நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 13
வியாழக்கிழமை
குரு வாரத்தில் மஞ்சள் கலந்த உணவுகளால்
தோஷங்கள் தீர்கின்றன..
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
ஃ
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு 250 gr
மஞ்சள் தூள் அரை tsp
மிளகுத் தூள் ஒரு tsp
சீரகத் தூள் ஒரு tsp
சோள மாவு ஒரு Tbsp
வெண்ணெய் தேவைக்கு
கல் உப்பு தேவைக்கு
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
செய்முறை :
உருளைக் கிழங்கைக் கழுவி - தோல் நீக்கிக் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய துண்டுகளை இட்லி தட்டில் வைத்து அரை வேக்காட்டில் அவித்து எடுக்கவும்.
சற்றே ஆறியதும் -
இதனுடன் சோளமாவு, மஞ்சள் தூள் மிளகுத் தூள்
சீரகத் தூள் நுணுக்கிய உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால்
சிறிது தண்ணீர் தெளித்து பிசறிக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் இட்டு மிதமான சூட்டில் காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து - பிசறி வைத்துள்ள கிழங்குத் துண்டுகளைப் போட்டு பதமாக வதக்கி - நிறம் மாறி வெந்ததும் இறக்கி வைக்கவும்..
(ஏற்கனவே வெந்த கிழங்கு என்பதை நினைவில் கொள்ளவும்)..
தயிர் சாதத்திற்கு நல்ல துணை..
தோலில் ஒவ்வாமை உடையவர்கள் சோள மாவினைத் தவிர்த்து விடவும்..
கடுமையான மசாலாக்கள் எதுவும் இல்லாத கிழங்கு வறுவல்...
ஆரோக்கியமானது..
ஃஃ
நம்முடைய நலம்
நம்முடைய கையில்
ஓம் சிவாய நம ஓம்
***
திங்கும் பதிவா? நன்று.
பதிலளிநீக்குஎளிமையான சுவையான உணவு. நான் சிறுவயதில் சில சமயம் உருளைக்கிழங்கு வெந்ததும் தோல் உரித்தபின் அதை எடுத்து மிளகு சீரகப்பொடி சேர்த்து அப்படியே சாப்பிட்டதுண்டு.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. உ. கிழங்கு வறுவல் செய்முறைகள் அருமையாக உள்ளது. உண்மை. தயிர் சாதத்திற்கு நல்லதொரு தொட்டுகையாக இருக்கும். நீங்கள் செய்முறையை விபரமாக சொன்ன விதமே மனதிற்கு நிறைவாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கிழங்கு வறுவல் அநேகர்க்கு பிடித்தமானது.
பதிலளிநீக்குஉங்கள் உருளை மிளகு வறுவல் நன்றாக உள்ளது.
ஆஹா உ கி வறுவலா...சூப்பர் நல்ல குறிப்பு. ஆமா மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குகீதா