வியாழன், ஜூலை 11, 2024

தில்லை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 27 
வியாழக்கிழமை


தலம் கோயில் 
- தில்லை -


இறைவன்
ஸ்ரீதிருமூலநாதர்
ஸ்ரீஆனந்த நடராஜர்

அம்பிகை
ஸ்ரீஉமையாம்பிகை 
ஸ்ரீசிவகாமசுந்தாி

தல விருட்சம்
தில்லைமரம்
தீர்த்தம் 
சிவகங்கை


தில்லைத்
 திருச்சிற்றம்பலத்தில் நிகழ்கின்ற ஆனிப் பெருந் திருவிழாவினை முன்னிட்டு இன்றொரு திருப்பதிகம்..

அப்பர் பெருமான் அருளிச் செய்த

நான்காம் திருமுறை
இருபத்து மூன்றாவது திருப்பதிகம்


பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.. 1

கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருவுரு உடைய சோதீ
திருத்தமாம் தில்லை தன்னுள் திகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தநான் காண வேண்டி நேர்பட வந்த வாறே..2

கேட்டிலேன் கிளைபி ரியேன் கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினேன் நின்றன் பாதம் நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாங் குவிமு லையாள் கூடநீ ஆடு மாறே.. 3


சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை அடிமை செய்ய
எந்தைநீ அருளிச் செய்யா யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசுங் கொல்லோ.. 4

கண்டவா திரிந்து நாளுங் கருத்தினால் நின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரும் ஏத்த இறைவநீ ஆடு மாறே.. 5

பார்த்திருந் தடிய னேன் நான் பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே என்ப னுன்னை மூவரின் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தா உன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.. 6


பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய
ஐயநீ யருளிச் செய்யாய் ஆதியே ஆதி மூர்த்தீ
வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பைய நுன் ஆடல் காண்பான் பரம நான் வந்த வாறே.. 7

மனத்தினார் திகைத்து நாளு மாண்பலா நெறிகள் மேலே
கனைப்பரால் என்செய் கேனோ கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் நிலயங் காண்பான் அடியனேன் வந்த வாறே.. 8


நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று அழகநீ ஆடு மாறே..9

மண்ணுண்ட மாலவனும் மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திரு உருவம் விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே.. 10
 நன்றி: பன்னிரு திருமுறை

சிவாய
திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. தில்லையில் உறையும் இறையே..  நடராஜா...  தொல்லைகள் நீக்கி எம்மைக் காத்தருள்வாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு ஸ்ரீராம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி.. நன்றி..

      நீக்கு
  2. தில்லை நடராஜா சரணம்.

    தில்லை தலம் நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் எமக்கு கிடைக்கவில்லை.

    சிவசக்தி நடனப்படம் அழகாக இருக்கிறது.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்களை தரிசித்து, பதிக பாடல்களை பாடி தில்லையம்பல நடராஜரை வணங்கி கொண்டேன்.
    ஓம் நமசிவாய. சிவாய நம ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. பன்னிரு திருமுறை பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன். ஆனி திருமஞ்சனம் மூன்று முறை பார்த்து இருக்கிறேன். அடிக்கடி சிதம்பரம் போவோம்.
    நினைவுகள் வந்து போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. தில்லையம்பல நடராஜர் - ஆஹா... மகிழ்ச்சி. நேற்றைய நிகழ்வின் படங்கள் சில நண்பர் அனுப்பி இருந்தார். இங்கே உங்கள் பதிவிலும் தகவல். பாடல்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..