நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 6
சனிக்கிழமை
குறளமுதம்
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.. 33
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. 6
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
ஃஃ
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங் கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.. 6
ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 6
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
புதிய குறள்களாக வெளிவருவது சிறப்பு. பாசுரங்களும் சிறப்பு. வாழ்க தமிழ்.
பதிலளிநீக்குமனம் அறிந்த குறள்களைத் தான் அதிகார வரிசைப்படி ஒழுங்கு செய்து சில ஆண்டுகளாக பதிவில் வைக்கின்றேன்..
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
நீக்குஅன்பின் வருகைக்கு
மகிழ்ச்சி
நன்றி ஜி
வாழ்க வையகம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய குறளமுதம் நன்றாக உள்ளது. ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரமும், திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடல்கள்களையும் பாடி இறைவனை துதித்து மகிழ்ந்தேன். கோதை நாச்சியார் திருவடிகளே சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின்
நீக்குவருகையும் பிரார்த்தனையும்
மகிழ்ச்சி
நன்றி
ஹரி ஓம்
மார்கழி மாத நாட்களில் உங்கள் பகிர்வின் மூலம் நாங்களும் பூச்சூடிய கோதை நாச்சியாரையும், கயிலை மலையானையும் தரிசித்து மகிழ்கிறோம்.
பதிலளிநீக்குநன்றி.
அன்பின்
நீக்குவருகையும் பிரார்த்தனையும்
மகிழ்ச்சி
நன்றி மாதேவி
ஓம் ஹரி ஓம்
நம சிவாய