நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 23
புதன் கிழமை
நெஞ்சில் பதிந்த தமிழ்
பள்ளி நாட்களில் மனதில் பதிந்த தமிழ்ப் பாடல்கள்
இப்படியான தகவமைப்பில் நான் இறங்கி எனது வித்துவத்தைக் (வித்வத்தைக்) காட்டுவதற்கு வாய்ப்பளித்த
ஏற்றமிகு எபி யின் எங்கள் தங்கம்
ஈடு இணை இல்லா இளமையின் சிங்கம்
திரு கௌதம் ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...
இப்படியான டமாரம் (!) இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும்..
(எல்லாம் தலையெழுத்து - எனும் முணுமுணுப்பு கேட்கின்றது..)
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று..
- எனும் கொன்றை வேந்தன் வரிகளும்
அறம் செய விரும்பு ஆறுவது சினம் - எனும் ஆத்திச்சூடி வரிகளும்
பள்ளி செல்வதற்கு முன்னரே அன்றைய வழக்கப்படி அன்னையிடம் பால பாடம்..
அப்போதெல்லாம்
ஐந்து வயது முடிந்த பின்னரே பள்ளிக்கூடம்..
முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்வதும் வருவதும் தான்...
ஆறாம் வகுப்பில் தான்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
எனும் பாடல் பயிற்றுவிக்கப்பட்டு மனதில் பதிந்த நினைவு..
ஏழாம் வகுப்பில் ,
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே..
எனும் திருவாசகப் பாடலொடு கணித வாய்ப்பாடுகள் -
" ஓரோன் ஒன்னு ஈரோன் ரெண்டு.. "
அந்த நிலையிலேயே எட்டாம் வாய்ப்பாடு வரை எனக்கு மனனம்..
எட்டாம் வகுப்பில் பதினாறாம் வாய்ப்பாடு வரை மனனம்..
இந்தத் திறனின் அடிப்படையில் தான் குவைத்தில் கணினியில் அமர்வதற்கு முன் கிடங்குக் கணக்குகளின் கூட்டுப் புள்ளிகளில்
ஏழேழும் பதினாலு ஆறும் இருபது
இருபது எட்டும் இருபத்தெட்டு
இருபத்தெட்டும் நாலும் முப்பத்திரண்டு
முப்பத்திரண்டும் பதினைஞ்சும் நாற்பத்தேழு நாற்பத்தேழும் பண்ணண்டும்
அம்பத்தொம்போது!..
என்று - ஒற்றையாய்க் கூட்டி அப்படியே தாவி இரட்டை இரட்டையாய்க் கூட்டிக் கொண்டே மேலே சென்று நூற்று எட்டு என்று கீழே எழுதும் போது அருகில் இருப்பவர் ஆச்சரியப்படுவர்...
கால்குலேட்டரைக் கையில் வைத்துக் கொண்டு தட்டுத்
தடுமாறி -
எனது கூட்டுப் புள்ளியை சரி பார்த்து வியப்படைவார்கள்...
ஈராயிரமாவது ஆண்டில். நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் கணினிக்குள் நுழைந்த போது மனக் கணக்கிற்கும் கூட்டுப் புள்ளிக்கும் அவசியம் இல்லாமல் போயிற்று..
அது கிடக்கட்டும்..
ஏழாம் வகுப்பில் மனதில் பதிந்த முதல் தேவாரத் திருப்பாடல்
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணிய உன்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி இருந்தருள் செய் பாதிரிப் புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே..4/94/8
-: திருநாவுக்கரசர் :-
நினைவெல்லாம்
தொடரும்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
நல்லதொரு தொடரின் தொடக்கம். தொடரட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீராம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குசிறப்பான ஆரம்பம்..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநெஞ்சார்ந்த நன்றி வெங்கட்
//ஏற்றமிகு எபி யின் எங்கள் தங்கம்
பதிலளிநீக்குஈடு இணை இல்லா இளமையின் சிங்கம்
திரு கௌதம் ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...// ஆ ! மயக்கம் வருகிறது!
அழைப்பிற்கு இணங்கி வந்தமைக்கு மகிழ்ச்சி..
நீக்குநெஞ்சார்ந்த நன்றி..
நல்லதொரு தொடக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குதங்கள்
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நெஞ்சார்ந்த நன்றி ஜி
எனக்கு 'பிறக்கினும் புண்ணியா உன் அடி' என்றுதான் பாடம். இப்போவும் கால்குலேட்டர் இல்லாமல்தான் பெரிய எண்களைக் கூட்டுவேன். ஆனால் அனைவரும் கால்குலேட்டருக்குத் தாவி பலப் பல வருடங்களாகின்றன (கடைக்காரர் முதற்கொண்டு)
பதிலளிநீக்குஉண்மை தான்..
நீக்குதங்கள்
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நெல்லை அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்கள் நினைவெல்லாம் பகுதி நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள். நானும் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நினைவெல்லாம் பகுதி சுவாரசியம்.
பதிலளிநீக்குசிறுவயதில் எமது அந்தக்காலத்தையும் நினைவில் கொண்டு வருகிறது. தொடருங்கள்.
நினைவெல்லாம் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குசிறு வயது மனப்பாட பாடல்கள் பகிர்வு அருமை.
தொடர வாழ்த்துகள்.