நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
திரு பவானி
தனதான தானத் தனதான
தனதான தானத் ... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ... தருவாயே..
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
பூரண கலைகளுடன்
கூடிய ஞானஒளி எனும்
அருட்கடலிலே குளித்து
மூவாசைகளைக் கடந்து
உரத்த சப்தத்துடன் கூடிய
சமய வாதங்களில் ஈடுபட்டுக் கிடக்காமல்
இறைவனைப் பற்றிய சிவஞான
வாழ்வைத் தந்தருள்வாயாக..
வள்ளி மலையின் குறக் கொடியாகிய
வள்ளி நாயகியின்
மனதில் கொலுவிருக்கும்
குமரனே குமரேசனே..
வள்ளிக்காக வில்லைக் கையில்
கொண்டு வேடன் என வந்தவனே,
சேவற் கொடி கொண்டவனே.
லக்ஷ்மியும் சரஸ்வதியும் கூடுகின்ற
கூடற்துறை பவானியின் பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா
**
இன்று நமது
நாடாளுமன்றத்திற்கான
வாக்குப் பதிவு..
வாக்களிக்க மறவாதீர்..
தவறாதீர்!..
வாழ்க பாரதம்
வளர்க தமிழகம்!..
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
முருகா... முத்துக்குமாறா... காத்தருள் எங்களையும், இந்த நாட்டையும், இந்த உலகையும்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய திருப்புகழ் பாடலும் அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. படங்கள் அழகு.
முருகன் அனைவரையும் நலத்துடன் காக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.பகிர்வு அருமை.
பதிலளிநீக்குமுருகன் அனைவருக்கும் அருள்புரிய வேண்டும்.
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
ஓம் முருகா இந்த நாட்டிற்கு நல்ல தலைவனைத் தந்தருள்
பதிலளிநீக்குசேவற் கொடியோனே சரணம். அவனருள் அனைவரையும் காக்கட்டும்.
பதிலளிநீக்கு