புதன், நவம்பர் 01, 2023

கழுபிணி இலாத..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 15
  புதன் கிழமை

மிகச் சிறந்த
திருப்பதிகங்கம் .


கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..


திருப்பாற்கடலில்  உறங்காமல் உறங்குகின்ற மாயனாகிய ஸ்ரீ ஹரி பரந்தாமனின் தங்கையானவளே..

திருக்கடவூரில் கோயில் கொண்டு,  தொண்டருக்கெல்லாம் தொண்டராய்த் திகழும் அமுதீசரின் திருமேனியில் இடங்கொண்டு விளங்குகின்றவளே அபிராமவல்லி!..


உருக்குலைந்து விடாத கல்வியையும் 
குறைவிலாத வயதையும் 
கள்ளங்கபடமற்ற  நட்பினையும் குறையாத வளத்தினையும் நிறைவான இளமையையும் 
நோய் நொடியிலாத  உடலையும் 

தளராத  மனதினையும் 
அன்பு நிறைந்த மனைவியையும் 
கடமையில் இருந்து தவறாத நன்மக்கட் பேற்றையும் 
குறையாத புகழினையும் 
வாக்கு தவறாத குணத்தையும் 
தடையற்ற கொடையினையும்

தொலைதல் இல்லாத செல்வத்தையும் 
நீதி நெறி தவறாத நிலையையும் 
எவ்வித துன்பமும் இல்லாத வாழ்வினையும் 

இவற்றுக்கு மேல்  -

உனது பாதங்களில்  அன்பினையும் தந்து எமக்கு அருள் புரிவாயாக!..
*

நேரிடையான பொருள். ஆயினும்
பதினாறு பேறுகளையும் குறித்து 
வேறொரு பதிவில் விரிவாகப் பேசுவோம்..
**
ஓம் சக்தி ஓம் 

ஓம் சிவாய
திருச்சிற்றம்பலம்
***

12 கருத்துகள்:

  1. சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீர குரலில் கேட்டிருக்கிறேன்.  மனதில் ஓடுகிறது அந்த வரிகள் அவர் குரலில்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடலுக்கே கம்பீரம் கொடுத்தவர் சீர்காழி..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அபிராமவல்லி பாடல் பாடி துதித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அபிராமியம்மை பதிகமும் அதன் விளக்கமும் அருமை. பதிகத்தை பாடி வணங்கி கொண்டேன்.கழுபிணி இலாத நல் ஆரோக்கியத்தை தரட்டும் அம்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழுபிணி இலாத நல் ஆரோக்கியத்தை தரட்டும் அம்பிகை

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஓம் சக்தி ஓம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சக்தி ஓம்
      வாழ்க வையகம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  5. அப்பாடா, ஒரு வழியா வந்தேன். நல்லதொரு பதிவுக்கு நன்றி. சீர்காழியின் குரலில் இவற்றைப் பாடிக் கேட்பதாக நினைத்துக் கொண்டேன். இந்தப் பாடல்களுக்கெல்லாம் அவர் தான் நினைவில் வருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இந்தப் பாடல்களுக்கெல்லாம் அவர் தான் நினைவில் வருகிறார்..///

      உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி அக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..