வெள்ளி, ஏப்ரல் 26, 2024

சப்த ஸ்தானம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 13
வெள்ளிக்கிழமை


சித்திரை (12) விசாக நாளாகிய நேற்று (25/4) தமது அன்புக்குரிய நந்தீசன் சுயம்பிரகாஷிணி தேவி தம்பதியரை வெட்டி வேர் பல்லக்கில் அழைத்துக் கொண்டு அறம் வளர்த்த நாயகியும் ஐயாறப்பரும்  ஏழூர் திருவலமாக அலங்காரச் சிவிகையில் புறப்பட்டருளினர்..

மாமன்னர் ராஜ ராஜ சோழரின் பட்டத்தரசியாகிய லோகமாதேவியார் நடாத்திய விழா இது..

ஆயிரக்கணக்கான மக்கள் - உதயாதி நாழிகையில் கோபுர தரிசனம் கண்டு இன்புற - புஷ்ய மண்டபத்தில் எழுந்தருளி மகா தீப ஆராதனைக்குப் பின் திருப்பழனம் நோக்கிச் சென்றன பல்லக்குகள்..

அதிகாலையிலேயே புஷ்ய மண்டபத்தில் அன்னம் பாலிப்பு நடைபெற்றது..

அந்தத் திருக்காட்சிகள் இன்றைய பதிவில்..

படங்களை வழங்கியோர் :-
காவிரிக்கோட்டம், திரு ஐயாறு..

காணொளி :-
ஸ்ரீ கோரக்கர் வழிபாட்டுக் குழு., தஞ்சாவூர்..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..




















பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண்ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன்  ஐயாறனாரே.. 4/38/9
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***




4 கருத்துகள்:

  1. ஐயன் ஐயாறனார் அனைவரையும் காத்து அருளட்டும்.  நந்தீசர் கடைக்கண் பார்வை அனைவருக்கும் அருள் செய்யட்டும்.  வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஐயாரப்பர் அறம் வளர்த்த நாயகி ஏழூர் திருவலம் காட்சிகள் கண்டு பதிகமும் பாடி வணங்கினோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. ஐயரப்பர் , அறம் வளர்த்த நாயகி, நந்தீசர் அனைவருக்கும்
    எல்லா வளங்களை, நலங்களை அருள வேண்டும்.
    பதிகம் பாடி இறைவனை வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..