செவ்வாய், ஜூலை 02, 2024

புளிப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 18
செவ்வாய்க்கிழமை

உணவுத் திருவிழா 2


இன்று புளிப்புச்சுவை

உணவில் நிகழும்  
மாற்றங்களுக்கு புளிப்புச் சுவையே காரணமாகின்றது..

இது அதிகமாயின், தாக உணர்வை அதிகரிக்கும். 
பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற இன்னல்களை உண்டாக்கும். உடல் தளரச் செய்யும்..
(நன்றி விக்கி)

எலுமிச்சை, புளிச்சக் கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி புளி,  மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது..


எலுமிச்சை  சாதம் 

தேவையானவை :
சீரகச் சம்பா சோறு  2 Cup
எலுமிச்சம் பழம் 2
மஞ்சள் தூள் 1⁄2 tsp
பச்சை மிளகாய் 2
பெருங்காயம்ஒரு சிட்டிகை
வறுத்த வேர்க்கடலை கையளவு

தாளிக்க :
நல்லெண்ணெய் தேவைக்கு
கடுகு - 1⁄2 tsp
உளுத்தம்பருப்பு - 1 tsp
கடலைப் பருப்பு - 1⁄2 tsp
சீரகம் - 1⁄2 tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
உப்பு தேவைக்கேற்ப


செய்முறை :

எலுமிச்சம் பழத்தை நறுக்கி  சாறு  பிழிந்து விதைகளை  நீக்கி விட்டு சிறிது நீர் விட்டு உப்பு, மஞ்சள்  சேர்த்துக் கலக்கி வைக்கவும். 

வாணலியில் நல்லெண்ணெயைக் காய வைத்து, இவற்றுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து 

பெருங்காயம் மஞ்சள் தூள்  உப்பு - போட்டு எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து தாளிப்பில் ஊற்றிக் கொதிக்க விடவும்..


எலுமிச்சையின் சாறு கொதித்ததும் இறக்கி -  
எடுத்து வைத்திருக்கும் சோற்றை, மேலும் சிறிது நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைத்து சில நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்..:


புளியோதரை :


புளியோதரை செய்யும் போது சற்றே குழைய வடித்த சாதத்துடன் இறுக்கமான புளிக் காய்ச்சலைக் கலந்து விருப்பமான வேர்க் கடலையையோ முந்திரியையோ வறுத்துப் போட்டு நல்லண்ணெய் தளர விட்டுக் கிளற வேண்டியது..
அவ்வளவே... 

ஆனாலும்,
வேறு வேறு பக்குவங்களும் நிலவுகின்றன..

(இங்கே, உணவின் படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை.. காரணம் பிறகு சொல்கின்றேன்.. ஆனாலும் நன்றி..)

உணவுத் திருவிழா எனச் சொல்லி விட்டு  அரைத்த மாவைத் தானே!?... - என்று நினைக்க வேண்டாம்.. 

அரைக்கப்பட்ட மாவு தான்..
சுவையையும் சுவை சார்ந்த உணவையும் தன்மைகளையும் குறிப்பதே இதன் நோக்கம்..

உணவில் புளிப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.. முயற்சிக்கவும்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

நமது நலம்
நமது கையில்

சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. இரண்டுமே, எலுமி சாதம் புளியோதரை, எனக்குப் பிடிக்கும். எலுமி சாதப் படங்கள் மிகவும் கவர்கின்றன

    பதிலளிநீக்கு
  2. எலுமிச்சை சாதம் ஏனோ சமீப காலங்களில் அலுத்துவிட்டது!  யோசித்துப்பார்த்தால் அம்மா காலங்களில் கூட எதிர்த்துப் பேசாமல் எடுத்துச் சென்று சாப்பிட்டிருப்பேன் என்று தோன்றுகிறது.  அம்மா செய்வது இன்னும் நல்லா இருக்கும்.  பஸ் செய்வதில் சில வாசனைகள் மாறுபடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ் ப்ளாக்குகள் படிப்பதில்லை என்பதால் என்னா தைரியம் இந்த ஸ்ரீராமுக்கு

      நீக்கு
  3. சமீபத்தில் நாரத்தை சாதம் சாப்பிட்டேன். ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கடைசியாக நாரத்தை சாதம் சாப்பிட்டது நெடுந்தெரு (தஞ்சை) கோவிலில்தான். அதற்கு முன்பு, திருச்சேறை சாரநாதர் கோவிலில்

      நீக்கு
  4. எலுமிச்சை நாரத்தை சாதம் புளியோதரை எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ஜீரகசம்பா ஆஹா வாசனையா இருக்கும்.

    எந்தச் சுவையுமே அளவோடு இருந்தால் நல்லதுதானே துரை அண்ணா இல்லையா?

    எலுமிச்சை வகைகள் (புளி அல்ல நான் சொல்வது) சிட்ரஸ் மிக அவசியமாச்சே. புளிக்குப் பதில் மஹாராஷ்ட்ரத்து கோக்கம் பயன்[படுத்தலாம்.

    புளிப்பு ஓவரானால் நெஞ்சக்கரிக்கும் தான். அசிடிட்டியும் உருவாகும்தான். அளவுக்கு மிஞ்சினால் என்பதுதான்....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. எலுமிச்சை சாதம், புளியோதரை இரண்டுமே பிடித்தவை தான் - குறிப்பாக புளியோதரை! இன்றைக்கு காலை எலுமிச்சை சாதம் தான் இங்கே! :)

    பதிலளிநீக்கு
  6. படங்களும் செய்முறையூம் நன்று.

    எங்கள் வீட்டில் சாதா சாதம் கறிவகைகள் தான்பெரும்பாலும். மற்றையவை எப்பொழுதாவதுதான்.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான படங்களுடன் பதிவு நன்று ஜி

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அறுசுவையின் ஒவ்வொரு அம்சத்தையும் விளக்கி வருவது நல்ல பகிர்வு. இன்றைய புளிப்புச் சுவையுடன் நேற்றைய சர்க்கரைப்பொங்கல் இனிப்பையும் படித்தேன். ஒவ்வொன்றின் படங்களுடன் செய்முறைகளும் மிக நன்றாக உள்ளது. இன்றைய பதிவில் எலுமிச்சை சாதமும், புளியோதரையும் வெகு அருமை. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. எலுமிச்சை - எலுமிச்சை சாதத்தைப் பார்த்ததும் எழுந்தது இச்சை! எலுமிச்சை சாதம் சாப்பிடும் ஆசை! சாப்பிட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. வருடங்கள்.

    என்ன செய்ய. இங்கு மனைவிக்கு அதை செய்ய எல்லாம் தெரியாது. புளியோதரை ஒரு விதம் ஒரு முறை செய்ததுண்டு.

    எலுமிச்சை சாதம் செய்முறை சொல்லிஅதைப் பரீட்சிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..