செவ்வாய், ஜூன் 25, 2024

கலைக்கூடம் 6


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
செவ்வாய்க்கிழமை


தஞ்சையில் கருட சேவைக்கு மறுநாள் வெண்ணெய்த் தாழியன்று கீழ ராஜ வீதியில் நெரிசல்... இருசக்கர, நாற்சக்கர வாகனங்களோடு உள்ளூர் கழிசடைகளும் புழங்கிக் கொண்டிருந்தன...

அரண்மனை அஞ்சலகத்தின் அருகில் சுவர் ஓரமாக நின்று கொண்டிருந்த முதியவர்களுடன் மோதினான் கயவன் ஒருவன்...

அப்போது அறிமுகமான பெரியவர் ஒருவர் அரண்மனைக்குச் செல்கின்ற வழியைக் கேட்டார் 

அவர் திரு ஜெகந்நாதன் (87)... விருத்தாசலத்திற்கு அருகில் ஒரு கிராமம்...

அவருக்கு வழி சொல்வதை விட அழைத்துச் சென்று காட்டி விடுவோம் என, நானும் உடன் சென்றேன்.. 

அப்போது எடுக்கப்பட்டவையே கலைக்கூடத்தின் படங்கள்..

அரண்மனையின் ஒரு பகுதியில் இரண்டு மணி நேரம் கழித்த பின்பு பெரியவர் என்னைத் தம்முடன் அழைத்துச் சென்ற இடம் - தஞ்சை ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் எதிரே ஐயன் குளக்கரையில் அமைந்திருக்கும் தஞ்சை ராஜராஜ சமய சங்கம்..

அங்கே நூற்றுக்கணக்கான அடியார்கள் தங்கியிருந்தனர்... அறச் செயலாக மூன்று நாட்களும் அவர்களுக்கு அங்கே சாப்பாடு... சாப்பாடு எல்லாருக்கும் பொது... 

பெரியவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டு நான் அங்கே அவருடன் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினேன்...
































திரு. ஜெகந்நாதன்


















கலைக்கூட வளாகத்தின் 
வேறு காட்சிகளோடு
 அடுத்தொரு பதிவில் சந்திப்போம்..

வாழ்க கலை
வளர்க தஞ்சை..

சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. படங்களை ரசித்தேன். திரு ஜெகந்நாதன் அன்பு நிறைந்தவர் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. கொங்கணேஸ்வரர் கோவில் என்றதும் பழைய நினைவுகள்...  என் அப்பா ஒரு தாயத்து கட்டி இருந்தார்.  அதற்கு வெள்ளிக்கிழமைதோறும் கொங்கணேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்து வரவேண்டும்.  அப்பா தாயத்தை கழற்றி எங்களிடம் கொடுத்தனுப்புவார்.  நானும் என் அண்ணனும் சென்று பூஜை நிறைவேற்றி வருவோம்.  எதற்கு அப்பா அந்த தாயத்து கட்டி இருந்தார் என்று நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அந்த அர்ச்சகர் சொல்லும் மந்திரம் "ஸ்ரீ பூர்வாசிர... " என்று தொடங்கும்.

    பதிலளிநீக்கு
  4. கலைக்கூடம் கண்டு ரசித்தேன் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. தகவல்கள் அனைத்தும் சிறப்பு. திரு ஜெகந்நாதன் - அன்பு சூழ் உலகு!

    படங்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் உலா.

    பதிலளிநீக்கு
  6. கலைக் கூடம்
    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

    கொங்கணேஸ்வரர் கோவில் ராஜ ராஜ சமய சங்கம் எனக்குப் புதியன .காணக்கிடைத்தன.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..