வெள்ளி, மே 10, 2024

அட்சயதிரிதியை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 27
 வெள்ளிக்கிழமை
அட்சய திருதியை


திருச்சோற்றுத்துறை

இறைவன்
ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர்
தொலையாச் செல்வர்
ஓதனவனேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ அன்னபூரணி

தலவிருட்சம் பன்னீர் மரம்
தீர்த்தம் காவிரி, குடமுருட்டி..


அக்ஷய திரிதியை என்றாலே தங்கமும் வைரம் தான்!.. - என்று வீட்டுக்குள் விளம்பர ஆரவாரம்.. 

இப்படியான  நாளில் -
அன்பும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் பெருகி வளர்ந்திட வேண்டிக் கொள்வோம்.. எளியோர்க்கு அன்னதானம் செய்வோம்.. 

நம் கிளை கிளைக்கும்..

ஏனெனில் அக்ஷய எனில் தேய்வு இல்லாது வளர்வது என்று பொருள்..

இந்நாளில் திருச்சோற்றுத்துறை தரிசனம்!..


அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அமுத சுரபி - அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது..

தஞ்சையில் இருந்து 10 கிமீ..
இத்தலம் கண்டியூர் - ஐயம்பேட்டை சாலையில் உள்ளது. திரு ஐயாற்றில் இருந்து சிற்றுந்துகள் இயங்குகின்றன..

தஞ்சையம்பதி

தஞ்சையம்பதி

தஞ்சையம்பதி

தஞ்சையம்பதி
திருவையாறு சப்த ஸ்தான வைபவத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று...

திருவையாற்றில் புறப்படும் பல்லக்குகள் திருப்பழனத்திற்கு அடுத்து காவிரி, குடமுருட்டி ஆறுகளைக் கடந்து இவ்வூருக்கு வந்து சேர்கின்றன..

சப்த ஸ்தான விழா நாளில்  வீடுகள் தோறும் நடக்கும் விருந்து உபசரிப்பு பெரும் சிறப்பு உடையது..

தேவார மூவரும் திருப்பதிகம் அருளியிருக்கின்றனர்.

படங்களுக்கு நன்றி :
திருச்சோற்றுத்துறை ஸ்ரீ அன்னபூரணி உடனுறை ஸ்ரீ
ஓதவனேஸ்வரர் சிவகணத் திருக்கூட்டத்தினர்..


பாலும் நெய்யும் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே..1/28/2
-: திருஞானசம்பந்தர் :-

மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே
முறைமையால் எல்லாம் படைக்கின்றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயினானே 
இன்பனாய்த் துன்பங் களைகின்றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின்றானே
 கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையுளானே
திகழொளியே சிவனே உன் அபயம் நானே.. 6/44/1
-: திருநாவுக்கரசர் :-

கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.. 7/94/3
-: சுந்தரர் :-

அட்சய திருதியை நாளன்று உப்பு, பச்சரிசி, கற்கண்டு,  பால், மல்லிகைப் பூ எனும் ஐந்தையும் வாங்குவது நல்லது என்கின்றனர் பெரியோர்..

ஏழை ஒருவருக்காவது அன்னம் இடுவோம்..
நலம் பெறுவோம்..

அக்ஷய திருதியை
நல்வாழ்த்துகள்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. அட்சய திருதியை வாழ்த்துகள்.  அட்சய திருதியைக்கு மரம் நடச் சொல்லி ஒரு வாட்ஸாப் பார்த்தேன்.  அதுவும் நல்ல முயற்சி.  ஆனால் யார் செய்வார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்சய திருதியை வாழ்த்துகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அட்சய திருதியை பற்றிய விளக்கம் நன்று. பக்திப்படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நால்வரின் பாடல்களைப் பாடி திருச்சோற்றுத்துறை ஸ்ரீ அக்ஷயபுரிஸ்வரரையும், ஸ்ரீ அன்னபூரணி அம்பிகையையும் பாதம் பணிந்து வணங்கிக் கொண்டேன். அப்பனும், அம்மையும் அனைவரையும் என்றும் நலமுடன் வைத்திருக்க பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///அப்பனும், அம்மையும் அனைவரையும் என்றும் நலமுடன் வைத்திருக்க பிரார்த்தித்துக் கொண்டேன்.///

      அட்சய திருதியை வாழ்த்துகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. பதிவும் படங்களும் , பகிர்ந்த பாடல்களும் அருமை.
    அட்சய திரிதியை வாழ்த்துகள்.

    அனைவருக்கும் எல்லா வளங்களையும் இறைவன் அருள வேண்டும்.
    நல்ல ஆரோக்கியத்துடன், அனைவரிடமும் அன்புடன் இருக்கட்டும் மக்கள்.
    நல்லதை செய்வோம், நலமுடன் வாழ்வோம்.
    இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும்.
    நீங்கள் பகிர்ந்த பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///ஆரோக்கியத்துடன், அனைவரிடமும் அன்புடன் இருக்கட்டும் மக்கள்.
      நல்லதை செய்வோம், நலமுடன் வாழ்வோம்.///

      அட்சய திருதியை வாழ்த்துகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. அட்சய திருத்திகை நாளில் நல்ல பகிர்வு.

    திருச் சோற்றுத் துறை இறைவனை பாடல் பாடி வணங்கினோம். அவனருள் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்சய திருதியை வாழ்த்துகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..