புதன், ஏப்ரல் 11, 2018

சுவையோ சுவை!..

நம்மைப் போலவே -
நம்முடன் வாழும் சக உயிர்களும்
நாவினுக்கு சுவையை விரும்பினால்!?...

நமக்கெல்லாம் யார் தொக்கு தர்றாங்க!
தொக்கு வேணும்...ன்னு அடம் புடிச்சா
புள்ள புடிக்கிறவன்...ட்ட கொடுத்துடுவேன்
தொக்கு இப்படித்தான் செய்யோணும்..
நல்லா பார்த்துக்க...
அழக்கூடாது...டா  செல்லம்..
நாளைக்கு தொக்கு செஞ்சு தாரேன்...
என்னடா இது?..
கொக்குக்கு வந்த சோதனை!..
வூட்ல கதவடைச்சுட்டாங்க..ப்பா!...
தொக்கோட தான் வரணுமாம்!...
இதுக்குள்ள தொக்கு இருக்கு..ன்னு
சொன்னாங்களே!...
காஞ்ச புல்லுக்கும் வேட்டு வெச்சாச்சா!..
அன்பின் திரு நெல்லைத் தமிழன் அவர்கள்
வழங்கிய நெல்லிக்காய்த் தொக்கு - பதிவினால்
விளைந்த கற்பனை....

நகைச்சுவையாய்க் கொள்க...

வாழ்க நலம்...
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. ஹா... ஹா... ஹா...

    தொக்கை வைத்து தொக்கு தொக்குன்னு தொக்கிட்டீங்களே...

    பதிலளிநீக்கு
  2. கொக்கும் தொக்கும்!

    எல்லாப் படங்களுமே அதற்கான பொருத்தமான தொக்கு வரிகளால் மிகவும் ரசிக்க வைக்கின்றன!

    பதிலளிநீக்கு
  3. எனக்கொரு சந்தேகம்.. மனிதன் தவிர மற்ற விலங்குகளுக்கு நாவில் சுவை தெரியுமோ? அவைகளால் மாறுபட்ட சுவைகளை உணர முடியுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்..
      விலங்குகள் சுவையை உணர்கின்றன..

      எங்கள் வீட்டுப் பசுக்கள் - கஞ்சியில் உப்பு குறைந்தால் ஸ்ட்ரைக் செய்வார்கள்...

      வெல்லம் கலந்த அரிசியை அள்ளிக் கொடுக்கும்போது விரல்களையும் விடமாட்டார்கள்...

      வைரவாக்களும் பூஸார்களும் இப்படித்தான்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. என்ன இப்படிக் கேட்டுட்டீங்க ஶ்ரீராம். யானைக்கு வாழைமட்டை, பழம், பசுக்களுக்கு அகத்திக்கீரை, பூனைக்கு பால் இப்படி பார்த்துப் பார்த்து சுவையா கொடுக்கறாங்களே.

      நீக்கு
    3. ஸ்ரீராம் அதை ஏன் கேக்கறீங்க....நல்லா தெரியும் வாசனையும்...வாசனை தெரிவதால்தானே சுவை தெரிகிறது நமக்கு...அப்படித்தான் அவர்களுக்கும் மூக்கில் வியர்க்கும் சுவை நன்றாகத் தெரியும். எங்க வீட்டுக் கண்ணழகி இருக்கே எந்தத் தூக்கத்திலும் நாங்கள் தயிர்/மோர் பாத்திரத்தை எடுத்துவிட்டால் தெரிஞ்சுரும். அதுவும் இப்ப வெயில் வேறயா ....உடனே தனக்கும் வேண்டும் என்று காலை மாற்றி மாற்றி போட்டு டான்ஸ் ஆடுவாள்..தனிக் குரல் எழுப்புவாள்....அதைப் பார்க்கவே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்...ரசித்துவிட்டு அவளுக்கு மோர் விடுவேன் உடன் ஓடிச் சென்று ஆசையாகக் குடிப்பாள். பால் அவளுக்குக் கொடுப்பதில்லை. அவள் ஆசைப்பட்டாலும்...கொடுப்பதில்லை மகன் அதற்குத் தடா சொல்லியிருக்கான்.

      அது போல சப்பாத்தி செய்வது தெரிந்துவிடும்..உடனே வந்துவிடுவாள்...சப்பாத்தி ஒரு சிறு துண்டுதான் நான் கொடுப்பேன்...மகன் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருப்பதால். அவள் வயிறு மிகவும் சென்ஸிட்டிவ் அவனும் இங்கு இல்லாததால் நான் கஷ்டப்படக் கூடாது என்று ரொம்பக் கண்டிஷன்ஸ்...

      நிறைய உணவு எல்லாச் செல்லங்களுக்கும் பைரவர்கள் மட்டுமில்லை எல்லாச் செல்லங்களுக்குமே மிகவும் பிடிக்கும்...ஆனால் எப்படி மனிதர்களுக்குச் சில உணவுகள் பிடித்தாலும் சாப்பிடுவது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறதோ அப்படித்தான் அவர்களுக்கும். அவர்களுக்குப் பிடித்தாலும் நாம் கொடுக்கக் கூடாது.

      அதனால்தான் விலங்கியல் பூங்காக்கள், பறவைகள் பூங்காக்களில் சரணாலய்த்தில் அறிவிப்பு பலகைகள் இருப்பதைக் காணலாம் நாம் உணவு எதுவும் கொடுக்கக் கூடாது என்று...அப்படி அவை தின்றுவிட்டு அவதிப்படும் போது அதனைக் காக்கும் மருத்துவர்களுக்குத்தான் கஷ்டம். மனிதர்களுக்கு ஒவ்வாமை வந்தால் கூட மருத்துவர்கள் எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம் நாம் சொல்ல முடியும் என்பதால் ஆனால் அவை அப்படி இல்லையே....அதனால்தான்...

      கீதா

      இக்கருத்தை காலையிலேயே அடித்துக் கொண்டிருந்த போது கணினி சட்டென்று அணைந்துவிட்டது அப்புறம் அதை உயிர்ப்பித்து எபி யில் ஆஜர் வைத்துவிட்டு இதோ இங்கு மீண்டும்

      நீக்கு
  4. இயற்கைதான் எத்தனை விதமான பறவைகள் விலங்குகளைப் படைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. இரசிக்க வைத்தது தொக்கு.

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்கள் .
    நெல்லைத்தமிழன் செய்த
    தொக்கின் சுவை ,சுவையான பதிவு போட கருபொருளாச்சு.

    பதிலளிநீக்கு
  7. தொக்கை வைச்சுக்கூட ஒரு பதிவு. வாழ்க தொக்கு! :)

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அத்தனையும் அழகு! ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. ரசித்தோம் ஐயா. அதற்கான வரிகளையும் ரசித்தோம்.

    கீதா: ஆஹா அண்ணா ஹா ஹா ஹா ஹ..நெ த வின் தொக்கை வைச்சு இதுங்களையும் மயக்கிட்டீங்களா?!! ஹா ஹா ஹா ஹா...படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன. உங்கள் கமென்டுகள் ரசிக்க வைக்கின்றன அண்ணா...

    நான் ப்ளாகரைப் பார்த்து பதிவுகள் பார்த்ததும் துளசிக்கு அனுப்பிவிட்டு.....கமென்ட் போடும் போது தனியாகத் தளம் திறந்து போடுவது வழக்கம்...நான் ப்ளாகர் டேஷ் போர்டை சரியாகக் கவனிக்கலை போலும்....பதிவுகள் விடுபட்டு உள்ளன. நேற்று துளசி எனக்கு இப்பதிவிற்காந கமென்டும் மெசேஜும் கொடுத்திருக்க நான் நேற்று இரவு சீக்கிரமாகத் தூங்கிப் போனதால் பார்ககாமல் இதோ இப்போது பார்த்து... இங்கு கருத்துப் பதிவு...தாமதத்திற்கு வருந்துகிறோம் அண்னா..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..