நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
வியாழக்கிழமை
![]() |
| ஸ்ரீ கும்பேஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகை |
பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கின்ற பெருவிழாவாகிய மகாமகம் எதிர்வரும்
ஸ்ரீ பிலவங்க வருடம் மாசி மாதம் வியாழக்கிழமை இருபத்தாறாம் நாள் (9 மார்ச் 2028)
- என்று திருக்குடந்தை சிவாச்சாரியார்களாலும் பட்டாச்சாரியர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது..
பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை பிரஹஸ்பதியாகிய குரு - சிம்ம ராசியில் வரும் காலத்தில், மாசி மாதத்தின்
மக நட்சத்திரத்தில் நீராடுகின்ற நன்னாளே மகாமகம்...
அன்று பௌர்ணமியும் நிகழும்..
குடந்தை
ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்
தேவாரம்..
ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்த னாரே.. 6/75/10
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
***

ரொம்ப முன்னாலேயே சொல்லி விட்டார்கள் போல. ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்.
பதிலளிநீக்குஉண்மை தான்...
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
மகாமகம் சென்றதில்லை. ஆனால் சாதாரணமாகவே கூட்டம் நிறைந்த இடங்கள் எனக்கு ரொம்பவே அலர்ஜி.
பதிலளிநீக்குஓ... அப்படியா!..
நீக்குமாசி மாத மகா மக பெருவிழா விவரம் அறிந்தேன்.
பதிலளிநீக்குஅப்பர் தேவாரம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா ...
அடுத்து வர இருக்கும் மகா மகப் பெருவிழா நாள் அறிந்தோம்.
பதிலளிநீக்குஸ்ரீகும்பேஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகையை வணங்கிக் கொண்டோம்.
ஓம் சிவாய நமக.
மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா ...