செவ்வாய், ஜூலை 11, 2023

பிள்ளையார்பட்டி 1

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 26
 செவ்வாய்க்கிழமை


பாறை..

பெரியதாய் ஒற்றைப் பாறை.. 

மகாராஜா தஞ்சாவூரில் கோயில் கட்டுகின்றார்.. 

அதற்கான முதற்கல் இது.. 

தெற்கே மலையில் இருந்து பெயர்த்துக் கொண்டு வருகின்றார்கள்..

நிறைந்த மாலைகளுடன்
மஞ்சளும் குங்குமமும் சந்தனமும் அப்பிக் கிடக்கின்றது..

வழி நெடுக கூற்றத்தின் பல ஊர்களிலும் மரியாதை செய்திருக்கின்றார்கள்..

மணற்சாலையில் ஆல மரங்களும் வேப்ப மரங்களும் நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன.. 

நெடுவழியில் நிழலைக் கண்டதும் - கல் ஏற்றப் பட்ட வண்டியை நகர்த்திக் கொண்டு வரும் யானைகளுக்குக் கொண்டாட்டம்..

இன்னும் ஐந்து கல் தொலைவு தான் தஞ்சாவூருக்கு..  

சிறு பொழுது ஓய்வுக்குப் பின் ஒரே மூச்சாக தஞ்சைக்குச் சென்று விடலாம் என்று திட்டமிட்ட கல் தச்சர்கள் தலைமை சிற்பியாரிடம பேசுகின்றனர்.. ஒப்புதல் கிடைத்ததும் மகிழ்ச்சி.. ஆரவாரம்.. யானைகள் பிளிறின.. அப்போது அந்தப் பாறைக்குள்ளிருந்தும் பிளிறல் சத்தம் கேட்டதை  கவனித்தார் எவரும் இல்லை..

காளாபிடாரி கைத்தலப் பூசல் நங்கையாகிய மாகாளி அம்மன் ஏக வீரியாய்க் குடியிருக்கும் வல்லத்தரசின் மக்கள் நீரும் மோரும் கூழும் கொடுத்து உபசரித்த வேளையில் பெரும் பாறையின் உள்ளிருந்த ஓங்காரம் ஏக வீரி அம்மனுக்கு அருகிலேயே இருப்பதற்குத் தீர்மானித்தது..

இருந்து இளைப்பாறிய அனைவரும் எழுந்து நடந்தபோது பாறை ஏற்றப்பட்டிருந்த வண்டி மட்டும் அசைய மறுத்தது.. திறல் காட்டிப் பிளிறிய யானைகள் முனகுதற்கும் மொழியின்றி சோர்ந்து போயின..

செய்தி அரண்மனைக்குச் சென்று சேர்ந்தது..

மன்னனின் முகத்தில் புன்னகை..

"அங்ஙனமாயின், நம்முடைய காரியம் தடை இன்றி நிறைவேறுதற்குக் கணபதியார்  திருமேனியை
அக்கல்லில் வடித்து களைப்பாற்றிய மக்களுக்கே காணிக்கையாய் அளித்திடுக!.. "

மக்களிடையே மீண்டும் மகிழ்ச்சி ஆரவாரம்..

தஞ்சை மாநகரை அடுத்துள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில் பற்றி இப்படியான செவிவழிச் செய்தி ஒன்று உண்டு..

அதெல்லாம் இல்லை.. என, வேறொன்றும் சொல்லப்படுகின்றது..

அது நாளைக்கு!..

சிறப்புடைய இக்கோயிலுக்கு  
நேற்று முன்தினம்
ஞாயிறு ஆனி 24 அன்று (9/7) அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நிகழ்ந்தது..

 நன்றி விக்கி

மேல் விவரங்களும் படங்களும் நாளைய பதிவில்..

ஓம் கம் கணபதயே நம:
***

8 கருத்துகள்:

  1. விக்ன விநாயக பாத நமஸ்தே....

    பதிலளிநீக்கு
  2. அற்புத கீர்த்தி வேண்டின்
    ஆனந்த வாழ்க்கை வேண்டின்

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கோயில் உருவான கதை... சிறப்பு. எனக்கு மிகவும் பிடித்த கோயில். சில முறை சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பிள்ளையார்பட்டி உருவான செவிவழி செய்தி அறிந்து கொண்டேன். படங்கள் நன்றாக இருக்கிறது. கணபதியை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. கோயில் உருவான கதை நன்று. ஒரு முறை பிள்ளையார்ப்பட்டி சென்றிருக்கிறேன். கோயில் ரொம்பப் பிடித்திருந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
  6. புதிய தகவல்!. கணேசர் அழகு__/\__ __/\__

    பதிலளிநீக்கு
  7. இது செட்டி நாட்டுப் பிள்ளையார்பட்டிக் கோயில் தானா? இந்தத் தகவல்கள் எல்லாம் புதிதாக இருக்கின்றன. செட்டி நாட்டுப் பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் முற்காலப் பாண்டியர் காலத்துக் குடவரைக் கோயில் எனக் கேள்விப் பட்டிருக்கேன். இந்தக் கோயிலும் அதே பெயரில் உள்ளதா?

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..