நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 29
சனிக்கிழமை
தஞ்சை மேல ராஜவீதி ஸ்ரீ க்ருஷ்ணன் கோயிலில் ஸ்வாமி திருவீதி எழுந்தருள கோகுலாஷ்டமி வழுக்கு மரம் உறியடி
உற்சவம் கடந்த வாரத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது..
இன்றைய நாளில்
காட்சிப் பதிவாக -
தஞ்சை நடுக்காவேரி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் சிறப்பாக நடத்தப்பெற்ற கோகுலாஷ்டமி உறியடி உற்சவம்..
காணொளிக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
உழந்தாள் நறுநெய் ஒரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
முகிழ்முலையீர் வந்து காணீரே.. 26
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளியிழையீர்! வந்து காணீரே.. 30
வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
காரிகையீர்! வந்து காணீரே.. 35
-:- பெரியாழ்வார் :-
நன்றி
நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம்
ஓம் ஹரி ஓம்
***
உறியடி காணொளி, புகைப்படங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
கோகிலாஷ்டமி உறியடி காட்சிகள் காணொளி அருமை கண்டு கொண்டோம். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி
உறியடி காணொளி அருமை.
பதிலளிநீக்குதிவ்யபிரபந்த பாடலை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி
உறியடி காணொளி மற்றும் பதிவு கண்டேன். மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே அளிக்கட்டும்.
பதிலளிநீக்கு