திங்கள், டிசம்பர் 15, 2025

சோம வாரம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கார்த்திகை
திங்கட்கிழமை

இன்று
ஐந்தாம் சோமவாரம்


திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை

ஆறாம் திருமுறை
திருத்தாண்டகத் திருப்பாடல்கள்

திரு ஆரூர்

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
    ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
    காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
    மான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
    திரு ஆரூர் கோயிலாக் கொண்டநாளே.. 6/34/1

திரு ஐயாறு

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
    உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
    திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1

திருப்பூவணம்

வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
    வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
    காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
    எழில்திகழுந் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.. 6/18/1

திருமறைக்காடு

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
    மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 6/23/1

திருக்கோடிக்கா


வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.. 6/81/2

திருப்புள்ளிருக்கு வேளூர்

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே.. 6/54/8

தில்லை திருச்சிற்றம்பலம்

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
    அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/1

திருச்சிற்றம்பலம்

நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் சிவாய நம
**

வெள்ளி, டிசம்பர் 12, 2025

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
சுவாமிமலை


தானதன தந்த தானன தானதன தந்த தானன
     தானதன தந்த தானன ... தனதான

ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன
     ஆரமுது கண்டு தேனென ... இதழூறல்

ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
     ஆனையுர மெங்கு மோதிட ... அபிராம

மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்
     மாயுமனு வின்ப வாசைய ... தறவேயுன்

வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக
     வாசகம்வ ழங்கி யாள்வது ... மொருநாளே..

ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்
     ஈடழிய வென்று வானவர் ... குலசேனை

ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர
     ராசதம றிந்த கோமள ... வடிவோனே

சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு
     தோளுடைய கந்த னேவய ... லியில்வாழ்வே

சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
     சுவாமிமலை நின்று லாவிய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி 
கௌமாரம்


முருகா முருகா
முருகா முருகா
**

புதன், டிசம்பர் 10, 2025

அழகே அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
கிழமை 

அமரர் சில்பி அவர்களது
கை வண்ணம்..
சில ஓவியங்கள்

தஞ்சை



மதுரை



தில்லை


திருப்பரங்குன்றம்


திரு அண்ணாமலை


 நன்றி
 
நன்றி

ஓம் நம சிவாய
**

திங்கள், டிசம்பர் 08, 2025

சோம வாரம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கார்த்திகை
திங்கட்கிழமை
நான்காவது சோமவாரம்


இன்று
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருக்கடைக்காப்பு

இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் 40

திருப்பிரமபுரம்  - சீர்காழி


எம்பிரான் எனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.. 1

தாமென்றும் மனந்தளராத் தகுதியரா உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்தன் உடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.. 2

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமா முருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக அறிந்தோமே.. 5

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே.. 6

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.. 11

திருச்சிற்றம்பலம்
 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் சிவாய நம
**

ஞாயிறு, டிசம்பர் 07, 2025

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ வீரமாகாளியம்மன் 
திருக்கார்த்திகை தரிசனம்






யாதுமாகி நின்றாய் காளி!..

ஓம் சக்தி ஓம்
**


சனி, டிசம்பர் 06, 2025

ஓம் ஹரி ஓம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
சனிக்கிழமை


மச்சநாதா   கூர்மநாதா   
வராக  நாதா  நரசிம்மா
நச்சி வந்த  வாமனனே 
பரசுராமா  ரகுராமா
மெச்சு  புகழ்  பலராமா  
ஸ்ரீ க்ருஷ்ண  கல்கியனே
இப்புவியில் வேங்கடவா  
வைகுந்தா சரண் புகுந்தேன் 
சரண் புகுந்தேன் சரண் புகுந்தேன் 
நினதடியைச் சரண் புகுந்தேன்...
**
(வேங்கடேச சுப்ரபாதம் தமிழ் ஆக்கத்தின் சில வரிகள் )


நோய் தீர்க்கும்
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்லோகம்

ஓம் நமோ பகவதே 
வாஸுதேவாய
தன்வந்த்ரயே 
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய 
த்ரைலோக்ய நாதாய 
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:

ஓம் ஹரி ஓம்
**

வெள்ளி, டிசம்பர் 05, 2025

திருப்புகழ்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை


திருப்புகழ்
திரு அருணை
(அண்ணாமலை)

அகத்துறையில்
அமையப்பெற்றது

தனனத் தனதானன தனனத் தனதானன
     தனனத் தனதானன ... தனதான

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரும்
     இறுதிச் சிறுகால்வரு ... மதனாலே

இயலைத் தருகானக முயலைத் தருமேனியில்
     எரியைத் தருமாமதி ... நிலவாலே

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
     தொலையத் தனிவீசிய ... கடலாலே

துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
     துவளத் தகுமோதுயர் ... தொலையாதோ..

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
     மடியச் சுடஏவிய ... வடிவேலா

மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
     மகிழப் புனமேவிய ... மயில்வீரா

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வயல்
     அருணைத் திருவீதியி ... லுறைவோனே

அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
     அமரர்க் கரசாகிய ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்



முருகா  முருகா
**

வியாழன், டிசம்பர் 04, 2025

தீபஜோதி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வியாழக்கிழமை




தீப மங்கல ஜோதி நமோ நம

அண்ணாமலையாருக்கு
அரோஹரா
**

புதன், டிசம்பர் 03, 2025

தீபத்திருநாள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
புதன்கிழமை


 திருக்கார்த்திகை
தீபத் திருநாள்

அண்ணாமலை தரிசனம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் 10


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.. 1

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.. 2


பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல் நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே..3

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே..11
-: திருஞானசம்பந்தர் :-
திருச்சிற்றம்பலம்

 நன்றி
பன்னிரு திருமுறை

தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்


அண்ணாமலைக்கு அரோஹரா
அண்ணாமலைக்கு அரோஹரா
அண்ணா மலைக்கு அரோஹரா..
**

திங்கள், டிசம்பர் 01, 2025

அண்ணாமலை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
திங்கட்கிழமை

இரண்டாம் சோமவார தரிசனம்


எதிர்வருகின்ற
கார்த்திகை கிரிவலம்
அனைவருக்கும் நலம் தருவதாக!..


காணொளிக்கு நன்றி

அண்ணாமலைக்கு அரோஹரா


இன்று
திங்கட்கிழமை காலை 6:45 மணியளவில்
கும்பகோணம்
ஸ்ரீமங்களாம்பிகை சமேத
ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 
திருக்குடமுழுக்கு

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே..
-: திருநாவுக்கரசர் :-

சிவ சிவ
**