செவ்வாய், நவம்பர் 19, 2024

குதூகலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 4
செவ்வாய்க்கிழமை



காச் மூச் என்ற சத்தத்துடன்
வீட்டின் அருகில் சகஜமாக தத்தித் தத்தி திரிகின்ற பறவை..

பொதுவாக தவிட்டுக் குருவி என்பர்..

மஞ்சள் நிற அலகு  மெல்லிய கால்கள். சின்னதாக கண்கள். தவிட்டின் நிறத்தில் சிறகுகள்.. 




இவற்றின் வகைப்பாட்டியல் பெயர் Jungle Babbler.  

Green Babbler, Yellow  Babbler என இரண்டு வகை..
Yellow  Babbler  
தான் நம் நாட்டில் 
நம்முடன் தத்தித் திரிபவை..

இங்கே எங்கள் வீட்டருகில் தவிட்டுக் குருவிகள் ஏராளம்.. 

விடியற்காலை யிலேயே வந்து விடுவார்கள்... 

குடியிருக்கின்ற வீட்டின் மேல் தளத்தின் வெளிப் புற நடைவெளியில் துளசி கற்பூரவல்லி இருக்கின்றன..

அதைச் சுற்றி ராஜாங்கம்..

சோறு இட்லியை விட - தேங்காய்த் துருவல், ஓமப்பொடி, பிஸ்கட் - என்றால் குஞ்சு குளுவான்களுடன்
குதூகலம்..

வெளியில் வைக்கப்பட்டவை
தீர்ந்து விட்டால் உரிமையுடன் வீட்டுக்குள் எட்டிப் பார்த்து சத்தமிட்டுக் கேட்பது என்று சுதந்திரம்...

பெரும்பாலான சமயங்களில் காக்கைகளும் இவர்களுடன்..

கீழுள்ள படங்கள் 
Green Babbler இனம்... 

இவர்களைப் பற்றி விக்கியில் தெரிந்து கொண்டு இணையத்தில் சேகரித்த செய்திகள் இன்றைய பதிவில்.




இன்றைய
காணொளிகளுக்கு 
 நன்றி


சிறு குடும்பம்
சீரான வாழ்வு
என்றாலும்
கதைக்கு ஆகாது...


அன்பு அன்பு 
அன்பு

எங்களுடன் அவர்களும் அவர்களுடன் நாங்களும் மகிழ்கின்றோம்..


கொக்கின் இடத்தில் மனிதன் ஒருவனை நினைத்துப் பார்க்கவும்.

காக்கை குருவி
எங்கள் ஜாதி
-: மகாகவி :-

ஓம் நம  
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. காணொளிகள் சுவாரஸ்யம். தகவல்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. வீட்டைச் ச்சுற்றி இவ்வளவு குருவிகள் சுற்றி வந்தாலே ஆனந்தம்தான்.  அதிலும் அவை நம்மீது நம்பிக்கை வைத்து, பழகி, சுதந்திரமாக அருகில் வந்தால் இன்னும் ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களும், காணொளிகளும் கண்டு களித்தேன். சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு இந்தப்பதிவு மிகவும் பிடிக்கும். இந்தப்பதிவை படித்தவுடன் அவர் நினைவுதான் எனக்கு வந்தது. அவர் இந்தியா வந்தவுடன் தவறாது இந்தப்பதிவுக்கு வருவார். தங்களின் அழகான இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. மனம் கவரும் பகிர்வு. அவைகளுடன் மகிழ்ந்திருங்கள்.

    "காக்கை குருவி நம்ஜாதி...." எமக்கும் இவற்றுடன் உறவாட மிகவும் பிடிக்கும்.
    மாடி வீடு என்றாலும் இங்கும் தவிட்டுக்குருவிகள், கருக்குருவிகள் கொண்டைக்குருவி,மைனாக்கள்,காகம்,புறாக்கள்,, என தினமும் உணவுண்டு செல்கின்றன. கண்டு மகிழ்கிறோம்.

    கருக்குருவியார்கள் தொடர்ந்து கூடுகட்டி குஞ்சுவைத்து இருக்கிறார்கள்.நகரத்தில் அவைக்கும் வாழ இடம் வேண்டுமே.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..