செவ்வாய், ஏப்ரல் 17, 2018

இளங்காற்று..

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்..

அடுத்தடுத்த பதிவுகள் வெளியிடுவதும்
நண்பர்களின் பதிவுகளில் கருத்திடுவதும்
சிரமமாக உள்ளது...

அந்த அளவுக்கு சிறப்பான இணைய சேவை..

கேலக்ஸியில் வரும் இணைப்பு
மடிகணினியில் செல்லாக்காசு ஆகிவிடுகிறது..

அப்படியே இணைப்பு ஏற்பட்டாலும்
மாமதுரைக் குண்டோதரனைப் போல
வெகு விரைவாக ஒரு GB யைத் தீர்த்து விடுகின்றது - மடிகணினி...

இதற்கிடையில்,
பயணங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆங்காங்கே மிதமான மழை பெய்தாலும்
தஞ்சையில் மழைத்துளி ஏதும் விழவில்லை..

இருந்தாலும்,
அவ்வப்போது சில்லென இளங்காற்று வீசுகின்றது...

அந்த இளங்காற்றைப் போல
இன்றொரு பதிவு...

பங்குனியின் மூன்றாவது வாரத்தில்
தஞ்சையில் நிகழ்ந்த காளியாட்டம்...

எத்தனையோ ஆண்டுகளாகத் தொடர்ந்து
நடைபெறுவது - பச்சைக் காளி, பவளக்காளி வைபவம்...

அந்தத் திருவிழாவின் படங்கள்
இன்றைய பதிவில்...

படங்களை வழங்கியவர்
அன்பின் திரு. ஞானசேகரன்..

அவர் தமக்கு மனமார்ந்த நன்றி...








ஸ்ரீ கோடியம்மன் சந்நிதி
கவலைகள் தீர்ப்பாள் ஓங்காரி..

ஓம் சக்தி.. சக்தி ஓம்..
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. குட்மார்னிங் துரை செல்வராஜூ ஸார். காளியை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. இணைய பிரச்னை பெரிய பிரச்னை. எனக்கு இணையமாவது எப்படியாவது சுமாராய் வந்து விடும். ஆனால் கணினி படுத்துகிறது. கொஞ்சம் சுற்றினாலே அணைந்து விடும்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் சக்தி சக்தி ஓம் என்று நீங்கள் முடித்திருப்பது எனக்கு பாரதியாரின்

    நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
    நிறைந்த சுடர்மணிப் பூண்,
    பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
    பார்வைக்கு நேர்பெருந்தீ
    வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
    வையக மாந்தரெல் லாம்,
    தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
    ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

    பாடலை எம் எஸ் குரலில் மனதில் கொண்டு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். இந்தப் பச்சைக்காளி, பவளக்காளியைக் கும்பகோணத்திலும் ஒரு முறை பார்த்திருக்கேன். யாரானும் இரண்டு பேர் பச்சைக்கலரில் புடைவையும் சிவப்புக் கலர்ப் புடைவையும் கட்டி இருந்தாலே நம்ம ரங்க்ஸ் பச்சைக்காளி, பவளக்காளி என்பார்! :)))) அதுக்கு முன்னால் எனக்கு இவங்களைப் பத்தித் தெரியாது. அதாவது காளி குறித்துத் தெரியும். பச்சை, பவளக்காளிகளைப் பத்திக் கும்பகோணம், தஞ்சையில் விழா எடுப்பது திருமணத்துக்குப் பின்னரே அறிவேன்.

    பதிலளிநீக்கு
  5. கும்பகோணத்தில் சில வருஷங்களுக்கு முன்னால் சில பெண்களும் பச்சைக்காளி, பவளக்காளி வேஷம் கட்டி அக்கம்பக்கம் கிராமங்களில் இருந்து வந்திருந்தார்கள். இரவு நேரமாகிக் கொண்டிருந்த அந்த வேளையில் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் அவங்களைப்பார்த்த நான் ஃபோட்டோ எடுக்கலாமா என முயல்வதற்குள் அவங்க சீறின சீறலைப் பார்த்துட்டுப் பயந்து காமிராவை உள்ளே வைச்சுட்டேன். இரண்டு பெண்மணிகளும் உணர்வுகளில் உச்ச ஸ்தானத்தில் இருந்தனர். அவர்களை யாராலும் கட்டிப் பிடிக்க முடியலை!ஆச்சரியமான அனுபவம்.

    பதிலளிநீக்கு
  6. அழகிய தரிசனம் தந்தமைக்கு நன்றி ஜி
    தொடரட்டும் பயணங்கள்

    பதிலளிநீக்கு
  7. ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்!!! பச்சைக்காளி பவளக்காளி உங்கள் பதிவுகளின் மூலம் தான் அறிந்தோம். புதிய தகவல்கள் இப்படியான ஆட்டம் எல்லாம் பார்த்ததும் இல்லை.

    கீதா: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பார்த்ததும் எம் எஸ் அவர்கள் பாடிய பாரதியார் பாடல் நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் பாடல் நினைவுக்கு வந்தது. என்ன அருமையான பாடல்...பாடல் அருமை என்றால் அதைப் பாடிய எம் எஸ் குரல் ஆஹா!!! கேட்டாலே புல்லரிக்கும்...மனதிற்குள் வீரம் மகிழ்ச்கி என்று பல உணர்வுகள் பொங்கும் ஏதோ நாம் பொதுவெளியில் மேடையில் நின்று முழங்குவது போல்...

    பதிலளிநீக்கு
  8. பச்சைக்காளி பவளக்காளி பற்றி இப்போதுதான் அறிகிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  9. பள்ளிக்காலம் முதல் கும்பகோணத்தில் காளியாட்டம் பார்த்துள்ள நிலையில் இப்போது அவற்றின்மீது தனியாக ஒரு பக்தி எனக்கு உண்டு. உங்கள் பதிவு மூலம் இன்று மறுபடியும் காளி தரிசனம்.

    பதிலளிநீக்கு
  10. காளிதரிசனம் செய்து விட்டேன்.
    எங்கள் ஊரிலும் திருவிழா சமயம் பச்சைக்காளி, பவளக்காளி வேஷம் போட்டு வருவார்கள். (மாரியம்மன் தீமிதி சமயம்)

    மழை பெய்யாமல் இளம் காற்று வீசுது இங்கும்.

    பதிலளிநீக்கு
  11. அழகான படங்கள். உங்கள் மூலம் காளியின் தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..