வெள்ளி, ஜூலை 12, 2024

திருமஞ்சனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 28  
வெள்ளிக்கிழமை


இன்று
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் 
ஆனித் திருமஞ்சனம்..

ஆனி பத்தொன்பது அன்று 
திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது..


இன்று பத்தாம் திருநாள்..
அதிகாலை மூன்று மணி முதல் ஆறு மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் திருமஞ்சனம்..

மகா தீப ஆராதனைக்குப் பின் பிற்பகல் இரண்டு மணியளவில் சிற்சபை பிரவேசமும் நிகழும்..

நாளை ஹஸ்தம்.. இரவு முத்துப் பல்லக்கு..


செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம்  உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழல் ஏத்துஞ் செல்வம் செல்வமே.. 1/80/5
-: திருஞானசம்பந்தர் :-


கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோம்  அன்றே
மற்றாருந் தன்னொப்பார் இல்லா தானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே..6/1/2
-: திருநாவுக்கரசர் :-


முட்டாத முச்சந்தி மூவா 
யிரவர்க்கும் மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் 
பாவமும் வினையும் போக
விட்டானை மலைஎடுத்த இராவணனைத் 
தலைபத்தும் நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் 
பெருமானைப் பெற்றா மன்றே..7/90/7
-: சுந்தரர் :-


பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 9
-: மாணிக்கவாசகர் :-


பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே..9
-: சேந்தனார் திருப்பல்லாண்டு :-


அருட்ஜோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்..
-: அருட்ஜோதி வள்ளலார் :-


ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. ஓம் நமச்சிவாய... கொடியேற்றம் காணொளி கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓம் நமச்சிவாய....

    அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      ஓம் நம சிவாய

      நீக்கு
  3. ஆனித்திருமஞ்சனம் சிறப்பான நாளில் தில்லைப் பாடல்கள் பலவும் பாடி வணங்கினோம்.

    சிற்சபை பிரவேசம் முத்துப் பல்லக்கு என கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும் மனக்கண்ணில் கண்டு வணங்குகிறோம்

    .ஓம் சிவாயநமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      ஒம் நம சிவாய

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..