நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி முதல் நாள்
புதன்கிழமை
தக்ஷிணாயன புண்ய காலம்
ஆண்டின் நான்காவது மாதம்..
ஜோதிட இயலின்படி கற்கடக மாதம்..
சூரியனின் பயணத்தில் தக்ஷிணாயண புண்ணிய காலம் ஆடியில் தொடங்குகின்றது..
வழிபாட்டிற்கு உகந்ததாக ஆடி மாதம் திகழ்கின்றது..
ஆனி மாதத்தின் தொடக்கத்திலேயே அங்குமிங்குமாக பரம்படித்தல், எருவிடுதல் என,
வேளாண் பணிகள் தொடங்கப்பட்டாலும்
மேட்டூரிலும் அடுத்து கல்லணையிலும் காவிரிக்குக் கதவுகள் திறந்து விடப்பட்டன என்ற செய்தியே விவசாயிக்கு நாடி நரம்புகளில் புது இரத்தம் பாய்ந்த மாதிரி இருக்கும்...
ஆறுகளில் புது வெள்ளம் பெருக்கெடுக்கும் நாளே விவசாயிகளுக்குப் பொன்னாள்..
மணற்தடத்தில் ஊர்ந்து வருகின்ற ஆற்று நீரை மங்கலகரமாகத் தொழுது வணங்கி தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர்...
காளைகளின் கழுத்து மணிகள் கணகணத்த காலம் காற்றோடு போய் விட்டது.. இன்றைக்கு உழவுப் பணிகள் இயந்திர மயம்...
அன்னலக்ஷ்மி ஆராதிக்கப்படுகின்ற மாதம் ஆடி..
ஆடிப்பட்டம் தேடி விதை.. - என்ற தொல்லறிவின் மாதம்...
ஆடி மாதமானது விதைகள் முளைப்பதற்கு தகுந்த மாதம்.. ஆடியின் பருவநிலை சிறப்புடையது..
ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப் பெருக்கு என, மக்களால் போற்றி வணங்கப்படுகின்றது..
புதுமணத் தம்பதியர்க்கு மாங்கல்யப் பெருக்கு விசேஷமாக நடத்தப்பெறும்..
ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பதினெட்டு, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் என அடுத்தடுத்து வழிபாட்டிற்கான நாட்கள்..
ஸ்ரீ வராஹி அம்மன் வழிபாடும்
சப்த கன்னியர் வழிபாடும் ஆடியின் சிறப்புகள்..
வேம்பு தழைக்கின்ற மாதம் ஆடி..
மழைக்கு உரியவளாகக் கருதப்படுகின்ற மாரியம்மன் கோயில்களில் ஆடி மாத வைபவச் சிறப்புகள் சொல்லி முடியாதது..
பசித்த வயிற்றுக்கு அன்னம் எனும் ஆடிக்கூழ் நேர்ச்சை மகத்தானது...
ஆடி மாதம் விண்ணோர் தமக்கு அந்திப் பொழுது..
விளக்கேற்றும் நேரம்..
இறை வழிபாட்டிற்கு உரிய நேரம் இது...
நமது பண்பாட்டில் பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அந்தி நேரத்தில் - வீட்டிலோ வெளியிலோ - சாப்பிடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.. இப்போது அப்படி ஏதும் இல்லை..
மாலை நேரத்தில் குறிப்பாக புலால் உணவகங்களில் அலை போல மக்கள்..
இதே போல அந்திப் பொழுது.. விளக்கு வைக்கும் நேரம் - என்று பணம் எடுப்பதற்கோ கொடுப்பதற்கோ அனுமதி கிடையாது..
கலி காலத்தில் ஆடி மாதத்தின் நாட்கள் அற்புதமாக ஆடம்பரமாக இருக்கின்றன..
துணிக்கடையில் இருந்து கறிக்கடை வரைக்கும் ஆடித் தள்ளுபடி போட்டு விட்டார்கள்..
மக்களின் கையில் இருக்கின்ற காசைப் பிடுங்கி விட வேண்டும் என்ற உத்வேகம்...
நமது கையிருப்பைக் குறைப்பதற்காக நமது வீட்டுக்குள் வந்து சின்னப் பெண்கள் வண்ண மயமாக குலுங்கிக் குலுங்கி ஆடுகின்றதைக் காணும் போது உற்சாகமாக இருக்கின்றது..
ஆகவே விரும்பியவர்கள் விரும்பியவாறு
ஆடித் தள்ளுபடி எனும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விருப்பப்பட்ட நன்மைகளைத் தேடி அழைத்துக் கொள்ளலாம்..
பெண்மை சிறப்பிக்கப்படுகின்ற மாதம் ஆடி மாதம் எனில் மிகையல்ல..
வாழ்க நலம்
சிவாய நம ஓம்
***
பக்திபூர்வமான கற்கடக மாதத் தொடக்கம். வரிசைகட்டி விசேஷங்கள் வரும்.
பதிலளிநீக்குவரிசை கட்டி வருகின்ற விசேஷங்களை வரவேற்போம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
"ஆடிப்பட்டம் தேடிச்செந்நெல் விதை போட்டு...
பதிலளிநீக்குகோடிச் செல்வம் சேர சம்பா பயிராச்சு...."
இளையராஜா அனுபவித்து இசை அமைத்திருப்பார்!
ஆம்.
நீக்குஇனிமையான பாடல்..
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
// துணிக்கடையிலிருந்து கறிக்கடை வரைக்கும் ஆடித்தள்ளுபடி.. //
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா... வியாபாரிகள். பணம் ஒன்றே பிரதானம் என்று ஆன காலம்.
பணம் ஒன்றே பிரதானம் என்று ஆன காலம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
தலைப்பைப் படித்ததும் தேடி விதை என்ற சொற்றொடர் நினைவுக்கு வந்தது. இதையெல்லாம் கற்றுக்கொடுப்பதை பள்ளிகளில் நிறுத்தி ஐம்பது வருடங்களாகிவிட்டனவோ?
பதிலளிநீக்குசொல் விளையாட்டில் வரும்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி நெல்லை..
ஆடி மாதம் சிறப்புகளை சொல்லும் பதிவு அருமை.
பதிலளிநீக்குதொடர்ந்து வரும் கோவில் விழாக்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் .
படங்கள் எல்லாம் அருமை.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
தரிசனம் சிறப்பு ஜி
பதிலளிநீக்குஒதுக்கி வைத்த ஆடியை தூக்கி நிறுத்தி வைத்தது இன்றைய வணிக மையங்கள்.
உண்மை தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஜி..
ஆடி மாதம் சிறப்புகள் பலவும் விரிவாக கண்டோம். வாழ்க பயிர்செய்கை.
பதிலளிநீக்குஇன்றைய ஆடிப் பிறப்பு நாளில் பனங்கட்டி உழுந்துமா அரிசிமா தேங்காய் பல்லுகள் கலந்து "ஆடிக்கூழ்:" எங்கள் பக்கங்களில் வீடுகளில் செய்து படைப்பார்கள். சிலர் கொழுக்கட்டையும் செய்வார்கள்.
'ஆடி"யை வரவேற்போம்.
ஆடியை வரவேற்போம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஆடி மாதத்தின் சிறப்புக்களை குறித்த அலசல்கள் நிறைந்த பதிவை ரசித்து வாசித்தேன். ஆடியில் அம்மன் அருளால் அனைவரது வாழ்வும் சிறந்து விளங்கட்டும்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
ஆடி மாதத்தின் சிறப்புகள் சொன்ன பகிர்வு - நன்று. இன்றைக்கு எல்லாமே வியாபார மயம் தான்.
பதிலளிநீக்குஇன்றைக்கு எல்லாமே வியாபாரம் தான்!..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி வெங்கட்..