நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 7
குறளமுதம்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.. 7
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசம் உடையாய் திறவேலோர் எம்பாவாய்.. 7
ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 7
ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக் காப்பு
திருப்பழனம்
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.. 1/67/1
**
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

மார்கழி ஏழாம் நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
பாதந்தொழுதால் பாவம் தீர்ப்பார் புலியினுரிதோலார்
பதிலளிநீக்குஅமுதே அவன் கனியே அவன் என எங்களையும்
உணர வை திரு உத்தரகோசமங்கையுறை திருப்பெருந்துறை சிவபெருமானே - உனைப்
பணியும் பண்பு கொடு, உன்னருள் வேண்டி
அடிதொழுகிறோம் அன்பு காட்டு ஆண்டவனே...
அருமை.. அருமை
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை மார்கழி ஏழாம் நாள் வாழ்த்துகள். இன்றைய குறளமுதம், திருப்பாவை பாசுரம், திருப்பள்ளியெழுச்சி, திருக்கடைக் காப்பு பாடல்கள் என அனைத்தும் அமுதமாக தித்திக்கின்றது.
இறைவனை வழிபட கொடுத்து வைத்திருக்க வேண்டும். இறைவனை வழிபட்டவர்களை நினைக்கவே பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நீங்கள் தினமும் எங்களை அவ்வாறு நினைக்க வைத்து புண்ணிய பாதைக்கு நல்லதொரு வழி காண்பித்து வருகிறீர்கள் . உங்களின் இந்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி.🙏. மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும்
நீக்குகருத்தும்
வாழ்த்துரையும்
மகிழ்ச்சி
நன்றியம்மா