புதன், ஆகஸ்ட் 23, 2023

வாஞ்சியம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 6
புதன்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
ஆறாவது திருத்தலம்..

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திருவாஞ்சியம்


இறைவன்
ஸ்ரீ வாஞ்சிநாதர்


அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை


தீர்த்தம்  குப்த கங்கை
தல விருட்சம் சந்தன மரம்.


மரண பயத்தை - யம பயத்தை  போக்குகின்ற தலம் திருவாஞ்சியம் எனப்படும் ஸ்ரீவாஞ்சியம்..


சிவபெருமானை மதிக்காமல்
தட்சனின் நடத்திய யாகத்திற்குச் சென்ற சூரியன் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு  தனது ஒளியை இழந்தான்..

இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த குப்த கங்கையில் நீராடி சூரியன் மீண்டும் ஒளி பெற்றதால் தலபுராணம்..

திருமகளைப் பிரிந்த மஹாவிஷ்ணு இங்கே  வழிபட்டு மீண்டும் திருமகளை அடைந்தார்..

யமதர்மன் தான் உலக உயிர்களைக் கவர்ந்து எடுப்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில் வருத்தமுற்று ஈசனை நோக்கித் தவம் இயற்றினார்.. 

ஈசன் காட்சி தந்து யமதர்மனின் மன உளைச்சலைத் தீர்த்தருளினார்.. இதனால் மகிழ்ந்த யமதர்மன் சிவசக்தியாகிய அம்மையப்பனை தோளில் தாங்கி வலம் வந்தார்.. 


இக்கோயிலில் யம தர்ம வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருள்கின்றார்..


கோயிலில் யமதர்மன் சித்ர குப்தன் இருவரும் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர்.. 

இத்தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தால் போதும்.. கயிலாயத்தில் சிவ கணமாக விளங்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது தல வரலாறு..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும்
நாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும்  சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும்  கிடைத்துள்ளன..

இங்கே மரணத்தீட்டு எனில் கோயில் அடைக்கும் வழக்கம் இல்லை..

திரு ஆரூரை அடுத்துள்ள
நன்னிலத்தில் இருந்து  9 கிமீ., தூரத்தில் ஸ்ரீவாஞ்சியம்..

ஆறு ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை  தரிசித்திருக்கின்றேன்..


கையி லங்குமறி ஏந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யார் அடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற் றார்திரு வாஞ்சியத்து
ஐயர் பாதமடை வார்க்கடையா அரு நோய்களே.. 2/7/5
-: திருஞானசம்பந்தர் :-

அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மால்இட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க்கு அமரரே.. 5/67/4
-: திருநாவுக்கரசர் :-

வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை அல்லால்
இறையெனக் கருதுதல் இலமே.. 7/76/9
-: சுந்தரர் :-

திருவாஞ்சியத்தில்
சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு 
மகிழ்ந்த வண்ணமும் 
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. தரிசிக்க வேண்டிய தலம்.  பல வருடங்களுக்கு முன் எங்களுக்கு இங்கே கட்டளை இருந்தது.  எங்கள் அலட்சியத்தால் அதை இழந்தோம்.  இப்போது நினைத்தாலும் பெறமுடியாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டளையை இழப்பது என்றால் மிகவும் வருத்தம் தான்..

      இறைவன் பார்த்துக் கொள்வான்..

      நீக்கு
  2. இங்கு பல முறை சென்றுள்ளேன். உங்கள் பதிவு மூலமாக இன்று மறுபடியும் சென்றேன். இறையருள் பெற்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு
  3. ஓம் நமசிவாய வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. திருவாஞ்சியம் கோவில் கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன். என்னப்பன் ஐயன் சிவபெருமானையும் , அம்பிகை தாயார் உமா மகேஷ்வரியையும் பணிந்து வணங்கி கொண்டேன். இக் கோவிலுக்கெல்லாம் செல்லும் வாய்ப்பு இப்பிறவியில் என்று வருமோ? அதனால் கிடைத்த வாய்ப்பாக தங்கள் பதிவின் வாயிலாக விபரம் அறிந்து இறைவனை தொழுவதில் மகிழ்வு அடைகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிடைத்த வாய்ப்பாக தங்கள் பதிவின் வாயிலாக விபரம் அறிந்து இறைவனை தொழுவதில் மகிழ்வு அடைகிறேன்.//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஒரே முறை போயிருக்கோம். லேசாகத் தான் நினைவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  6. திரு வாஞ்சியம் பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
    படங்கள் எல்லாம் மிக அருமை. நன்றாக எடுத்து உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திரு வாஞ்சியம் பாடல்களும் படங்களும், புராணமும் அருமை. படங்கள் அழகா இருக்கு துரை அண்ணா. அதில் உங்கள் பெயர் போட்டதும் சிறப்பு. ஏற்கனவே சொல்ல நினைத்திருந்தேன் நீங்க எடுக்கற படம்னா பெயர் போட்டுடுங்கன்னு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பெல்லாம் நான் எடுத்த் படங்களில் பெயர் போட்டுக் கொண்டு தான் இருந்தேன்.. கணினி இல்லாமல் கைத்தல பேசியில் பதிவுகள் வெளியிடும் போது சற்று சிரமமாக உள்ளது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..