நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 14
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
பொது
தான தனத்த .. தனதான
நாளு மிகுத்த ... கசிவாகி
ஞான நிருத்த ... மதைநாடும்
ஏழை தனக்கு ... மநுபூதி
ராசி தழைக்க ... அருள்வாயே..
பூளை யெருக்கு ... மதிநாக
பூண ரளித்த ... சிறியோனே
வேளை தனக்கு ... சிதமாக
வேழ மழைத்த ... பெருமாளே..
- அருணகிரிநாதர் -
நாளும் மிகுந்த அன்புடன்
நெகிழ்ந்த மனத்தினனாய்,
உனது திரு நடனத்தைக்
காண விரும்புகின்ற எனக்கும்
அனுபூதி எனும் பேறு கிடைப்பதற்கு
அருள் புரிவாயாக...
பூளை மலர், எருக்கம்பூ, பிறை, பாம்பு
ஆகிய இவற்றை ஜடாமுடியில்
அணிந்திருக்கின்ற சிவபெருமானின்
திருக்குமாரனே..
தனக்கு வேண்டிய சமயத்தில்
மகா கணபதியை யானையாக வரவழைத்த பெருமாளே..
ஃ
முருகா முருகா
முருகா முருகா
ஓம் சிவாய நம ஓம்
***
முருகா... முருகா... வருவாய்... அருள் தருவாய்...
பதிலளிநீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை
திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் அருமை. முருகன் அனைவருக்கும் நல்லருள் தரும்படி பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.