திங்கள், ஏப்ரல் 01, 2024

கரந்தை 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 19
திங்கட்கிழமை

திருத்தலம்
கருந்திட்டைக்குடி

 நன்றி கரந்தை

இறைவன் 
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
அம்பிகை 
பிரஹந்நாயகி
தீர்த்தம் 
வசிஷ்ட தீர்த்தம்
தலவிருட்சம் வன்னி

 நன்றி கரந்தை

அம்பாளுக்குத் தனியாக கொடிமரம்..  கோபுரத்துக்கு எதிரில் வெளியே நந்தி மண்டபம்..

மாமன்னர் கரிகால் சோழர் இத்தலத்தில் வழிபட்டு தமக்கு ஏற்பட்ட தோல் நோய் நீங்கப் பெற்றார் என்பது குறிப்பு ..
 
சூரிய பூஜை  (2023)
கோயிலின் வெளிப் பிராகாரத்தில் நான்கு 
மூலைகளிலும்  நான்கு விநாயகர் சந்நிதிகள் உள்ளன..

 நன்றி கரந்தை

 திருப்பல்லக்கு நன்றி கரந்தை
இக்கோயிலில் வைகாசித் திருவிழாவில் பௌர்ணமியன்று  சப்தஸ்தான விழா நிகழ்கின்றது.. 

ஸ்ரீ செல்லியம்மன்
விமானம்
கோயிலின் வடபுறத்தில் ஒது காலத்தில் இணைந்து இருந்தவளான ஸ்ரீ பத்ரகாளி காலப்போக்கில் செல்லியம்மன் என்று தனி சந்நிதி கொண்டு விட்டாள்..

இங்கிருந்து செல்லியம்மன் கோயிலுக்குச் செல்ல முடியாது.. இன்றளவும் அடுத்த தெருவின் வழிதான்..


தைப்பூசத்தன்று ஸ்வாமி - அம்பாள்,  வசிஷ்டர் - அருந்ததி திருக்கல்யாண வைபவம்..

இன்றைய பதிவில்
கோயிலில் நான் எடுத்த படங்கள் - கீழே இருப்பவை.. 




இன்று இக்கோயில் 
பேச்சு வழக்கில் கருணாசாமி கோயில் எனப்படுகின்றது.. 







வெளிப் பிரகாரத்தில் மேற்கு நோக்கியதாக ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சந்நிதி.. 

இங்கு விநாயகரும் வீரபாஹூவும் விளங்குகின்றனர்..

ஸ்ரீ கோரக்கர் பீடம்
கோயில் வெளிப் பிராகாரத்தில் கிழக்குப் பக்கமாக கோரக்கர் பீடம்.. வியாழக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..

ஸ்ரீ திருநீலகண்டர் மடம்

திருக்குளத்தின் வட்கரையில் அறுபத்து மூவருள் ஒருவரான திருநீலகண்ட குயவனார் திருமடம்.. நாயனாரின் திருநட்சத்திரம் தை விசாக நாளன்று ரிஷப வாகனத்தில் ஸ்வாமி இங்கு எழுந்தருளி காட்சி நல்குவார்.. 
இப்போது மடத்தில் திருப்பணிகள் நடப்பதாகத் தெரிகின்றது..




எதிர்க்கரையில் இருந்து கோயில்

நிலத்துக்குக் கீழ் அமைக்கப்பட்டிருந்த வழியைக் கண்டறிந்து வெகு சிரமப்பட்டு சீரமைத்தும் திருக்கோயில் குளம் தற்போது நீரின்றிக் கிடக்கின்றது.. வற்ண்டு கிடைக்கின்ற குளத்தினுள்  இருபத்தொரு கிணறுகள் காணப்படுகின்றன..




இக்கோயில் குளத்தைச் சுற்றிலும் முன்பு ஒரு காலத்தில் கரந்தை எனப்படும் திருநீற்றுப் பச்சிலைகள் நிறைந்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது.. இன்றைக்கு அப்படி இல்லை..




நோய் தீர்க்கும் தன்மை உடைய திருக்குளம்
காலக் கொடுமையினால்
வறண்டு கிடக்கின்றது..



குளத்தின் கரைகள் சீரமைக்கப்பட்டு சுற்றிலும் நடைபாதையும் சாய்வு நாற்காலிகளும் அமைக்கப்பட்டுள்ளன..




ஈசானிய மூலையிலுள்ள வசந்த மண்டபம் மிகவும் தளர்ந்து விட்டது..

பழைமையான படித்துறைகள் அழிக்கப்பட்டதைப் போல
இதுவும் இன்னொரு வேதனை..

தஞ்சை மாநகரத்தில் வடவாற்றின் கரையில் உள்ளது கரந்தை.. பாபநாசம் திரு ஐயாறு என, நகரப் பேருந்து வசதி உள்ளது..

இத்தலத்தை
திரு ஊர்த்தொகையுள் வைத்து அப்பர் ஸ்வாமிகள்
போற்றுகின்றார்..


நற்கொடிமேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல்வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே.. 6/71/3
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. உங்கள் கேமிரா கண்வழியே கோவிலை தரிசிக்க முடிந்தது.  நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வற்றிய குளங்கள் மக்கள் மனதைப் பிரதி பலிக்கின்றன.  மனிதன் செய்யும் பாவம் குளங்களும் வற்றி விடுகின்றன.  விஞ்ஞான வளர்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      மனிதன் செய்யும் பாவங்களால் குளங்களும் வற்றி விடுகின்றன.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. ஒரு காலத்தில் எப்படி இருந்திருக்கும் அந்த வசந்த மண்டபம்... இப்போது வாடிப்போய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் நின்னைந்தால் மனதில் நிம்மதி இருக்காது...

      திருப்பூந்துருத்தி கோயிலில் ஒரு பகுதி இப்படித்தான் இருக்கின்றது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. குளம்தான் வெறுமையாகத் தெரிகிறது. ஆனால் ஜூனிலிருந்து தண்ணீர் பெருக்கெடுக்கும். அருமையான கோவில் தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே ஆகட்டும்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நெல்லை அவர்களுக்கு நன்றி ..

      நீக்கு
  5. தரிசித்துக் கொண்டோம்.

    ""குளத்தினுள் இருபத்தொரு கிணறுகள். " குளம் வற்றும் காலத்தில் கிணற்றில் நீர் இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான கோவில் தரிசனம். வறண்டு கிடக்கும் குளம் - வேதனை.

    பதிலளிநீக்கு
  7. குளம் வற்றிடும் காலத்தில் மக்களுக்கான கிணறுகள் தான் இவை..

    இன்று பயன் படுத்துவார் இல்லை..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி மாதேவி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..