வெள்ளி, மார்ச் 13, 2026

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
திருவேங்கடம்
 

 தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ... தனதான

 கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
     வாங்கிய வேல்விழியும் ... இருள்கூருங்

கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
     மாந்தளிர் போல்வடிவும் ... மிகநாடிப்

பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
     தீங்குட னேயுழலும் ... உயிர்வாழ்வு

பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்
     வீழ்ந்தலை யாமலருள் ... புரிவாயே

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்
     வேங்கையு மாய்மறமி ... னுடன்வாழ்வாய்

பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
     பாண்டிய னீறணிய ... மொழிவோனே

வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
     வேங்கட மாமலையி ... லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா
***

8 கருத்துகள்:

  1. முருகா சரணம். முத்துகுமரா சரணம்.

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

    இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. "வேங்கடமாமலை" முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  4. இதனைப் புரிந்துகொள்வதே மிகப் பெரிய சவால். எவ்வளவு திறமையாக கவி புனைந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  5. /// வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
    வேண்டவெ றாதுதவு ... பெருமாளே..///


    வேண்டியதை அருள்வதில்
    மாமனைப் போலவே மருகன்...

    நெல்லை அவர்களுக்கு நன்றி..

    மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..