செவ்வாய், ஜூலை 23, 2024

கரிசாலை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 26
புதன்கிழமை


கரிசலாங்கண்ணி..

தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் கரிசாலை, கையாந்தரை
என்பனவும் செல்லப்பெயர்கள்..

பிரிங்கராஜ் என்று வடநாட்டில் பெயர்..
(நன்றி : விக்கி)

ஈர நிலத்தில் விளைகின்ற மூலிகை..

வயல் வரப்புகளிலும் குளக்கரைகளிலும் தளதள என்று அடர் பச்சை நிறத்தில் மண்டி வளர்கின்ற அற்புதம்..

மஞ்சள் வெள்ளை எனப் பூக்கின்ற இரு வகைகள்.. கிழக்கு ஆசிய நாடுகளில் வேறு சில ரகங்களும் இருக்கின்றனவாம்..

காயகல்ப மூலிகையான
கரிசலாங்கண்ணி சற்றே கசப்புச் சுவை உடையது..


சிறு பருப்புடன் இக்கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் மஞ்சள் காமாலை முதலான பல்வேறு நோய்கள் குணமாவதாக சித்த வைத்தியத்தில் சிறப்பு..

தகுந்த சித்த மருத்துவரிடத்தில் ஆலோசனை பெறுவது அவசியம்..
 

வெள்ளைக் கரிசலாங்கண்ணியை தலைமுடியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது வழக்கம்..

இலையை உலர்த்திப் பொடியாக்கிப் பல் துலக்குவதில் தொடங்கி மது, புகையிலை இவற்றில் இருந்து மீள்வது வரைக்கும் கரிசாலாங்கண்ணி கை கொடுக்கின்றது..


இதனாலேயே அருட்பிரகாச வள்ளலார் ஸ்வாமிகள் கரிசாலாங்கண்ணியை தெய்வீக மூலிகை என்று புகழ்ந்துரைத்தார்..


ரத்தச் சோகை, இளநரை, பார்வைக் குறைபாடுகள், பல் நோய்கள், சளி, ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள், ரத்த அழுத்தம் என, அனைத்திற்கும் கரிசாலாங்கண்ணி பயனாகின்றது.. 

மஞ்சள் வெள்ளை இரண்டிலுமே மருத்துவ குணங்கள் இருந்தாலும், மஞ்சள் கரிசலாங்கண்ணியே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது..
( மருத்துவக் குறிப்புகள் நன்றி : விக்கி )


கரிசலாங்கண்ணித் தைலத்தினால் கபாலச் சூடு குறைகின்றது.. இதனால் நீரிழிவு முதலான பற்பல நோய்களுக்குத் தீர்வு கிடைக்கின்றது...

இதனால், மார்க்கெட்டிங் வாலாக்களுக்கு என்ன பிரயோசனம்?..

அதனால் தான் நமது கவனத்தைச் சிதற அடிப்பது!..


கரிசாலாங்கண்ணித்
தைலம் தயாரிக்கின்ற முறைகள்..

1)
கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதை 200 மிலி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி எடுத்து - எண்ணெயை தலைமுடிக்கு தேய்த்துக் கொண்டால் போதும்.. கூந்தல் வளர்ச்சி பெறும். முடி உதிராது.. பொடுகுகள் ஏற்படாது..

2)
கரிசலாங்கண்ணி இலைகளைக் கழுவி விட்டு மெல்லியதாக நறுக்கி 200 மிலி சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் வாணலியில் மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் சுட வைக்கவும்..

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தீயை அணைத்து 
விட்டு, எண்ணெயை ஆற வைக்கவும். 

ஆறியதும் வடிகட்டி -
தூய்மையான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். 
சில நாட்களுக்கு வெயிலில் காய வைத்து, அதன் பின், எண்ணெயைப்  பயன்படுத்தவும்..

கரிசலாங்கண்ணியின் ஊட்டச் சத்துக்கள் முழுதுமாக தேங்காயெண்ணெயுடன் கலந்திருக்கும்..

அவ்வப்போது இதே போலத் தைலம் தயாரித்து தினமும்
பயன்படுத்துவது நல்லது.. 

நம்மைப் போன்ற ஏழை எளியவர்களுக்கு
வெட்டிச் செலவு மிச்சம்..

ஆனால், 

ஹேர் பாலுக்கு டிரை செய்றேன் நானும் ஜின் ஜினக்கா ஷாம்பூ!.. -

என்ற, 
அல்ப பெருமை டமில் குமரிகளுக்குக் கிடைக்காதே!..

இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. சிறப்பான குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. மாயவரத்தில் தோட்டத்தில் வைத்து இருந்தேன்.
    மஞ்சள் கரிசலாங்ககண்ணி நல்ல மூலிகை செடி. அதன் விவரங்கள் அருமை.
    எண்ணெய் காய்ச்சி தேய்த்து கொள்ள குறிப்பு அருமை.
    இயற்கையே இறைவன், இறைவனே இயற்கைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர் பிடிப்புள்ள இடங்களில் வளரக் கூடியது...

      எங்கள் வீட்டிலும் இதன் பயன்பாடு இருந்தது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான குறிப்புகள். முன்பு இந்தக் கீரை வீட்டுத் தோட்டத்திலேயே இருந்தது. தலைநகர் வாழ்க்கையில் இழந்தவையில் வீட்டுத் தோட்டமும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை..
      உண்மை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. கருசலாம் கண்ணி நல்ல குறிப்புகள்.

    எங்கள் வீட்டில் தொட்டியில் வளர்த்துள்ளேன் சட்னி செய்வேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..