரிய அறங்களைச் சொல்லி, திருமூலரின் திருமந்திரமும் அபிராமி அந்தாதியும் கலந்து வாழ்த்து சொல்லியமைக்கு அன்பு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு மற்றும் விஷு வாழ்த்துகள் ஐயா/ அண்ணா.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
கீதா: அண்ணா நான் தினமும் அபிராமி அந்தாதியின் இவ்வரிகளைச் சொல்லுவதுண்டு...
பஞ்சாங்க பலன்களில் துவங்கி, திருமூலர் வாக்கு, அபிராமி அந்தாதி துதியோடு அருமையாக புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு