புதன், ஜூன் 26, 2024

தேங்காய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 12 
புதன்கிழமை


தேங்காய்..

பழந்தமிழில் தெங்கு எனக் குறிக்கப்படுகின்ற
தென்னையின் பழம் ஆகும்...  

தெங்கம் பழம் என்று நாலடியார் கூறுகின்றது..

இன்றைக்கு தேங்காய் எனப்படும் இதில் இருந்து தான் எண்ணற்ற நலன்களும் நன்மைகளும் நமக்குக் கிடைக்கின்றன..

ஆனால் இதனை மேலை மருத்துவம் ஒத்துக் கொள்பது இல்லை..

சமீப காலங்களில் வெளி மருத்துவங்கள் -  தேங்காய், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் ஆகியன ஆபத்தானவை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன...

இப்போது விளம்பரம் ஒன்றில்-  " சேச்சே.. தலைக்குத் தேய்க்கின்ற எண்ணெய் சமையலுக்கா?.. சமையலுக்கு என தனியான தேங்காய் எண்ணெய்.. " - என்று வருகின்றது...

இனி வரும் காலத்தில் கத்தரிக்காய் பொரியலுக்கு இந்தத் தேங்காய் எண்ணெய்... உருளைக் கிழங்கு வறுவலுக்கு அந்தத் தேங்காய் எண்ணெய்.. என்றெல்லாம் கூச்சல்கள் வரக் கூடும்..

தைப் பற்றி சிந்தித்துக் கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு..


இன்று தென்னங்காயில் இருந்து நாம் பெறுகின்ற தேங்காய்ப் பாலைப் பற்றி சில வரிகள்..

குரும்பை, வழுக்கை,
இளநீர், தேங்காய், நெற்று, கொப்பரை எனப்படும் அங்கங்களுக்கு ஆங்கிலத்தில் சொற்கள் இல்லை..

பாரம்பரிய  சமையலில் பெரும்பங்கு வகிப்பது தேங்காய்..

உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் திகழ்வது தேங்காய்..


இளநீரும் தேங்காயின் தண்ணீரும் மிக மிக சுத்தமானவை..


கோடை காலத்து வெயிலின் தாக்கத்திற்கு  இளநீர் தான் அருமருந்து...

நல்ல குணம் உடைய மக்களை தென்னைக்கு ஒப்பாகக் கூறுகின்றார் ஔவையார்..

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தரு தலால்..
-: மூதுரை :-

உலோபிகளின் செல்வம் நாய் பெற்ற தேங்காய்க்கு இணையானது என்கின்றது நாலடியார்..

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்.


தேங்காய் பாலில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளன. 

 Vitamin C, E,  மற்றும்  B Complex, Iron, Pottcium மற்றும் Magnesium  போன்ற தாதுக்கள் உள்ளன. 

குறிப்பாக உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நமது உடலிலின் நோயெதிர்ப்பு சக்தியை சிறப்பாக்குகின்றது, 
தேங்காய்ப் பால் எலும்பின் வளர்ச்சி ஆற்றல் ஆரோக்கியம் இவற்றில்
 பங்களிக்கின்றது..

தேங்காய் பால் அடிக்கடி அருந்துபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ்  அதிகம் சேர்கின்றது.. இதனால் எலும்புருக்கி நோய்  ஏற்படுவதில்லை.. 

மாதத்திற்கு ஒருமுறை   நாள் முழுவதும்  தேங்காய் பாலை மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீங்குகின்றன..
இரத்தம் சுத்தமாகின்றது.  உடல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றது.. 

தேங்காய்ப் பால் அருந்துகின்ற வழக்கம் உடையவர்களுக்கு  சீக்கிரத்தில் தோல் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை.. தோலின் பளபளப்பு அதிகமாகி வயதான போதும் இளமைத் தோற்றமே நீடிக்கும்..

தேங்காய் பாலை சத்து அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு குறைகின்றது...

தேங்காய் பால் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே  தேங்காய் பாலை அடிக்கடி
அருந்துவதால் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம்...


தேங்காய் பால் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதால்  அனைத்து உடல் நலன் ஓங்குகின்றது.. ஓங்கிய உடல் நலத்தில் குறை ஒன்றும்  இருப்பதில்லை... 

இதனால் தான் தென்னையின்  இளங்குருத்தை - தென்னம் பிள்ளை என்றது தமிழ்!..


இப்போது விளங்கியிருக்கும் - தேங்காய் கெட்டது என்று சொல்லப்படுவதன் ரகசியம்!..


நம்முடைய நலம்
நமது கையில்..

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..

பூங்கழல் தொழுதும் பரவியும் புண்ணியா 
புனிதா உன் பொற்கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன் என்ன 
குறை உடையேன்
ஓங்கு தெங்கு இலையார் கமுகு 
இளவாழை மாவொடு மாதுளம் பல
தீங்கனி சிதறும் திருஆரூர் 
அம்மானே.. 4/20/4
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. தேங்காயின் சிறப்புகள் பற்றி படிக்கப் படிக்க மகிழ்ச்சி வந்தது. இறைவன் தந்த கொடை அது. சமையலுக்காகட்டும், தாகத்துக்கு மருந்தாகட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தேங்காய் பற்றி எழுதியதில் எனக்கும் மகிழ்ச்சியே...

      நெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அவ்வை பாடலையும் நாலடியாரையும் சிறுவயதில் மனப்பாடப் பகுதியாக பார்த்தது. மறுபடி படித்ததில் ஒரு சிறு உவகை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அப்போது
      இந்த இரண்டு பாடல்களுமே மனப்பாடம் தான்..

      இப்போது இணையத்தில் இருந்து தான் எடுத்து எழுதினேன்...

      மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. பாப்பில்யான் என்கிற வரலாற்று உண்மை கதையாக எழுதப்பட்டது. தமிழில் அதை ரா கி ர பட்டாம்பூச்சி என்று கொடுத்தார். அதில் சிறையிலிருந்து - அநியாயமாக கொடுக்கப்பட்ட கொடுந்தண்டனையிலிருந்து பற்பல முறை தப்பிச்செல்ல முயற்சிக்கும் ஹென்றி ஷாரியரின் வாழ்க்கை வரலாறு அது. அதில் அவர் ஒவ்வொருமுறை படகில் தப்பிச் செல்லும்போதும் அவர்களுக்கு சத்து தரும் ஆகாரமாக இருப்பது தேங்காய்த் துண்டுகள் என்று படித்த ஞாபகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. குமுதத்தில் வெளியானது.. நானும் படித்திருக்கின்றேன்...

      இத்தனை தூரம் நினைவில் இல்லை..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. தேங்காய் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. தேங்காய் சிறப்புகள் பற்றி நல்ல பகிர்வு.

    எண்ணை கீழை நாட்டுக்கு முதலிடம் எள் எண்ணை அடுத்து தேங்காய் எண்ணைதான் உடலுக்கு உகந்தது.

    'கற்பகதரு 'பனையை அடுத்து தென்னையை பலனுக்கு சொல்லலாம். எங்கள் வீட்டில் ஐந்து தென்னை மரங்கள்தான் உள்ளது இருந்தும் அன்றாட பாவனைக்கு சிறிய குடும்பம் இரண்டுக்கு காணக் கூடியதாக காய்கள் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////அன்றாட பாவனைக்கு சிறிய குடும்பம் இரண்டுக்கு காணக் கூடியதாக காய்கள் கிடைக்கிறது.
      ////.

      உண்மை தான்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  6. தேங்காய் குறித்த தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
    2. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  7. அருமையான பதிவு.
    தேங்காய் , இளநீர் என்று பயன்கள் ஏராளம்.

    மூதுரை பாடல் பள்ளியில் மனபாட பகுதி.
    'நாய்தின்ன தெங்கபழம் "நிறைய உவமைகளுக்கு எடுத்து ஆளபபடும்.

    திருவனந்த புரத்தில் என் தாத்தா வீட்டில் 40 தென்னைமரங்கள் இருந்தது, இப்போது 20 தென்னைமரம் இருக்கிறது.
    இப்போது தென்னைமரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்க ஆள் கிடைக்க மாட்டேன் என்கிறது , சொல்கிறார். மரம் உயரம் அதிகம்.
    முன்பு தேங்காய் எண்ணெய் எடுப்பார்கள் வீட்டிலேயே . எல்லோர் வீட்டு விழாக்களுக்கும் தேங்காய் கொடுப்பார்கள் பாட்டி.
    அப்பர் பாடலை பாடி இறைவனை வேண்டி கொண்டேன். இளநீர் இங்கு டின்னில் அடைத்து வருவதை வாங்குகிறான் மகன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இப்போது தென்னைமரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்க ஆள் கிடைக்க மாட்டேன் என்கிறது.. ///

      உண்மை தான்... விவசாயம் சார்ந்த வேலைகளுக்கு வங்காளம் வட நாட்டில் இருந்து வருகின்றனர்...

      அன்பின் வருகைக்கு ம் கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..