புதன், ஆகஸ்ட் 30, 2023

ஸ்ரீ காசி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 13
புதன் கிழமை


 
உத்தரகாண்ட் மாநிலத்தின் கங்கோத்ரியின் கோமுகியில் பிறக்கின்ற பாகீரதி நதியானது, தேவப்பிரயாகை எனுமிடத்தில் அலக்நந்தா நதியுடன் கலந்து கங்கை ஆகின்றது..

கங்கை நதியின் கரையில் தான் புனித காசி நகர் அமைந்துள்ளது..

நன்றி: விக்கி (விக்கியில் இருந்து பெறப்பட்ட செய்திகளின் தொகுப்பு..)

மேற்கில்  இருந்து பலமுறை  படையெடுத்து வந்த முரடர்கள் 1025 ல் சோமநாதபுரத்தை முற்றாக அழித்தனர்.. 

அந்த மூர்க்கர்களை - எதிர்த்து சண்டையிட்ட  மன்னர்கள் வெகு சிலரே.. 

காலத்தின் கொடுமையால்
செல்வ வளம் மிகுத்திருந்த காசி நகரும்
வீழ்த்தப்பட்டது.. 

ஆதி விஸ்வேஸ்வரர் மந்திர் எனப்பட்ட  விஸ்வநாதர் கோயிலை அந்நியர்கள் கொள்ளையடித்துத் தகர்த்தனர்..
.இக்கொடுமை நிகழ்த்தப்பட்ட ஆண்டு 1194..

1230 களில் மீண்டும்
கட்டப்பட்ட விஸ்வநாதர் கோயில் 1500 களில் மீண்டும் தகர்க்கப்பட்டது..

மீண்டும் 1585 ல் - 
விஸ்வநாதர் கோயிலை  ராஜா மான் சிங் கட்டினார்..

1669 ல், முகலாய அரசன் ஔரங்கசீப்பு - விஸ்வநாதர் கோயிலை இடித்து விட்டு இடிக்கப்பட்ட   கோயிலின் 
சிருங்கார் கௌரி மண்டபத்தின் கிழக்குப் பக்கத்து சுவரை ஆதாரமாகக் கொண்டு மேற்குப் பக்கத்தில் அவனது கொள்கைக்கு ஏற்றதாக ஒன்று கட்டப்பட்டது.. அதற்கு க்யான்வாபி எனப் பெயரும் வைக்கப்பட்டது.. 
(இந்தப் பெயரை அவன் வைத்தானோ அவனுக்குப் பின்னால் வந்த வேறு எவனும் வைத்தானோ..)


காசி விஸ்வநாதர் கோயிலை 
மீண்டும் கட்டி எழுப்பி நமக்களித்தவர்  - மராட்டியப் பேரரசின் இந்தூர் ராணி 
மாதரசி ஸ்ரீமதி அகல்யா பாய் ஹோல்கர்.. 

ஸ்ரீமதி அகல்யா பாய்  அவர்களால் காசி க்ஷேத்திரம் மீண்டும் புனரமைக்கப்பட்ட ஆண்டு 1780..

சீக்கியப் பேரரசின் மன்னர் ரஞ்சித் சிங்.. அவரது பட்டத்தரசி ஸ்ரீமதி தாதர் கௌர் - கோயிலின் விமானத்தை அலங்கரிப்பதற்காக  பெருமளவில் தங்கத்தை நன்கொடையாக வழங்கிய ஆண்டு 1835..


தமிழகத்தின் நாட்டுக்கோட்டை நகரத்தார் -
விஸ்வநாதர் கோயிலின் அருகே புதிய இடம் வாங்கி 
விசாலாட்சியம்மன் கோயிலை எழுப்பி  (1893) கும்பாபிஷேகம் செய்வித்த ஆண்டு 1908 (பிலவ தை 25)..

காசியில் கங்கை நதியின் 
தசாஸ்வமேத படித்துறையில் இருந்து  விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதற்கான வழி மிகவும் குறுகியது..  அந்நிய படையெடுப்பாளர்களால் வசப்படுத்தப்பட்டு குறுக்கப்பட்டிருந்த இந்த வழி - நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் சீரமைக்கப்படவே இல்லை.. 

நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு பற்பல இன்னல், எதிர்ப்புகளைக் கடந்து மேற்கொள்ளப்பட்ட (2019) புனர்மைப்பின் போது - 

ஸ்ரீ கங்கேஷ்வர் மகாதேவ் கோயில், ஸ்ரீ மனோகரேஸ்வர் மகாதேவ் கோயில், ஸ்ரீ விநாயகர் கோயில், மற்றும் ஸ்ரீ கும்ப மகாதேவ் கோயில் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட  பழைமையான கோயில்கள் 
பல நூற்றாண்டு கால ஆக்ரமிப்பிலிருந்து  - இடிந்த நிலையில் மீட்கப்பட்டன.. 

கங்கைக் கரையில் இருந்து ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் வரைக்கும் சந்நிதி வழிநடை சீரமைக்கப்பட்ட ஆண்டு 2021..

இதனால நாட்டுக்கு என்ன பயன்?.. -  என்று பிறவிக் குணம் மாறாமல் பற்பல ஜந்துக்களும் ஊளையிட்டு கொண்டு திரிகின்றன.. 

அந்த ஜந்துகளுக்கும்  படியளந்து கொண்டிருப்பவர்கள் - காசி விஸ்வநாதரும் - அன்னபூரணியும் தான்!.. - என்பது குறிப்பிடத்தக்கது..
**
காணொளி வடிவமைப்பு தஞ்சையம்பதி


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. வரலாற்று தகவல்கள் சிறப்பு.
    காணொளி கண்டேன் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  2. தகவல்கள் அருமை ஐயா...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்திற்கு நன்றி தனபாலன்..

      நீக்கு
  3. பல விவரங்கள் காசி பற்றி. வெங்கட்ஜி, அனு பிரேம் தளங்களில் மற்றும் இப்போது உங்கள் மூலம் அறிய முடிகிறது, துரைஅண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்திற்கு நன்றி சகோ..

      நீக்கு
  4. இதையும் சேர்த்தே தெரிந்துகொள்ளுங்கள். காசியில் விஷ்ணு காசி என்ற பகுதி இருந்தது. அதில் பிந்து மாதவர் கோவில் பிரம்மாண்டமாக இருந்தது. ஔரங்கசீப், அந்த பிந்து மாதவர் கோவிலை முற்றிலுமாகத் தகர்த்து அங்கு ஒரு பெரிய மசூதி எழுப்பினால். அது மணிகர்ணிகா gகாட்டுக்கு அருகிலுள்ள பகுதி. அந்த பிந்து மாதவரை, சிறிய வீடு போன்ற இடத்தில் கோவில் போலக் கட்டி (ஹால் மாதிரி) அங்கு வைத்து வழிபாடு செய்கின்றனர். காசி பயணத்தை நான் எழுதும்போது இதெல்லாம் வரும். இவற்றை அறிந்துகொள்ளும்போது நமக்கு வரும் கோபம் மிக அதிகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்கள் அன்பின் வருகைக்கும் மேலதிக
      தகவலுக்கும் நன்றி..

      நீக்கு
  5. காசியைப்பற்றியும் ஸ்ரீரங்கம் பற்றியும் நடந்த செய்திகள் மனதை மிகவும் வேதனையில் ஆழ்த்தும். பிந்துமாதவர் கோயில் பற்றி நாங்களும் கேள்விப் பட்டோம். ஏதோ இப்போதைய அரசால் இந்த அளவுக்காவது வசதிகள் ஏற்பட்டதே அதற்கே இறைவனுக்கு நன்றி சொல்லணும். சமீபத்தில் காசி யாத்திரை சென்றவர்கள் பலரும் அங்கு ஏற்பட்டிருக்கும் மாறுதல்களைப் பற்றிச் சொல்கின்றனர். இது வரையில் ஆண்ட எந்த அரசாலும் செய்ய முடியாத ஒன்றை இந்த அரசு செய்து முடித்துள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய அரசால் இந்த அளவுக்காவது வசதிகள் ஏற்பட்டதே அதற்காக இறைவனுக்கு நன்றி..

      தங்கள் அன்பின் வருகைக்கும் மேலதிக
      தகவலுக்கும் நன்றி அக்கா..

      நீக்கு
  6. காசி வரலாறு பகிர்வு அருமை. நீங்கள் வடிவமைத்த காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் நன்றி..

      நீக்கு
  7. காசி வரலாறு அறிந்தோம்.நல்ல பகிர்வு.

    காசி பற்றி வெங்கட், துளசி தளம் , அனு பிரேம் தளங்களில் அறிந்திருந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் நன்றி..

      நீக்கு
  8. ​வருந்த வைக்கும் பழைய நிகழ்வுகளை மறுபடி படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது..

      நம்மிடையே ஒற்றுமை
      இல்லாதது தான் காரணம்..

      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..