தஞ்சையில் கரந்தை எனப்படும் கருந்திட்டைக்குடியில் கரந்தைச் செடிகள் நிறைந்திருந்ததைப் பற்றி அறிந்த பின் கரந்தைச் செடியைப் பற்றிய சிறு தேடல்..
கரந்தை எனப்படுவது திருநீற்றுப் பச்சிலை (Basil)..
இதன் தாவரவியல் பெயர்: Ocimum basilicum ..
கரந்தை என்று குறிக்கப்படும் வேறொரு மூலிகை கொட்டைக் கரந்தை..
திருநீற்றுப் பச்சிலையை
வீடுகளில் எளிதாக வளர்க்கலாம்..
நச்சுக் கிருமிகளை எதிர்க்கின்ற தன்மை உடையது.. இதன் இலைகளில் நறுமணம் கமழும்.. வீட்டுக்குள் திருநீற்றுப் பச்சிலை இருந்தால் கொசுக்கள் ஓடி விடும்.. இயற்கை கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது.
துளசி தருகின்ற நன்மைகள் அனைத்தையும் இந்த திருநீற்றுப் பச்சிலை அளிக்கின்றது..
இதன் விதைகள் (சப்ஜா விதை என்ற பெயரில்) தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன..
பொதுவாக இயற்கை மூலிகை மருந்து என்றாலும் -
உடல் நல பிரச்னைகளுக்கு சித்த வைத்தியரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதே நல்லது..
திருநீற்றுப்பச்சிலை :
5 leaves (2.5 g / 2 tbsp) Per 100 grams
Dietary fiber 1.6 g 6%
Sugar 0.3 g Protein 3.2 g
Vitamin C 30% Vitamin B6 10%
Calcium 17% Iron 17%
Magnesium 16%
நன்றி விக்கி
விதைகளை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்தால் நீரினை உறிஞ்சிக் கொண்டு வழ வழப்பாக மாறிவிடும்..
இது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றது..
அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகை ஏற்படாமல் காக்கின்றது.. நெஞ்செரிச்சலையும் போக்குகின்றது..
உடல் சூட்டைக் குறைக்கின்றது.. கோடையில் நீர்க்கடுப்பு வராமல் தடுக்கின்றது.. மலச் சிக்கலைப் போக்குகின்றது.
சர்பத் மற்றும் பலூடாவில் இது தனிச் சுவையை ஏற்படுத்துகின்றது.. சேர்க்கப்படுகிறது..
நல்ல குறிப்புகள். செடி மற்றும் இலைகள் துளசி போலவே இருக்குமோ...
பதிலளிநீக்குஇலைகள் சற்று வித்தியாசமாக இருக்கும்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
வாருங்கள் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குஇலைகள் சற்றே துளசி போலத்தான்.. பூக்கள் மஞ்சரி வகை..
இலைகளை நுகர்ந்தாலே நறுமணம் கமழும்..
அன்பினுக்கு
மகிழ்ச்சி..
நன்றி..
நல்ல குறிப்புகள். சப்ஜா விதைகள் பயன்படுத்துவதுண்டு.
பதிலளிநீக்குதகவல்கள் சிறப்பு ஜி
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
திருநீற்றுப்பச்சை நல்ல பலகேக்கிறேன்.
பதிலளிநீக்குநாங்கள் மொட்டை மாடியில் சாடியில் வளர்கிறோம். விதையை பானங்களில் கலக்கிறேன்.
நல்லது.. நல்லது..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..