வெள்ளி, செப்டம்பர் 13, 2024

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 28
வெள்ளிக்கிழமை

தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் .. தனதான


பரிவுறு நாரற் றழல்மதி வீசச் 
சிலைபொரு காலுற் ... றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத் ... தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித் ... தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற் ... றணைவாயே

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத் 
தொடுகும ராமுத் ..  தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
திருவளர் சேலத் .. தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத்
 தனிமயி லேறித் ... திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி நோதப் ... பெருமாளே..
- அருணகிரிநாதர் :-


இரக்கமும்  அன்பும் 
இல்லாத நிலவு
நெருப்பைப் போல்  இருப்பதாலும்,

பொதிகை மலைத்
 தென்றல் அனலாக வீசுவதாலும்
குளிர்  சோலைக் குயில்  சோகத்துடன் கூவுவதாலும்,
குழல் ஒன்று தனியாய்  ஒலிப்பதாலும்,

மீன் போன்ற கண்கள் சோர்வடைய, 
தனிமையில் இருக்கும் இந்தப் பெண்  

தனியே கிடந்து  தளர்ச்சியுறாமல், 
ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ்வதற்கு,  
மார்பினில் ரத்ன  மாலையுடன் 
அருளே உருவாகத் 
திகழ்கின்ற  முருகப் பெருமானே, 
நீ வந்து அவளை  அணைவாயாக..


கிரெளஞ்ச மலையின் மீது வேலை ஏவி
அது பிளவுபட்டு
அழியும்படிக்குச் செய்த திருக்குமரனே..

இயல், இசை, நாடகம் என,  விளங்குகின்ற
 தமிழுக்குப் பெருமானே,

ஜோதி ஸ்வரூபனாகிய்
ஈசனுக்குப் பிள்ளையாகி,

திருமகள் வளர்கின்ற சேலம் எனும் 
பதியில் வீற்றிருப்பவனே..

போருக்கு எழுந்த 
ஏழுமலைகளும், சூரனும், 
அவனது சுற்றத்தாரும் மாண்டு 
அழிந்து போகும்படி

ஒப்பற்ற மயில் மீதமர்ந்து 
உலகை வலம் வந்தவனே..

புள்ளிகளுடன் கூடிய 
யானை முகம் கொண்ட கணேசப் பெருமானுக்கு
 இளையவனாகிய அற்புதம் மிகுந்த பெருமாளே...
*

முருகா  முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. படிக்கச் சந்தத்தோடு இருந்தாலும், திருப்புகழைப் பிரித்துப் பொருளுணர்ந்து படித்தால் அதிக இன்பம் பெறலாம். மாதிக்கு இரு கயல் சோர, உற்று அணைவாயே போன்று பல

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. முருகா முருகா

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நெல்லை அவர்களுக்கு
      நன்றி

      நீக்கு
  2. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா முருகா

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  3. முருகா உன் சிரிப்பு... முத்தமிழின் தனிச்சிறப்பு... குமரா உந்தன் சிரிப்பு... குழந்தையின் புன்சிரிப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா முருகா

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பகிர்வு சிறப்பு... அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா முருகா

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  5. வெள்ளி நாளில் முருகன் திருப்புகழ்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா முருகா

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..