திங்கள், நவம்பர் 18, 2024

சோமவாரம் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 3
திங்கட்கிழமை

முதல் சோமவாரம்

சகல சிவாலயங்களிலும்
நூற்று எட்டு
 சங்குகளால் அபிஷேகம்
நடத்தப்படுகின்ற நாள்..


இன்றைய
தரிசனம்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்.,
தஞ்சாவூர்


ஸ்வாமி
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்



தேவர்களுக்கு தஞ்சம் அளித்துக் காத்தருளிய இத்தலத்தில்
குபேரன் வழிபாடு செய்து  மீண்டும் செல்வங்களைப் பெற்றதாக தல புராணம்..









அஷ்ட லக்ஷ்மி
மண்டபத்தில் குபேர தரிசனம்










இத்தலத்தில் 
ஸ்ரீ ஐயப்பனுக்கு நேர் எதிராக நவக்கிரகங்கள்..


ஸ்வாமி அவர்களை அடக்கி ஆள்வதாகவும் தோஷங்களை விலக்குவதாகவும் ஐதீகம்


ஸ்ரீ சிவவாக்கிய சித்தர்
**

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. தஞ்சபுரீஸ்வரரை தரிசித்து மகிழ்ந்தேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. இன்றைய படங்கள் மிகவும் கவர்ந்தன, அதிலும் தஞ்சபுரீஸ்வர்ர்.

    பதிலளிநீக்கு
  3. மொபைலில் எப்படித்தான் படங்களோடு பதிவு வெளியிடுகிறீர்களோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று சிரமத்துடன் தான் பதிவுகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றேன்..

      தங்கள்
      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.

      நன்றி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தஞ்சபுரீஸ்வரர் கோவில் படங்களை பார்த்து இறைவனை தரிசனம் செய்து கொண்டேன். கோவில் பற்றிய விபரமும் அறிந்து கொண்டேன். கார்த்திகை சோமவாரமாகிய இன்று இறைவனை தரிசிக்க செய்த தங்களது பதிவுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள்
      அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.

      நன்றி ..

      நீக்கு
  5. சோமவார நாளில் தஞ்சபுரீஸ்வரர் தரிசனம் பெற்றோம்.

    படங்கள் விபரங்கள் அருமை.

    எங்கள் அம்மா இருக்கும்போது சோமவாரம் விரதம் இருப்பவர் சிவன் கோவில் சென்று வணங்கி மாலையில் உணவு உண்பவர்.இப்பதிவு காணும்போது அனைத்தும் நினைவில்...

    ஓம் சிவாயநமக.
    அனைவர் நலனுக்கும் அவனருளை வேண்டி நிற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மேல் விவரங்களும் வேண்டுதலும் மகிழ்ச்சி.

      நன்றி மாதேவி..

      நீக்கு
  6. ஆஆஆஆ சோமவாரம் எனப் பார்த்ததும்தான் திடுக்கிட்டு விட்டேன் கார்த்திகை பிறந்துவிட்டதோ என:).. அம்மா சோமவாரம் விரதம் பிடிப்பா, நான் பிடிப்பதில்லை.

    தஞ்சாவூரில், திங்களூர் கோயில் போய்ச் சந்திரனாரை வணங்கி வந்தோம்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..