செவ்வாய், நவம்பர் 07, 2023

அருளுடையாள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 21
செவ்வாய்க்கிழமை 

புரட்டாசி நிறைநிலா நாளன்று
மாரியம்மன் கோயிலில் இருந்தபோது
மனதில் எழுந்த பாட்டு..
 

ஆயிரம் கண்ணுடையாள்
ஆயி எனும் பேருடையாள்
ஆகாசம் போல் கொடையாள்
தஞ்சை எனும் ஊருடையாள்..1

மண்ணோடு விண்ணுடையாள்
மங்காத சீர் உடையாள்
மாறாத மனமுடையாள்
மங்கலங்கள் தானுடையாள்..2

பூத்து வரும் பூ நடையாள்
பொல்லாத வாள் உடையாள்
பொங்கிவரும் சினமுடையாள்
புண்ணியத்து அறமுடையாள்..3

மஞ்சள் எனும் நிறமுடையாள்
மங்கலத்தின் மணமுடையாள்
சீறிவரும் அரவுடையாள்
செங்கனலின் சுடருடையாள்..4

புன்னைவனப் புற்றுடையாள்
பொங்கும் அன்புப் பற்றுடையாள்
குங்குமத்தின் பொட்டுடையாள்
கோலமணி முத்துடையாள்..5


தித்திக்கின்ற சொல்லுடையாள்
தீபங்களின் திருவுடையாள்
நல்லவர்க்கு நடுவுடையாள்
நல்லழகு விழியுடையாள்..6

நல்லமணி வடிவுடையாள்
நாகமணிக் குடையுடையாள்
நம்பி வரும் அடியவர்க்கு
வாரித் தரும் வரமுடையாள்..7

வேழமுகப் பேறுடையாள்
வேலவனைத் தானுடையாள்
வேதசிவ கூறுடையாள்
தெய்வத்திரு நீறுடையாள்..8

வேற்றான வினைகளுக்கு
வேப்பிலையும் தானுடையாள்
ஆற்றாது அலந்தவர்க்கு
அள்ளித் தரும் அமுதுடையாள்..9

பொன்னுடையாள் பூவுடையாள்
பொங்குநலம் தானுடையாள்
கண் மயங்கித் தவிப்பவர்க்கு
தண்ணருளும் தானுடையாள்.. 10
**
 
ஓம் சக்தி ஓம்

ஓம் சிவாய 
திருச்சிற்றம்பலம்
***

16 கருத்துகள்:

  1. குழாயைத் திறந்த உடனே வரும் நீர் போல அன்னையை நினைத்ததும் மனதில் கொட்டிய வார்த்தைகளால் போற்றித் துதி பாடி விட்டீர்கள்.  அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாரியம்மன் கோயிலுக்குச் சென்றாலே பாட்டு வரும்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. துதியினால் விளைந்த பாடல் அருமை. அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. மாரி அம்மன் கோவிலில் உதித்த பாடல் மிகவும் அருமை. படித்து நாமும் வணங்கிக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. அருமையான பாடல் புனைந்திருக்கிறீர்கள் அனையின் அருளன்றி வேறேதுவாலும் இப்படி எல்லாம் பாட இயலாது. உங்களிடம் பூரணமாக அன்னையின் அருள் இருக்கிறது. என்றென்றும் காத்தும் வருவாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவளது அருள் அன்றி வேறு இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  5. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் துரை அண்ணா. பாமாலையை ரசித்தேன். உங்களுக்கு எழுதும் திறன் டக் டக்கென்று வர சக்தியின் அருள் உள்ளது! துரை அண்ணா. வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  6. பாமாலை அருமை.
    அன்னை அனைவருக்கும் அனைத்து நலங்களையும் அருள வேண்டும். பாடலை பாடி வேண்டி கொண்டேன், அனைவர் நலத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அன்னை அனைவருக்கும் அனைத்து நலங்களையும் அருள வேண்டும்..

    தங்கள் அன்பின் வருகையும்
    கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அம்மன் மேல் இயற்றப்பட்ட பாமாலை மிக அருமையாக உள்ளது. மனமுருக பாடி தொழுது கொண்டேன். அன்னையின் அருள் உங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் சிறப்பாகத் தரும் பாடல்களை பாடிப் படிப்பதின் மூலமாக நாங்களும் அவள் பாதாரவிந்தங்களை பணிந்து போற்றுகிறோம். அனைவருக்கும் அன்னை நல்லதையே நடத்தித் தரட்டும். ஓம் சக்தி ஓம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் அன்னை நல்லதையே நடத்தித் தரட்டும்.
      ஓம் சக்தி ஓம்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..