நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 26
வியாழக்கிழமை
குறளமுதம்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.. 121
**
ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார்
செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.. 26
**
மாலே மணிவண்ணா ..
மார்கழியில் நாங்கள் மேற்கொண்டிருக்கும் நோன்புக்காக - உலகை நடுங்க வைக்கும் உனது பாஞ்ச சன்னியம் போன்ற பால் வண்ணச் சங்குகளையும், பெரிய பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்களையும், தீபம் கொடி விதானம் எனும் இவற்றையும் எங்களுக்கு நீ தந்தருள் புரிவாயாக!..
**
சிவதரிசனம்
தேவாரம்
திருப்பாட்டு
ஏழை மானுட இன்பினை நோக்கி
இளையவர் வலைப் பட்டிருந்து இன்னம்
வாழை தான் பழுக்கும் நமக்கென்று
வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டுக்
கூழை மாந்தர்தம் செல்கதிப் பக்கம்
போதமும் பொருள் ஒன்று அறியாத
ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைமருது உறை எந்தை பிரானே. 7/60/9
-: சுந்தரர் :-
**
தரிசனத்
திருத்தாண்டகம்
(திருமறைக்காடு - வேதாரண்யம்)
மூரி முழங்கொலி நீர் ஆனான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறை எம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 5
-: திருநாவுக்கரசர் :-
**
திருவாசகம்
அருட்பத்து
துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.. 5
-: மாணிக்கவாசகர் :-
**
எல்லா பாடல்களையும் ஏம் எல் வி பாடி இருந்தாலும் சில பாடல்கள் மட்டும் படிக்கும்போதே மனதில் அவர் குரல் ஒலிக்கும் இன்றைய பாடல் அந்த ரகம்.
பதிலளிநீக்குஆஞ்சநேய ஜெயந்தி - ஸ்ரீராமஜெயம்.
நானும் வசந்தகுமாரி பாடிய பாடல்தான் கேட்பேன். இன்று இந்த பாடல் கேட்டேன்.ஆஞ்சநேய ஜெயந்திக்கு அழகான அனுமன் அலங்கார படம் அருமை.
பதிலளிநீக்குஇன்று படங்கள் நன்றாக இருக்கிறது. பாடலை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? திருமலை தரிசனம் சிறப்பாக கிடைத்ததா?
இன்றைய பதிவும் அருமை. திருப்பாவை பாடலும், விளக்கமும் நன்று. தாங்கள் பகிர்ந்த படங்கள் அனைத்தும் மனதையும், கண்களையும் கவர்கிறது. இன்று அனுமன் ஜயந்திக்கு அழகான படங்களையும் தொகுத்து தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. அனுமன் அலங்காரம் படம் அருமையாக உள்ளது. ஸ்ரீ ராமரின் அன்பு பக்தரை பக்தியுடன் வணங்கி உடல், மனபலம் வேண்டி பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஞ்சநேய ஜயந்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஓம் ஆஞ்சநேயாய நமக.