நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 3
முதல் வெள்ளிக்கிழமை
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ... தனதான
அமுத மூறுசொ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாருமெ ... னுரைகூறும்
அசடு மாதர்க்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ... னருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேசுரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி
கொடிய சூலிசு டாரணி யாமளி ... மகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரி
யுலக தாரிஉதாரிப ராபரி
குருப ராரிவி காரிந மோகரி ... அபிராமி
சமர நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி
சலில மாரிசி வாயம னோகரி ... பரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை ... யருள்பாலா
திமித மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோறுக டாவியி டேயொரு
சிலப சாசுகு ணாலிநி ணாமுண ... விடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலை
முகிலு லாவுவி மானந வோநிலை
சிகர மீதுகு லாவியு லாவிய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
இத்திருப்பாடலில்
அம்பிகையின் அருட்பெயர்களை
அழகு ததும்பிட சொல்லிச் செல்கின்றார்
அருணகிரிநாதர்..
குமரியாய்த் திகழ்பவள்
காளி என்றும் வராகி என்றும்
மகேஸ்வரி என்றும்
கௌரி என்றும் துர்க்கை என்றும்
சுராரி தேவர்களின் பக்கம் நிற்பவள்
நிராபரி பொய்யிலி
கொடிய சூலி சூலத்தினை உடையவள்
சுடாரணி ஒளி மயமானவள்
யாமளி (சியாமளி) பச்சை நிறம் உடையவள்
மகமாயி மகமாயி ஆனவள்
குறளு ரூப முராரி சகோதரி
வாமனனாக வந்த மாலவனின் சகோதரி
உலகதாரி உலகத்தைத் தரித்துப் புரப்பவள்..
உதாரி தயாள குணம் உடையவள்..
பராபரி முதன்மையானவள்
குரு பராரி குருவாகிய ஈசனுடன் இருப்பவள்
விகாரி வேறுபட்டுத் திகழ்பவள்
நமோகரி வணங்கப்படுபவள்
அபிராமி அழகு மிக்கவள்
சமர நீலி நீல நிறத்துடன் போர்க் குணம் மிக்கவள்
புராரி தன் நாயகி
திரிபுரம் எரித்த ஈசனின் நாயகி
மலை குமாரி இமவானின் புதல்வி
கபாலி கபாலத்தை ஏந்தியவள்
நன் நாரணி நற்குண நாராயணி
சலில மாரி மழை தருகின்ற மேகம் ஆனவள்
சிவாய மனோகரி சிவ பெருமானின் மனதில் திகழ்பவள்
பரை பராசக்தி
யோகி யோகீஸ்வரி
சவுரி வலிமை உடையவள்
வீரி வீரம் உடையவள்
முநீர் விட போஜனி
கடலில் எழுந்த ஆலகால
விஷத்தை அருந்தியவள்
திகிரி மேவு கையாளி
திருக்கரத்தில்
சக்கரம் ஏந்தியவள்
செய்யாள் மஹா லக்ஷ்மி (எனவும்)
ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள்பாலா அனைத்து வேதமுமாய் நிறைந்து வாணியாய் விளங்குகின்ற உமா தேவி ஈன்றருளிய பாலனே..
பெருஞ்சத்தத்தோடு தேவர்களுடன் போராடிய
அசுரரின் தலைகளில்
ஆயுதங்களைச் செலுத்தி
அங்கு கூடிய பேய்கள் ஆரவாரத்துடன்
மாமிசங்களைத் தின்று கூத்தாடும்படி வேலை எய்தவனே..
மங்கலம் நிறைந்த சோணாசலேஸ்வரது திரு அண்ணாமலையில்
மேகம் உலாவுகின்ற
கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து
அதன் சிகரத்தில்
திகழ்கின்ற பெருமாளே...
ஊறி வருகின்ற அமுதம் போல மனதை மயக்குகின்ற சொற்களுடன் - " என் வீடு அருகில் தான் அங்கே வாரும்.. " என்றபடி தெருவில்
உலாவுகின்ற பெண்களின் மாயை என்மீது படாமலும் நான் கெடாமலும் நினது அருளைத் தந்தருள்வாயாக!..
**
முருகா முருகா
முருகா முருகா
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க... முருகனடி போற்றுவோம்.
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
அன்னையின் அருட்பேர்கள் உள்ள திருப்புகழை படித்து அம்பிகையை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
முருகா.. முருகா..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆடி வெள்ளியில் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அம்மனின் விதவிதமான பெயர்களை குறித்த பாடல் அருமை. அதன் விளக்கமும், படித்துணர்ந்தேன். நல்ல விளக்கம். நல்ல பகிர்வு. அனைவரையும் அன்னையாகிய உலக மாதா காத்தருள வேண்டிக் கொள்கிறேன் . பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா.. முருகா..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ...
ஆடி வெள்ளியில் அம்மன் திருநாமங்கள் பலவும் கூறும் அழகிய பாடல். தாயே வணங்குகின்றோம்.
பதிலளிநீக்குசிவாய நமக.
ஓம் முருகா சரணம்.
முருகா.. முருகா..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி ...