வெள்ளி, டிசம்பர் 20, 2024

மார்கழி 5

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 5
வெள்ளிக்கிழமை

குறளமுதம்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு.. 20


அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.. 5
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்


ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.. 5

ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்

ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவியான நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையும்  இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 5
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ

ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. ஓம் நாராயணாய நம.


    ஓம் நமச்சிவாய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      ஹரி ஓம்
      நம சிவாய

      நீக்கு
  2. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய குறளமுதத்தை ரசித்தேன். ஸ்ரீ ஆண்டாள் அருளிய பாசுரமும், சிவனடியார்கள் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி பாடலையும், திருத்தாண்டகம் பாடலையும் பாடி மனம் களித்தேன். இறைவனை பணிந்து வணங்கி அனைவரின் நலத்திற்காகவும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள்
      அன்பின் பிரார்த்தனை யும்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      ஹரி ஓம்
      நம சிவாய

      நீக்கு
  4. திருப்பாவை பாடல், திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடி வணங்கினோம்.

    ஓம் ஹரி ஓம்.

    சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள்
      அன்பின்
      வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி.


      ஹரி ஓம்
      நம சிவாய

      நீக்கு
  5. படங்கள் நன்றாக இருக்கிறது.
    திருப்பாவை, தெருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின் பிரார்த்தனையும்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      ஹரி ஓம்
      நம சிவாய

      நலம் வாழ்க

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..